Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil 3 Mark Question and Answers Unit 3 and 4

 10th Standard Tamil 3 Marks
Questions & Answers Unit 3, 4 | Kalvi Sri 
பத்தாம் வகுப்பு 3 மதிப்பெண் வினாக்கள் சிறுவினா 

10th Tamil Unit 3 and 4 | பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI 

10th Tamil unit 1 and 2 3 marks Question and Answers  | 10th Tamil unit 1,2 Short answers | 10th Tamil unit 1,2 3 marks  Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil unit 1,2 one marks 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST

 

இயல் - 3

1 .  ' கண்ணே கண்ணுறங்கு !
        காலையில் நீயெழும்பு  !
        மாமழை பெய்கையிலே !
        மாம்பூவே கண்ணுறங்கு !
        பாடினேன் தாலாட்டு !
        ஆடி ஆடி ஓய்ந்துறங்கு ! -- இத்தாலாட்டு பாடலில் அமைந்துள்ள   தொடர் வகைகளை  எழுதுக
.
 
1 . கண்ணே கண்ணுறங்கு -  விளித்தொடர்
2. காலையில்  நீயெழும்பு -   வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
3. மாமலை பெய்கையிலே -  உரிச்சொல் தொடர்
4. மாம்பூவே கண்ணுறங்கு -  விளித்தொடர்
5.  பாடினேன் தாலாட்டு - வினைமுற்று தொடர்
6. ஆடி ஆடி ஓய்ந்துறங்கு -  அடுக்குத்தொடர்
 

2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?
முல்லை நிலம்
காடும் காடு சார்ந்த பகுதி
உணவுப் பொருட்கள் : வரகு ,  சாமை ,  தினை , பால் ,  நெய் போன்றவை
மருத நிலம் : 
வயலும் வயல் சார்ந்த இடமும்
உணவுப் பொருட்கள் : செந்நெல் ,  வெண்ணெல்
 
 
3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்காக  வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் .
  • திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து  அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது .
  • இப்படியாகக் காலமாற்றம் ,   தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கருத்துகளை  எழுதுக.
  • அமரும் திண்ணை இல்லாமை :
  • இன்று  அறிமுகமில்லாத  புதியவர்களை விருந்தினராக  ஏற்பது இல்லை .
  • இன்று  வீட்டின் முன் உட்காருவதற்கு திண்ணை வைத்து  கட்டுவதில்லை .
  • இருப்பினும் திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை       அழைத்து அன்போடு விருந்தளிப்பது சில இடங்களில் காணமுடிகிறது . 
  • காலமாற்றத்தால்  இன்று   திருவிழாக்கள், பண்டிகை நாட்கள்       போன்றவற்றிற்கு சில இடங்களில்  விருந்தினர்களை  வரவேற்று   விருந்தளிப்பது  முறையாக உள்ளது .
  • திருமணம், சுபகாரியங்கள்  போன்றவற்றிற்கு  விருந்தினர்களை அழைத்து அன்போடு  விருந்தளித்து  மகிழ்ச்சிப்படுத்தும்  பழக்கம்  தற்போது காணப்படுகிறது .

4.  கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை  எவ்வாறு காட்டுகிறது ?
1. ஆற்றுப்படுத்துதல் :
  ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலே நாடி எதிர்வரும் கூத்தனே அழைத்து ,  இவ்விடத்தை சென்று என்னவெல்லாம் பெற்று வருகின்றோம் .  நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
2.  பயணம் செல்லுதல் - சிற்றூர் :
       பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள் ; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச்  சுற்றத்தாரோடு அணிந்து கொள்ளுங்கள் ;  சிவந்த பூக்களைக் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள் ; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றுரை அடையுங்கள்.
நன்னனின் கூத்தர்கள்  எனக் கூறுதல் :
  பகைவரைப் பெறாமல்  போர் செய்யும் வலிய முயற்சியும்  மானமும் வெற்றியும் உடைய ' நன்னனின் கூத்தர்கள் '  என்று சொல்லுங்கள் .
வீட்டிற்குள் நுழைதல் :
நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள் ;  உறவினர் போலவே   அவர்கள் உங்களுடன் பழகுவர்.
இனிய சொற்கள் :
    நீண்ட  வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர்.
உணவு :
   " நெய்யில் வந்த மாமிசப் பொரியலையும்  தினைச் சோற்றையும் உணவாக பெறுவீர்கள் " .
 

5. வேலொடு நின்றான் இடுஎன்றது               
போலும்
கோலொடு நின்றான் இரவு . - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக
.  
இக்குறளில் உவமைஅணி அமைந்துள்ளது.
அணி:
ஒரு பொருளை ஒப்புமைப்படுத்தும் போது ,   உவமை தனித்தொடராகவும்  உவமேயம் தனித் தொடராகவும் அமைந்து , இடையில் உவமஉருபு  வெளிப்படையாக வருவது  உவமை அணி ஆகும்.
குறள் விளக்கம்:
வேலைக் கையில் ஏந்தி நின்று வழிப்பறி செய்யும் கள்வர்களைப் போல,  ஆட்சியில் கொடுங்கோலைக் கையிலேந்தி  குடிமக்களிடம் வரி விதித்து  பொருள் பெறுவதாகும் . 
அணிப் பொருத்தம்:
வேலொடு நின்றான் இடுஎன்றது  - உவமை
கோலொடு நின்றான் இரவு -  உவமேயம் (  பொருள் )
போலும் -  உவம உருபு
இக்குறளில் உவமை தனித்தொடராகும் , உவமேயம் தனித் தொடராகும்  அமைந்து ,  போலும் என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளதால்  இது  உவமை அணி ஆயிற்று .
 

இயல் - 4

 
1. "மாளாது காதல்  நோயாளன் போல் "
என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக
.
  • நோயாளி  மருத்துவரை நேசித்தல் :
  • மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக்  கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை  நேசிப்பார் .
  • இறையருள் வேண்டுதல் :
  • வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும்  அன்னையே ! உனது விளையாட்டால் நீங்கள் துன்பத்தை எனக்கு தந்தாலும் உன் அடியவனாகிய நான்  உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்  என்று  குலசேகர ஆழ்வார்  வேண்டுகிறார் .
 
2.  இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த   சிந்தனைகளை  முன்வைத்து எழுதுக.
 அறிவியல்  கண்டுபிடிப்புகள்  இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துகின்றன . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து தொழிற்சாலைகள்  அனைத்திலும் அறிவியல் கண்டுபிடிப்பு  முக்கிய பங்கு வகிக்கிறது.
அறிவியல் கண்டுபிடிப்பு  அனைத்துத் துறைகளிலும்   வளர்ந்து கொண்டே இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு  மனிதர்கள் செய்யமுடியாத  வேலைகளைச் செய்து முடிக்கிறது.
 பெரு நிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன.
நாம் பயணிக்கும் ஊர்திகளை செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்க வேண்டி இருக்கும்
எதிர்காலத்தில் மனித இனத்தை அழிவிலிருந்து காக்க ஆய்வுகள் நடைபெறுகின்றன.
 இப்போது உலகில்  இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பயன்பாட்டில் இருக்கின்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ,  கோவில் ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தரும் .
 
3.  மனிதர்களின் மூளையைப் போன்றது . செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள் , மனிதனைப் போலவே பேச ,  எழுத , சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது . இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற  நன்மைகளைப் பற்றி  அறிவியல் இதழ் ஒன்றுக்கு ' எதிர்காலத் தொழில்நுட்பம் '  என்ற தலைப்பில் எழுதுக.
 
எதிர்காலத் தொழில்நுட்பம்:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் எனலாம் . மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.
எதிர்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது ,  வயதானவர்களுக்கு   உற்ற தோழனாய் பேணுவது போன்ற செயல்களில் " ரோபோ "  பயன்படுவதை நாம் பார்க்க போகிறோம்.
செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால்   மனிதர்களால் செய்ய இயலாத செயல்களைச் செய்ய முடியும்.
விடுதிகள் ,  வங்கிகள் ,  அலுவலகங்களில்  தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளான உரையாடுவது ,   ஆலோசனை வழங்குவது , பயண ஏற்பாடு செய்து தருவது ,  தண்ணீர் கொண்டுவருவது , உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது  போன்ற செயல்களை எதிர்காலத்தில் ரோபோக்கள் அளிக்கும்.
கவிதைகள், கட்டுரைகள், கதைகள் விதவிதமான எழுத்து  நடைகள்  கற்றுக் கொண்டு  மனிதர்களிடம்  போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.
மனித இனத்தை தீங்குகளிலிருந்து காப்பாற்றவும் ,  உடல் நலத்தைப் பேணவும் ,  கொடிய நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் , பட்டறிவு மிக்க மருத்துவரைப் போல செயற்கை நுண்ணறிவைப்  பயன்படுத்தும் ஆராய்ச்சியும்  நடந்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவின் நன்மை தீமைகள் :
மனித கண்டுபிடிப்புகள் அனைத்திலும் நன்மை தீமை இரண்டும் உள்ளன . எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு  நன்மை தருவதாகவே வடிவமைக்கப்பட வேண்டும்.
 
4.   நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது . வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது ;  தந்தை என்னிடம், "  இலச்சுமி கூப்பிடுகிறாள் ,  போய்ப்  பார் "  என்றார் . " இதோ சென்றுவிட்டேன் "  என்றவாறு அங்குச் சென்றேன்.  துள்ளிய குட்டியைத்  தடவிக்கொடுத்து , "  என்னடா விளையாட வேண்டுமா ?"  கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.  என் தங்கை அங்கே வந்தாள் . அவளிடம் , "  இவனும் விளையாடுங்கள் "  என்று கூறினேன்.  அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமி  தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பதியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக
.
 
1 .நிறைத்திருந்தது ( நிறைந்தது ) - கால வழுவமைதி
2. வாழைத் தோப்பு (வாழைத் தோட்டம்) - மரபு வழுவமைதி
3. குட்டியுடன் நின்றிருந்த மாடு - கன்றுடன் நின்றிருந்த மாடு  - திணை வழுவமைதி
4. இலச்சுமி கூப்பிடுகிறாள் ( இலச்சுமி கூப்பிடுகிறது) ( மாடு ) - திணை வழுவமைதி
5. இதோ சென்று விட்டேன் (சென்று விடுகிறேன் )  - கால வழுவமைதி
6.துள்ளிய குட்டியை (கன்றை) -  மரபு வழுவமைதி
7. என்னடா விளையாட வேண்டுமா ? ( என்ன விளையாட வேண்டுமா)  - திணை வழுவமைதி
8. அவனை அவிழ்த்து விட்டேன் (அதனை )- பால் வழுவமைதி
9. நீயும் இவனும் (நீயும் அவனும்) - இட வழுவமைதி
10. நீரைக் குடித்தாள் (நீரைக் குடித்தது ) - திணை வழுவமைதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்