Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th QUESTION ANSWERS கற்கண்டு எழுத்து, சொல் - வினாக்கள்

 10 STD QUESTION ANSWERS  
 10 ஆம் வகுப்பு கற்கண்டு - எழுத்து  , சொல் - வினாக்கள் | Kalvi Sri

இயல்  - 1              

1. இலக்கணம் என்பது  யாது ?
1.மொழியை தெளிவுற பேசவும்  எழுதவும் உதவுவது  இலக்கணம் எனப்படும் .
2. மொழியின் சிறப்புகளை அறியவும் துணை செய்கிறது . 

2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும் .அவை
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபடை
4. ஒற்றளபடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9.  மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

3. அளபெடை எதற்குப்  பயன்படுகிறது ?
   பேச்சு வழக்கில்  சொற்களை நீட்டி ஒலித்துப் பேசும்போது  உணர்வுக்கும் இனிய  ஓசைக்கும்  அளபெடுத்தல் பயன்படுகிறது .
அளபெடுத்தல் -  நீண்டு ஒலித்தல்
எ.கா :அம்மாஅஅ , தம்பீஇ

4. உயிரளபெடை என்றால் என்ன ?
  செய்யுளில் ஓசை குறையும் பொழுது , அதனை நிறைவு செய்ய , மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும்  தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும் . அதைக் குறிக்க நெட்டெழுத்துக்களின் இனமான குற்றெழுத்துகள்  அவற்றின் பின்னால் வரும் . இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும் .

5.  உயிரளபெடை எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? 
 உயிரளபெடை மூன்று வகைப்படும் .
1 . செய்யுளிசை அளபெடை ( அ ) இசைநிறை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3. சொல்லிசை அளபெடை

6. செய்யுளிசை அளபெடை ( அ ) இசைநிறை அளபெடை என்றால் என்ன ?
செய்யுளில் ஓசை குறையும் போது  அதனை நிறைவு செய்ய , நெட்டெழுத்துகள்  அளபெடுத்தலைச்  செய்யுளிசை அளபெடை  என்பர் .
எ.கா :  ஓஒதல் வேண்டும்
            உறாஅர்க்கு உறுநோய்
            நல்லபடாஅபறை

7 . இன்னிசை அளபெடை என்றால் என்ன ?
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய  ஓசைக்காக அளவெடுப்பது  இன்னிசை அளபெடை ஆகும் .
எ.கா  :  கெடுப்பதூஉம்  கெட்டார்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை .

8. சொல்லிசை அளபெடை என்றால் என்ன  ?
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும் .
எ .கா :
உரனசைஇ  உள்ளம் துணையாகச் சென்றார் 
வரனசைஇ   இன்னும் உளேன் .

9. அளபடை என்றால் என்ன ?
     செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்ய  மெய்யெழுத்துக்களான   - ங் ,ஞ் ,ண் ,ந் ,ம் ,ன் ,வ் ,ய் ,ல் ,ள் -  ஆகிய பத்தும் , ஃ என்னும்  ஆய்த எழுத்தும்  அளவெடுப்பது ஒற்றளபெடை ஆகும் .
எ.கா : எஃகிலங்கிய குஜராத் இன்னுயிர்
வெஃகுவார்க்கில்லை வீடு
                     சொல் 

10 .  சொல் என்றால் என்ன ?
  ஓர் எழுத்து தனித்து,  பழைய எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள்  தரும் வகையில் அமைவது  சொல் எனப்படும் .

11. மூவகை மொழிகள் யாவை ?
1. தனிமொழி
2. தொடர்மொழி
3. பொதுமொழி

12. தனிமொழி  என்பது என்ன ?
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது மொழி எனப்படும் .
எ.கா : பூ , தை , தீ , ஆ ( பசு )

13 . தொடர் மொழி என்பது என்ன ?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள்  தொடர்ந்து வந்து பொருள் தருவது  தொடர்மொழி ஆகும்  .
எ.கா :   கண்ணன் வந்தான் .
            மலர் பள்ளிக்குச் சென்றாள் .

14 . பொதுமொழி என்றால் என்ன ? 
          ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும்  அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து   தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது  பொதுமொழி எனப்படும் .
எ.கா :  எட்டு - 8  என்ற எண்ணைக் குறிக்கும் .இவையே 
எட்டு  -  எள் +து -  எள்ளை உண்  -  என்ற பொருளிலும் வருவதால் .
வேங்கை -   'வேங்கை'என்னும் மரத்தை குறிக்கும் .
வேங்கை -   'வேகின்ற கை ' பொருள் தரும் .
இரு பொருட்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொதுமொழி ஆகிறது .

15 .'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .
வேங்கை -   'வேங்கை'என்னும் மரத்தை குறிக்கும் .  -    தனிமொழி
வேங்கை -   'வேகின்ற கை ' பொருள் தரும் . - தொடர்மொழி
இரு பொருட்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொதுமொழி ஆகிறது .

16 .தொழிற்பெயர் என்றால் என்ன ? 
     ஒரு வினை அல்லது செயலைக்  குறிக்கும் பெயரானது  எண் , இடம் , காலம் , பால் ஆகியவற்றைக்  குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல்   வருவது தொழிற்பெயர் எனப்படும் .
எ.கா : ஈதல் , நடத்தல்

17. விகுதி பெற்ற தொழிற்பெயர்கள் என்றால் என்ன ?
        வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர்  ஆகும்.
வினையடி   -  விகுதி -  தொழிற்பெயர்
நட                   -  தல்         -  நடத்தல் 
வாழ்               - கை          -  வாழ்க்கை 
ஆள்                - அல்         -  ஆளல்
     
18 .தொழில் பெயர் என்றால் என்ன ?
    பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் எனப்படும் .
எ.கா :  நடவாமை , கொல்லாமை

19 .முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன ?
    விகுதி பெறாமல் வினைப் பகுதியேதொழிற்பெயராதல்  முதனிலைத் தொழிற்பெயர் ஆகும் .
எ.கா :  தட்டு , உரை  , அடி  -  இச் சொற்கள் முறையே  தட்டுதல் , உரைத்தல் , அடித்தல்  என்று பொருள்படும் போது  முதனிலைத் தொழிற்பெயர்கள் ஆகின்றன .

20 .முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன  ?
     விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்  முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்  .எ.கா :
தொழிற்பெயர்-  முதனிலைத் தொழிற்பெயர் -  முதனிலை திரிந்த                                                                                                                                      தொழிற்பெயர் 
கெடுதல்              -              கெடு                                       -         கேடு
சுடுதல்                  -               சுடு                                         -      சூடு

21 .வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?
      ஒரு வினைமுற்று  பெயரின் தன்மையை அடைந்து  வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு  பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும் .
அது தன்மை , முன்னிலை , படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும் .
எ.கா :  வந்தவர் அவர்தான் .
             பொறுத்தார் பூமி ஆள்வார் .

22 .தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு  யாவை ?
தொழிற்பெயர் :
1.  வினை பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும் .
2.  காலம் காட்டாது .
3. படர்க்கைக்கே உரியது  .
எ.கா : பாடுதல் , படித்தல் .
வினையாலனையும் பெயர் :
1. தொழிலைச் செய்யும் கருத்தாக குறிக்கும்  .
2.  காலம் காட்டும் . 
3 .மூவிடத்திற்கும் உரியது  .
எ.கா : பாடியவன் , படித்தவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்