10th
Standard Tamil
3 Marks Question & Answers
Unit 6 | Kalvi Sri
பத்தாம் வகுப்பு
3 மதிப்பெண் சிறுவினா வினாக்கள்
10th Tamil 3 Mark Question and Answers Unit 6 | 10th Tamil 3 Mark Question and Answers Unit 6 | 10th Tamil 3 Mark Question and Answers Unit 6 Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil 3 Mark Question and Answers Unit 6 10th standard Tamil unit 6 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | kalvi sri | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST
இயல் – 6 சிறுவினா
1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
- வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயம் :
- திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின .
- இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவட்டங்கள் ஆடின.
- பசும்பொன்னென ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடியது .
- பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்டவடிவமான சுட்டி பதிந்தாடியது.
- கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் கொலைகளும் அசைந்தாடின.
- உச்சிக் கொண்டையும் அதிலுள்ள முத்துக்களும் ஆடின .
- வைத்தியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகனே!
- இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட , செங்கீரை ஆடி அருளினான் எனக் குமரகுருபரர் வர்ணித்துள்ளார்.
2.
நவீன கவிதையில் வெளிப்படும் உண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடல்களை வெளிப்படுத்துகிறது. ஒப்பிட்டு எழுதுக.
நவீன கவிதை :
இப்பாடலில் ' பூ ' என்பதை மலரோடு ஒப்பிடப்பட்டுள்ளது .
நாட்டுப்புற பாடல் :
இப்பாடலில் ' பூ ' என்பதை மாரி தெய்வத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது .
நவீன கவிதை :
- பூவை இறுக்கி முடிச்சிட்டால் , காம்புகளின் கழுத்து முறியும் .
- தளரப் பிணைத்தால் , மலர்கள் தரையில் நழுவும் .
- வாசலில் மரணம் நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும் .
- இதனை எவ்வாறு தொடுப்பது ....
- நாட்டுப்புறப்பாடல் :
- மாரியாகிய பெண் தெய்வத்திற்கு கையாலே பூவெடுத்தால் , காம்பழுகிப் போய்விடும் .
- விரலாலே பூவெடுத்தால் , வெம்பி விடும் .
- எனவே , மாரி தெய்வத்திற்கு ' தங்கத் துரட்டி ' கொண்டு பூ எடுத்தார் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார் .
3. " கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது ; மலைப்பகுதியில் மலைப் பயிர்களும் நிலப்பகுதியில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன ." - காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் , பண்டைத் தமிழரின் திணை நிலைத் தொழில்கள் இன்றளவும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
1. 1. திணை - நெய்தல்
2. தொழில்கள் - மீன்பிடித்தல் , உப்பு காய்ச்சுதல்
3. இன்றைய வளர்ச்சி :
மீன் பிடித்தல் இன்றளவும் சிறப்பாக நடைபெறுகிறது . மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன . இதன்மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது . பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .
கடற்கரையில் இன்றளவும் உப்பு காச்சுதல் நடைபெறுகிறது .
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே " ,
" உப்பிட்டவரை உள்ளளவும் நினை"
எனவே அனைத்து இடங்களிலும் உப்பு விற்பனை செய்யப்படுகிறது .
உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
1. திணை - குறிஞ்சி
2. தொழில்கள் : மலைநெல் , தினை , தேனெடுத்தல் , கிழங்கு அகழ்தல்.
3. இன்றைய வளர்ச்சி :
மலைநெல் , தினை உணவிற்காகப் பயன்படுத்தப்படுகிறது .
தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது . பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது .
கிழங்கு வகைகள் உணவாகப் பயன்படுகிறது . அதிலிருந்து மாவு , ஜவ்வரிசி போன்றவை தயாரித்து சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது .
இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிகிறது .
1.திணை - முல்லை
2. உணவு / தொழில்கள் - வரகு , சாமை, ஏறுதழுவுதல் , நிரை மேய்த்தல்
3. இன்றைய வளர்ச்சி :
வரகு , சாமை முதலியன உணவாகப் பயன்படுகின்றன .
ஏறுதழுவுதல் இன்றளவும் மக்களிடையே காணப்படுகிறது .
நிரை மேய்த்தல் உணவு , வியாபாரம் , ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்படுகிறது .
1.திணை - மருதம்
2. உணவு / தொழில்கள் - செந்நெல் , வெண்ணெல் , நெல்லரிதல் , கலை பறித்தல்
3. இன்றைய வளர்ச்சி :
செந்நெல் , வெண்ணெல் உணவுக்காக , வியாபாரத்திற்காக பயிரிடப்படுகிறது .
நெல்லரிதல் , களை பறித்தல் வயல்களில் உணவுக்காகவும் , விற்பனைக்காகவும் தொழில் செய்யப்படுகிறது .
4.
படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
- வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது .
- இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் .
- இந்தக் கலை , வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறு துணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது .
- இவ்வாட்டத்தில் 8 முதல் 13 கலைஞர்கள் கலந்து கொண்டு , சடங்கு சார்பாக ஆடப்படுகின்றது .
2. கரகச் சொம்பின் அமைப்பை விவரி.
- கரகச் சொம்பின் அடிபாகத்தை உட்புறமாகத் தட்டி , ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர் .
- தலையில் சொம்பு நிற்கும் அளவு எடைக்கு பச்சரிசி அல்லது மணலை நிரப்புகின்றனர் .
- கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில் , கிளி பொம்மை தீய மூங்கில் குச்சியை செருகி வைத்து ஆடுகின்றனர் .
- இதற்கு நையாண்டி மேளம் , நாகசுரம் , தவில் , பம்பை போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன .
- இது ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கலை ஆகும்.
திருக்குறள்
- சிறுவினா
- தொழில் செய்வதற்குத் தேவையான கருவி , அதற்கு ஏற்ற காலம் , செயலின் தன்மை , செய்யும் முறை அரிய செயல்களைச் செய்தல் வேண்டும்.
- மனவலிமை , குடிகளைக் காத்தல் , ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல் , விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைதல் வேண்டும்.
- இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன் , மட்டமான சூழ்ச்சிகள் நிற்க இயலாது.
- ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் , உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
- எனவே இவ்வாறு நன்மை , தீமைகளை அறிந்து சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்களை பின்பற்ற வேண்டும் .
2.
பலரிடம் உதவி
பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?
அன்பு இல்லாமலும்
பொருந்திய துணை இல்லாமலும் ,
வலிமை இல்லாமலும் இருந்தால்
அவர் எப்படிப்பட்ட பகைவரின் வலிமையையும் வெல்லமுடியாது .
மனத்தில் துணிவு இல்லாதவராய் ,
அறிய வேண்டியவற்றை அறியாதவராய் ,
பொருந்தும் பண்பு இல்லாதவராய் ,
பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால்
எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.
0 கருத்துகள்