Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil 3 Mark Question and Answers Unit 8 and 9

10th Standard Tamil 
3 Marks Question & Answers 
Unit 8 and 9 | Kalvi Sri  
பத்தாம் வகுப்பு 
மதிப்பெண் சிறுவினா வினாக்கள் 
 

10TH STANARD 3 MARKS QUESTIONS & ANSWERS Unit 8 and 9  பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI | சிறுவினா

10th Tamil 3 Mark Question and Answers Unit 8 and 9 | பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI | New Text Book 

10th Tamil 3 Mark Question and Answers Unit 8 and 9 | 10th Tamil 3 Mark Question and Answers Unit 8, 9 | 10th Tamil 3 Mark Question and Answers Unit 8, 9 Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil 3 Mark Question and Answers Unit 8, 9 10th standard Tamil unit 7, 8 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | kalvi sri | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST

இயல் -8

1.  சங்க இலக்கியங்கள் காட்டும்  அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே   என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக .

சங்க இலக்கிய  அறங்கள்  இயல்பானவை  "  கவிதை வாழ்க்கையில் திறனாய்வு " என்று திறனாய்வாளர் ஆர்னால்டு  கூறுகிறார் .  அவை இன்றைக்கும் சூழலுக்கு ஏற்ப மிகவும் தேவையே .

1.  வணிக நோக்கம் கொள்ளாமை :

அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது .  இப்பிறவியில் அறம் செய்தால் மறுபிறவியில்  அதன் பயனைப் பெறலாம் என்ற எண்ணம்  கூடாது . அறம் செய்வதே மேன்மை தரும்  என சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது .

2. அரசியல் அறம்  :

அரசன் செங்கோல் போன்ற நேரிய ஆட்சியை  மேற்கொள்ள வேண்டும் . நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவு பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது அரசனின் கடமையாகச்  சொல்லப்பட்டது .

3. அவையம் :

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத்  துணைபுரிந்தன . இதில் மதுரை அவையம்  துலாக்கோல் போல 

  நடுநிலை மிக்கது என்கிறது .

4. போர் அறம் :

தமிழர் ,  போரில் மழை நீரை பின்பற்றினர் . வீரமற்றோர்,  புறமுதுகிட்டோர் ,  சிறார் ,  முதியோர் ஆக் இவரை எதிர்த்துப் போர் செய்யாமை ஆகும் .

5. கொடை :

அரியன என்று கருதாது ,  தயங்காது கொடுத்தலும்  ஈதலால் வரும் இழப்புக்கு  வருந்தாமையும் நாள்தோறும் கொடுத்தலும் கொடைப் பொருள்களாகப் பேசப்படுகின்றன .

6.  உதவி :

  • பிறருக்கு உதவி செய்வதை சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன .
  • பிறரைப் பற்றிச்  சிந்திக்கும் நிலை .
  • " உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் "  என்கிறார் நல்வேட்டனார் .

7.  வாய்மை :

  • வாய்மை சிறந்த அறமாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன .
  • " பிழையா நன்மொழி " என நற்றிணை குறிப்பிடுகிறது .
  • நிலம் புடை பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன .
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கு அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும்  உதவும் விதிமுறைகள் எனலாம் .


2.    ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக .

1 . அடிகள் தோறும் நான்கு சீர்களைய் பெற்று வரும்.

2 .  இயற்சீர் ( மாச்சீர்,   விளச்சீர்)  பயின்று வரும் .பிற சீரும் வரும் . ஆனால் வஞ்சியுரிச்சீர் வரா.

3. ஆசிரியர் தலைகள் பயின்று வரும் . பிற தலைகள் கலந்துவரும் .

4. மூன்றடி சிற்றெல்லையும் , பாடும் புலவரின் மனக் கருத்திற்கேற்ப பல அடிகளை பெற்றும் வரும் .

5. அகவலோசை பெற்று வரும் .

6. ஈற்றடி ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு .


3. ' சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம் ' என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில்பேசுவதற்காக உரைக் குறிப்பு ஒன்றை உருவாக்குக . ( குறிப்பு -  சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும்  ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ) 

சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்

உரைக்குறிப்பு :

 சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதே மனிதன்  நோயின்றி வாழ்வதற்கு  சிறந்த வழியாகும் .

இன்றைய உலகில்  நிலம் ,  நீர் ,  காற்று ,  ஒலி  என அனைத்தும் மாசுபட்டு காணப்படுகிறது .   இவை அனைத்தும் மனிதர்களுக்கு தீமை உண்டாக்கும் .

நெகிழி எனப்படும்  பிளாஸ்டிக்கினால்  நிலம் மாசடைகிறது . மேலும் பூச்சிக்கொல்லி ,  செயற்கை உரங்கள்  போன்றவை  மண்ணின் தன்மையை மாசடையச் செய்கிறது .

தொழிற்சாலை கழிவுகளால் நீர் மாசடைகிறது .

வாகனங்கள் ,   தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகள் ,  நெகிழிப் பொருட்களை எரிப்பதால் போன்றவற்றால் காற்று மாசடைகிறது .

வாகனங்கள் எழுப்பும் ஒலிகள்  இரைச்சலாக மாறி  மனிதர்களுக்கு தீங்கிழைக்கிறது .

இவை அனைத்தையும்  தடுப்பதற்காக   மத்திய அரசும் மாநில அரசும்  பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது .

இவை அனைத்திற்கும் காரணம் மனிதர்களின் அறியாமையே .  அறியாமையை நீக்கி  ஒவ்வொருவரின் உள்ளத்திலும்  விழிப்புடன் செயல்பட்டால்   சுற்றுச்சூழலை பாதுகாக்க இயலும் .


4. வாளித் தண்ணீர் ,  சாயக்குவளை ,  கந்தைத் துணி ,  கட்டைத் தூரிகை -  இச்சொற்களை தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க .

வீட்டின் சுவர்கள் ,  ஜன்னல்கள்  போன்றவை சுத்தம் செய்ய  வாளித் தண்ணீர் கொண்டு  சுத்தம் செய்து  ,  கந்தைத் துணியால்  அவற்றைத்  துடைத்துச் சுத்தம் செய்ய  வேண்டும் .

பிறகு  சாயக்குவளையிலுள்ள சாயத்தைக்  கட்டை தூரிகைக் கொண்டு   சாயம் பூசுவது   வீட்டைப் புதிதாக்கியது போல்  மிகவும்   அழகாக இருக்கும்


இயல்  -9   சிறுவினா 

1 . " சித்தாளின்  மனச் சுமைகள்

செங்கற்கள் அறியாது "  -  இடஞ்சுட்டிப் பொருள் தருக .

இடம்  : 

நாகூர் ரூமி  எழுதிய " சித்தாளு "  என்ற கவிதையில்  இடம்பெற்றுள்ளது .

பொருள் :

சித்தாளின் வாழ்வில்  பல துயரங்கள் நிகழ்ந்தாலும் ,  அவளின் மனச் சுமைகளைத்  தலையில் சுமக்கும் செங்கற்கள் அறியாது .

விளக்கம் :

அடுத்த வேளை உணவுக்காக  செங்கற்களைச் சுமக்கும்  சித்தாளுக்கு மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும் .   பல இன்னல்களுக்கு  நடுவே ,  அவளின் மனச் சுமைகளை  தலையில் பாரமாகச் சுமக்கும் செங்கற்கள் அறியாது  எனக்  கவிஞர் குறிப்பிடுகிறார் .


2. ஜெயகாந்தன்  தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக்  குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார் . இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல்  ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதைமாந்தர் வாயிலாக விளக்குக .

 ஜெயகாந்தனின் " தர்க்கத்திற்கு அப்பால் "  கதையில்   கதையின் நாயகர் தம் வெற்றியை கொண்டாட   ஒரு வெள்ளி ரூபாயை எப்படி செலவு செய்யலாம் என யோசிக்கிறார் .

ஒரு ரூபாயின் 16  அனாவில் , 

12 அணாவை பில்லுக்கு வைத்துவிட்டு ,

2 அணாவுக்கு காபி குடித்து ,

மீதி 2  அனாவை  குறிப்பு பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்கிறார் .

பில்லுக்கு வைத்து 12 அணாவில்  பணம் செய்ய வழியில்லாமல்   இரயில் கட்டணம்13 அணா என்றதால்  வேறுவழியின்றி  பிச்சைக்காரனுக்கு போட்ட 2 அணாவிலிருந்து 1 அனாவை   எடுத்துக் கொள்ளலாம் என்று   யோசித்தார் .

பிச்சைக்காரனிடம் திருடுவதா  !! என்ற குற்ற உணர்வுடன் 1 அணாவைப்  போட்டு 2  அணாவை எடுக்கும்போது  "  பிச்சைக்காரனின் குருட்டு விழிகள்  வெறிக்க , வாயால் சபிப்பது போல்  ,  இதுதான் தர்மமா ?  குருடனை ஏமாற்றாதே ! நரகத்துக்குத்தான் போவே "  என்கிறார் .

கையிலிருந்த  1அணாவையும்   போட்டுவிட்டு ,  தர்மம் செய்பவன் "  தனக்குள்ளே எப்போதும் தர்க்கம் செய்யும் "  மனப்பான்மையோடு இருக்கிறான்  என்ற தோல்வியை ஏற்றுக்கொண்டு   நடைப்பயணம் மேற்கொள்கிறார் .

சாதாரண மனிதனின் இயல்பான உணர்வுகளை   இக் கதை மாந்தர் மூலம் ஜெயகாந்தன்  விளக்குவதை   அசோகமித்திரன்  குறிப்பிடுகிறார் .


3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையின் கூறுகிறார் ?

  • கருணையின் உயிர் பிழைக்கும் வழி அறியேன் .
  • உடலின்  தன்மையை அறியேன் .
  • உடலுக்கேற்ற உணவைத்தேடி  கொணரும் வழி  வகைகளை அறியேன் .
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்  என்று கருணையன் கூறுகிறார் .


4. கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு  தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக .

தற்குறிப்பேற்ற அணி :

தன் + குறிப்பு +  ஏற்றம் +அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன்  குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும் .

 எ.கா :

' பெருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்காடு

' விரல் என்பதுபோல் மறித்துக்கை  காட்ட '

பாடலின் பொருள் :

    கோட்டை  மதில்மேல் இருந்த கொடியானது  வரவேண்டாம் என தடுப்பது போல , காட்டியது என்பது பொருள்.

அணிப் பொருத்தம் :

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற பொழுது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன . ஆனால் , இளங்கோவடிகள்  கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி  அக்கொடிகள் கையசைத்து  ' இம் மதுரைக்குள்  வரவேண்டா '  என்று தெரிவிப்பது போலக்   காற்றில் அசைவதாகத் தன் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார் .

இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்