Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil 3 Mark Question and Answers Unit 5

 10th Standard Tamil 
3 Marks Question & Answers 
Unit 5 | Kalvi Sri  
பத்தாம் வகுப்பு 3 மதிப்பெண் 
வினாக்கள் சிறுவினா 

10th Tamil 3 Mark Question and Answers Unit 5 | பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI 

10th Tamil 3 Mark Question and Answers Unit 5  | 10th Tamil 3 Mark Question and Answers Unit 5 | 10th Tamil 3 Mark Question and Answers Unit 5  Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil 3 Mark Question and Answers Unit 5 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | kalvi sri | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST

 

இயல் - 5 சிறுவினா 

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன் ? விளக்கம் தருக.

1. மன்னன் தவறு செய்தல் :

  • பாண்டிய மன்னன் குசேல பாண்டியன் ,  புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை தலையை அசைக்காமல் அவமதித்தான் .
  • அதனால் இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுகிறார் .

 

2.  இறைவன் வெளியேறுதல் :

மன்னனைத்   திருத்த இறைவன் கடம்ப வனத்தை விட்டு வெளியேறி  வைகை ஆற்றில்  கோவில் அமைத்து  அங்கே அமர்ந்தார் .

 

3.  மன்னன்  தவறை  அறிதல் :

  • தன் தவறை அறிந்த மன்னன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான் .
  • இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர வேறு எதுவுமில்லை என்றார்.

 

4. புலவருக்குச் சிறப்பு  :

  • மன்னன் அரண்மனைத் திரும்பி ,  இடைக்காடனார்க்கு  மங்கல ஒப்பனை செய்து , பொன் இருக்கையில் அமர்த்தி ,  தன் குற்றத்தை பொறுத்தருளுமாறு வேண்டி  , புலவர்களுக்கு சிறப்பு செய்தார் .
  • புலவர்களும் கோபத் தீ தணிந்தது " என்றனர் .

 

2 . உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர்  பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார் . அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை  எவ்வகையில்  எடுத்துரைப்பீர்கள் ?

  1.  இளமையில் கல்வி  கற்க வேண்டும் . படிப்பதற்கு உரிய காலம்  இதுவே ஆகும்.
  2. இளம் வயதில் பள்ளிக்குச் சென்று   படிப்பது  வருங்காலத்தில்  பெரிய வேலை வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும்.
  3. கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு   என்பதால்   கல்வி கற்கும் காலத்தில்   கற்றுக்கொள்ள வேண்டும்.
  4. அதனால் சிறிதும் யோசிக்காமல்  பள்ளிக்குச் செல் .  இப்பொழுது வேலைக்குச்  செல்வதால்  பிற்காலத்தில் படிக்கவில்லையே என்று வருத்தப்பட நேரிடும் .
  5. உன் பெற்றோர்களிடம்  உன் மன வருத்தத்தை சொல்லி  புரிய வை .  நானும் சொல்கிறேன் . 
  6. நீ  படிப்பில் கவனத்தைக் காட்டு ;  நன்கு படித்து  முன்னேறு ;   என்னால் முடிந்த உதவிகளை உனக்கு செய்கிறேன் . கவலைப்படாதே .

 

3.          ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

. நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு( translation )  என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது ;  ஆனால்  ஒருவர்  பேசும்போதே மொழிபெயர்ப்பது  விளக்குவது ( Interpreting ) என்று சொல்லப்படுகிறது . .நா . அவையில் ஒருவர் பேசுவதை  மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத்  தெரியாதபடி வேறு  இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிேகட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிேகட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

வினாக்கள்:

1. .நா.   அவையில் என்ன வசதி செய்யப்பட்டிருக்கிறது ?

2. மொழிபெயர்ப்பு என்பது என்ன ?

3.  மொழிபெயர்ப்பு என்பதன் ஆங்கிலச்  சொல் என்ன ?

4.'Interpreting '  என்பது என்ன ?

5. .நா .அவையில்  மொழிபெயர்ப்பாளர்  எங்கு  இருப்பார் ?

6. ' Head phone '  என்பதன் தமிழ் சொல் என்ன ?

7. மொழிபெயர்ப்பாளர்கள்  காதணி கேட் பியல் வழியே கேட்டு இதன் வழியே பேசுவார்கள் ?

8. .நா. பார்வையாளர்கள்  எவ்வாறு தங்கள் மொழியைப் புரிந்து கொள்வர் ?

 

 4. முயற்சி திருவினையாக்கும்   முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

ஆற்றுநீர்ப் பொருள்கோள் இப்பாடலில் அமைந்துள்ளது .

ஆற்றுநீர்ப் பொருள்கோள்- விளக்கம் :

ஆற்றில் நீர் தொடர்ச்சியாக ஓடுவதைப் போல ,  பாடலின் பொருள் தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள்கொள்ளும் வகையில் அமைதல்  ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும் .

பாடலின் பொருள் :

      முயற்சி ஒருவருக்கு செல்வத்தை உண்டாக்கும் ;  முயற்சி இல்லாமை வறுமையை உண்டாக்கும் வறுமையை உண்டாக்கிவிடும் .

பொருத்தம் :

     ஆற்று நீர் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருப்பதைப் போல இப்பாடல்

முயற்சி செல்வத்தை தரும் ;  முயற்சியின்மை  வறுமையை கொடுத்து விடும்  என  தொடக்கம் முதல்  முடிவு  வரை தொடர்ச்சியாக கூறப்பட்டுள்ளதால் இது ஆற்றுநீர்ப் பொருள்கோள் என ஆயிற்று.

கருத்துரையிடுக

0 கருத்துகள்