10th Tamil 8 MARK
QUESTION and ANSWERS VIRIVANAM பத்தாம் வகுப்பு - விரிவானம் புயலிலே ஒரு தோணி | KALVI SRI
1 . ' புயலிலே ஒரு தோணி ' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்கு தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் , தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
வர்ணனைகள் :
1. கொளுத்திக் கொண்டிருந்த வெயில் இமைநேரத்தில் மறைந்து விட்டது ; புழுங்கிற்று .
2. மேகப் பொதிகள் பரந்து திரண்டொன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன .
3. கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன .
4. வானம் உடைந்து கொட்டு கொட்டென்று வெள்ளம் கொட்டியது .
5 . சூறாவளி மாரியும் காற்றும் கூடிக் கலந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன .
6. வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்று
கூடிக் கொந்தளிக்கின்றன .
7 . வானம் பிளந்து தீ கக்கியது .
8 .மழை வெள்ளம் கொட்டுகிறது .
9.வளி முட்டி புரட்டுகிறது .
10 .கடல்வெறிக் கூத்தாடுகிறது .
அடுக்குத் தொடர்கள் :
11 .தொங்கான் எலும்புகள் முடிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலியுடன் தத்தளித்தது .
2. இருளிருட்டு , இருட்டிருட்டு , கும்மிருட்டு , குருட்டிருட்டு தலைக்கு மேல் காணப்பட்டது .
3 . தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதித்து குதித்து விழுவிழுந்து நொறு நொறு நொறுங்குகிறது .
4 . சூரியன் சூரியன்....கரை ! கரை ! ...
5 . கடல் அலைகள் மொத்து மொத்தென்று மோதின .
ஒலிக்குறிப்புச் சொற்கள் :
1 . தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதிகுதித்து நொறு நொறு நொறுங்கல் ஒலியுடன் நொறுங்குகிறது .
2. ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங் .
3. இடிமுழக்கச் சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன .
புயலுக்குப் பின் அமைதி...கரை :
மறுநாள் காலையில் சூரியன் உதித்து , தொங்கான் மிதந்து சென்று , அலைகளில் நெளிந்தோடி ஒருவழியாகக் கரையை அடைந்தது .
0 கருத்துகள்