Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil 8 MARK QUESTIONS பொதுகட்டுரை விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்,

 10th Tamil 8 MARK QUESTIONS 
பத்தாம் வகுப்பு 8 மதிப்பெண் வினாக்கள்
பொதுகட்டுரை 
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்,
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் | Kalvi Sri

1. முன்னுரை -  இளமையும் கல்வியும் -  முதல் விண்வெளிப் பயணம் -  இறுதிப் பயணம் -  விருதுகளும் அங்கீகாரங்களும் -  முடிவுரை -  குறிப்புகளைக் கொண்டு  " விண்வெளியும்  கல்பனா சாவ்லாவும் " எனும் தலைப்பில் கட்டுரை எழுதுக .

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

குறிப்புச் சட்டகம்  

  • முன்னுரை
  • இளமையும் கல்வியும் 
  • முதல் விண்வெளிப்பயணம் 
  • இறுதிப் பயணம் 
  • விருதுகளும் அங்கீகாரங்களும் 
  • முடிவுரை

முன்னுரை :

             இந்தியாவின் முதன் முதலில் விண்வெளியில் கால்பதித்தவர் என்ற பெருமையை உடையவர். இளம் விஞ்ஞானியான  கல்பனா சாவ்லா   பற்றி  இக்கட்டுரையில் தெளிவாக காண்போம் .

பிறப்பு :     

மாநிலம் - ஹரியானா 

ஊர் -  கர்னல் 

ஆண்டு : 1.07.1961

 பெற்றோர் :  பனாரஸ் லால்சாவ்லா  , சன்யோகிதா தேவி

 சகோதரிகள் :  சுனிதா,  தீபா

 சகோதரன் :  சஞ்சய்

 இளமையும் கல்வியும் :

  • தொடக்கக் கல்வியை  கர்னல்  அரசுப் , பள்ளியில்   பயின்றார் . 
  • 1982 - இல் சண்டிகரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் . 
  •  1984 - இல்  விண்வெளி பொறியியல் துறையில் அமெரிக்கா  " டெக்ஸாஸ் "  பல்கலைக்கழகத்தில்   முதுகலைப் பட்டம் பெற்றார் . 
  • பௌல்தேரில் 1986 இல் "கோலோரடோ "   பல்கலைக்கழகத்தில்  இரண்டாவது முதுகலைப் பட்டமும் ,
  • 1988இல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். 

முதல் விண்வெளி பயணம் :

நாசாவில் உள்ள அமெஸ் ஆராய்சிக்கூடத்தில் துணைத் தலைவராக பொறுப்பேற்றார் . பின்னர் கிளைடர்கள் ,   விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார் . விமானம் ஓட்ட அனுமதி பெற்று ,  பயிற்சியும் அளித்தார் .

1997 இல் கொலம்பியா விண்வெளியில் பயணம் செய்து  சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து பூமிக்கு திரும்பினார் . 

தொடர்ந்து பயிற்சி பெற்று விண்வெளியின் இரண்டாவது பயணத்திற்கு  ஆயத்தமானார் .

இறுதிப் பயணம் : 

தனது இரண்டாவது பயணம் எஸ். டி .எஸ் .107  என்ற  கொலம்பியா விண்கலம் அமெரிக்க  கென்னடி நிலையத்திலிருந்து 16.01. 2003 இல்  விண்வெளிக்குப் பயணமானார் .  

கல்பனா சாவ்லா உடன் 7 பேர்  படக்குழு 16  நாட்கள் பயணம் மேற்கொண்டு  ஆய்வுகளை முடித்துக் கொண்டு  பூமிக்கு திரும்பிய போது,  டெக்ஸாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்து சிதறியது . 

பிப்ரவரி 1-2003 அன்று தன் கணவர் (விமானப் பயிற்சி ஆசிரியர்) மற்றும் இரண்டு குழந்தைகளையும் விடடுப் பிரிந்தார். 

அதுவே கல்பனா சாவ்லாவின் இறுதி பயணமானது .

விருதுகளும் அங்கீகாரங்களும் ;

  • தமிழக அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு முதல் "கல்பனா சாவ்லா"என்ற விருது வழங்கி வருகிறது.
  • நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல் பெற்றார்.
  • நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல் பெற்றார்.

முடிவுரை : 

           தன் கனவை நனவாக்கிய சாதனைப்பெண் கல்பனா  சாவ்லா . பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்து இந்தியாவிற்கு உலகப் புகழை பெற்றுத் தந்தார் . இவர் இந்தியாவின்  " முதல்  விண்வெளி  ஆராய்ச்சிப் பெண்மணி "  என்ற சிறப்புக்குரியவரை  நாமும்  போற்றுவோம் .

----------------------------------------------------------------------------------------------------------

2 . ஒரு குழந்தையை தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர் கோப்பையை  எடுக்கவும்  மென்பொருள் அக்கறை கொள்ளுமா ? பெரும் வணிக தொடர் நின்று விடுமா ?  இக்கட்டுரையை  ஒட்டிச் "  செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் "  பற்றிய ஒரு கட்டுரை எழுதுக .

செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்  

குறிப்புச் சட்டகம்

முன்னுரை     

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில்  வணிகத்தில் அலுவலகங்களில் போக்குவரத்தில் 
கல்வியில்
மனிதர்களுக்கு 
நன்மை தீமைகள் முடிவுரை 
முன்னுரை  : 
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் எனலாம் . மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு .
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் : 
எதிர்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது ,  வயதானவர்களுக்கு   உற்ற தோழனாய் பேணுவது போன்ற செயல்களில் " ரோபோ "  பயன்படுவதை நாம் பார்க்க போகிறோம் .நாம் கற்றுக் கொடுத்தால் மட்டுமே "ரோபோ" அக்கறை கொள்ளும்.
ஒரு குழந்தையை தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர் கோப்பையை  எடுக்கவும்  மென்பொருள் அக்கறை கொள்ளும் .நாம் கற்றுக் கொடுத்தால் மட்டுமே "ரோபோ" அக்கறை கொள்ளும்.
செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால்   மனிதர்களால் செய்ய இயலாத செயல்களைச் செய்ய முடியும் .
செயற்கை நுண்ணறிவு  வணிகத்தில் :
புதிய வணிக வாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு   பயன்படுகிறது .
பெருநிறுவனங்கள் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன .
செயற்கை நுண்ணறிவு அலுவலகங்களில்  :
        விடுதிகள் ,  வங்கிகள் ,  அலுவலகங்களில்  தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளான உரையாடுவது ,   ஆலோசனை வழங்குவது , பயண ஏற்பாடு செய்து தருவது ,  தண்ணீர் கொண்டுவருவது , உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது  போன்ற செயல்களை எதிர்காலத்தில் ரோபோக்கள் அளிக்கும் .
செயற்கை நுண்ணறிவு போக்குவரத்தில் :
நாம் பயணிக்கும் ஊர்திகளை செயற்கை நினைவு கொண்டே இருக்க வேண்டியிருக்கும் . 
இதனால்  விபத்துகள் குறையும் .;   போக்குவரத்து நெரிசல் இருக்காது ; பயண நேரம் குறையும் ;  எரிபொருளும் மிச்சப்படும் .
செயற்கை நுண்ணறிவு கல்வியில் :
கவிதைகள் ,  கட்டுரைகள் ,  கதைகள் விதவிதமான எழுத்து  நடைகள்  கற்றுக் கொண்டு  மனிதர்களிடம்  போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை .
மேலும் இத் தொழில் நுட்பத்தை  பல விதங்களில் பயன்படுத்தும்   மத்தியக் கூறுகளும் இருக்கின்றன .
செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு :
நம் வாழ்க்கையையும்  வணிகத்தையும் நம்மையறியாமலேயே  வளப்படுத்திக் கொண்டு இருக்கிறது .
மனித இனத்தை தீங்குகளிலிருந்து காப்பாற்றவும் ,  உடல் நலத்தைப் பேணவும் ,  கொடிய நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் , பட்டறிவு மிக்க மருத்துவரைப் போல செயற்கை நுண்ணறிவைப்  பயன்படுத்தும் ஆராய்ச்சியும்  நடந்து வருகின்றன .
மின்னணுச் சந்தைபடுத்துதல்  வாழ்க்கையை எளிதாகவும் வணிகத்தில் வெற்றி அடையவும் உதவுகிறது.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றி அறியும் நான்காவது தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும்  நம்மை வளப்படுத்த உதவும் .
செயற்கை நுண்ணறிவின் நன்மை தீமைகள் :
மனித கண்டுபிடிப்புகள் அனைத்திலும் நன்மை தீமை இரண்டும் உள்ளன . எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு  நன்மை தருவதாகவே வடிவமைக்கப்பட வேண்டும் .
முடிவுரை :
     இப்போது உலகில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பயன்பாட்டில் இருக்கின்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ,  எதிர்காலத்தில் உலகில் ஒவ்வொரு துறையிலும் அளவிட  முடியாத அளவிற்கு முன்னேற்றத்தைத் தரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்