10th Standard Tamil 3 Marks
Questions & Answers Unit 1, 2 | Kalvi Sri
பத்தாம் வகுப்பு 3 மதிப்பெண் வினாக்கள் சிறுவினா
10th Tamil unit 1 and 2 3 marks Question and Answers | 10th Tamil unit 1,2 Short answers | 10th Tamil unit 1,2 3 marks Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 1,2 one marks 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST
இயல் - 1
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழன்னையை அன்னை மொழியே! அழகான செந்தமிழே ! முன்னைக்கும் முன்னையான நறுங்கனியே ! கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் அரசாண்ட மண்ணுலகப் பேரரசே ! என்கிறார்.
பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெருமைக்குரியவளே ! பத்துப்பாட்டே ! எட்டுத்தொகையே ! பதினெண் கீழ்க்கணக்கே ! நிலைத்த சிலப்பதிகாரமே ! அழகான மணிமேகலையே! நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் எனக் குறிப்பிடுகின்றார்
2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ' . இது போல் இளம் பயிர் வகை வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
1. நாற்று : வயலில் நெல் நாற்று நட்டேன் .
2. கன்று : வயலில் மாங்கன்று வாங்கி வந்து நட்டேன் .
3.பிள்ளை : வயலில் தென்னம்பிள்ளை வாங்கி வந்து நட்டேன் .
4. மடலி : காட்டில் பனை மடலியைப் பார்த்தேன் .
5. பைங்கூழ் : சோளப்பைங்கூழ் பசும் பயிராக உள்ளது.
3. அறிந்தது , அறியாதது , புரிந்தது , புரியாதது , தெரிந்தது , தெரியாதது , பிறந்தது , பிறவாதது இவை அனைத்து ம் யாம் அறிவோம் .அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும் .
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
1. அறிதல் , அறியாமை
2. புரிதல் , புரியாமை
3. தெரிதல் , தெரியாமை
4. பிறத்தல் , பிறவாமை
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக .
தமிழ் :
1. இயல் , இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது .
2. முதல் , இடை , கடை ஆகிய முச்சங்கங்கள் வளர்க்கப்பட்டது .
3. ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
4. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது .
கடல் :
1. முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது .
2. வெண்சங்கு , சலஞ்சலம் , பாஞ்சசன்யம் என மூன்று சங்குகளைத் தருகிறது .
3. மிகுதியான வணிகக்கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது .
4. அலைகளால் சங்கினைத் தடுத்து காக்கிறது .
இயல் -2
1. உயிராக நான் , பல பெயர்களில் நான் , நான்கு திசைகளிலும் நான் , இலக்கியத்தில் நான் , முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ..... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி
பேசுகிறது . இவ்வாறு 'நீர் ' தன்னைப் பற்றி பேசினால்........ உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
நீர் பேசுகிறேன்.....
நீராக நான்
உயிர்வாழ அவசியம் நான்
உலகில் மூன்று பங்கு நான்
பூமியைக் காக்கின்றேன்
வீட்டைச் சுத்தம் செய்கிறேன்
உடலைச் சுத்தம் செய்கிறேன்
மேகமாக உருவாகி
மழையாகப் பொழிகிறேன்
பயிர்களை வளர்க்கிறேன்
மரங்களை வளர்க்கிறேன்
மலையிலிருந்து
வயல்களில் ஓடுகிறேன்
ஆறுகளைக் கடக்கிறேன்
கடலிலே கலக்கிறேன்
நான் இல்லை என்றால்
அனைத்து உயிர்களும் இல்லை
நான் அனைத்து உலகத்து
உயிர்களையும் காக்கின்றேன்.....
2. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஒரு உரையாடல் அமைக்க .
1. சோலைக் காற்று : அடர்ந்த மரங்கள், நீர் நிறைந்த பூங்காக்கள் , செடிகள் கொடிகள் நிறைந்த குளிர்ச்சியான இடமே எனது இடம் ஆகும்.
மின்விசிறி காற்று ; நான்கு சுவர்கள் அடங்கிய அறையே எனது இருப்பிடம் ஆகும் .
2. சோலைக் காற்று : நான் எப்போதும் குளிர்ச்சி நிறைந்த காற்றையே வீசிக் கொண்டிருக்கிறேன்.
மின்விசிறி காற்று : நான் எப்போதும் வெதுவெதுப்பான சூடான காற்றையே வீசிக் கொண்டிருக்கிறேன்.
3. சோலைக் காற்று : மக்கள் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக தூய காற்றைப் பெற என் இருப்பிடம் தேடி வருகின்றனர் .
மின்விசிறிக் காற்று : வீட்டில் இருப்பவர்கள், பணி செய்பவர்கள் என் இருப்பிடம் தேடி வந்து காற்றைப் பெறுகிறார்கள்.
4 .சோலைக் காற்று : சிறுவர்கள் மாலை நேரங்களில் விளையாடுவதற்காகவும் காதலர்கள் பொழுதுபோக்கவும் நான் பயன்படுகிறேன்.
மின்விசிறிக் காற்று : எல்லா நேரங்களிலும் மனிதர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நான் காற்று தந்து உதவுகிறேன்.
5. சோலைக் காற்று :மின்சாரம் இல்லாத நேரங்களில் கூட நான் குளிர்ச்சியான காற்றை வீசிக்கொண்டு இருக்கிறேன். எந்த நேரமும் நானும் என்னிடம் வருபவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துகிறேன்.
மின் விசிறிக் காற்று : மின்சாரம் இல்லாத நேரங்களில் என்னால் காற்று தர இயலாது. சூடான உடலோடு மனிதர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.
3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி , வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்தான் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள் .
இப்பதியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக .
1. மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
மல்லிகை - சிறப்புப் பெயர் ;
பூ - பொதுப்பெயர்
2. பூங்கொடி - உவமைத்தொகை
பூ போன்ற கொடி எனப் பொருள்
3. தண்ணீர்த் தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தண்ணீரை உடைய தொட்டி( ஐ) .
4. குடிநீர் - வினைத்தொகை
குடி நீர் , குடிக்கின்ற நீர் , குடிக்கும் நீர் என மூன்று காலங்களில் வரும் .
5. குடிநீர் நிரப்பினாள் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
குடிநீரை நிரப்பினாள் ( ஐ).
6. சுவர்க் கடிகாரம் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
சுவரின் கண் உள்ள கடிகாரம் எனப்பொருள்படும் .( கண் )
7. ஆடு மாடுகள் - உம்மைத்தொகை
ஆடுகளும் மாடுகளும் ' உம் ' என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.
8. மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
மணியைப் பார்த்தாள் .(ஐ)
4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக .
குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் ' சளப் தளப் ' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல் .
மழை நின்றவுடன் குளிர்ந்த காற்றை உணர்ந்தேன் . மரங்களின் இலைகளில் ' சொட் சொட்டு ' என வழியும் நீர் துளிகள் . வீட்டை விட்டு வெளியே வந்து அதனைக் காணும் பொழுது உடலில் ஓடும் மெல்லிய குளிரை உணர்ந்தேன் .
மழைநீர் நேராக ஓடிச்சென்று குட்டைகளில் தேங்கியிருந்தது . சிறுவர்கள் தேங்கிய குட்டையில் இறங்கி ' சளப் தளப் ' என்று குதித்து விளையாடி மகிழும் சப்தங்கள் என் காதுகளில் இசையை உணர முடிகிறது .
மழை நின்றபின் ஓடிச் செல்லும் நீரோட்டம் சிறுசிறு காகிதங்கள் , குப்பைகள், கட்டைகள் தெருவில் ஓடிச் செல்லும் வாய்க்கால்கள். அதிலே 'காகிதக்கப்பல்' விட்டு கடலிலே விட்டதைப் போன்ற மகிழ்ச்சி.!
இயற்கையின் விந்தையே !
0 கருத்துகள்