Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Agapporul elakkanam

10th Tamil Agapporul elakkanam 
10ஆம் வகுப்பு- அகப்பொருள் இலக்கணம் வினாக்கள் | Kalvi Sri 

10 std -Agapporul elakkanam -10  ஆம்  வகுப்பு- அகப்பொருள் இலக்கணம் -  
இயல் 6 - ப.எண் : 144

1.தமிழர்கள் வாழ்வியலை எவ்வாறு வகுத்தார்கள்?
தமிழர்கள் வாழ்வியலை அகம் , புறம் என வகுத்தார்கள்.

2 . பொருள் என்பது யாது ?
பொருள் என்பது ஒழுக்கமுறை ஆகும். 

3 .  அகத்திணை என்பது யாது ?
  அகத்திணை என்பது  அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலையை கூறுவது  ஆகும் .

4. அகத்திணையின் வகைகள் யாவை ? 
         அல்லது 
அன்பின் ஐந்திணைகள் யாவை ?
1 . குறிஞ்சி 2.  முல்லை 3 . மருதம் 4 . நெய்தல் 5 . பாலை
5.  ஐந்திணைக்குரிய பொருள்கள் யாவை ?
1 .முதற்பொருள் 
2 .கருப்பொருள் 
3.உரிப்பொருள்

6. முதற்பொருள் என்பது யாது ?
நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும் .

7. நிலம் எத்தனை வகைப்படும் ?அவை  யாவை  ?
             அல்லது 
ஐவகை நிலங்கள் யாவை ?
1. குறிஞ்சி -  மலையும் மலை சார்ந்த இடமும்
2 . முல்லை -  காடும் காடு சார்ந்த இடமும்
3 . மருதம் -  வயலும் வயல் சார்ந்த இடமும்
4 . நெய்தல் -  கடலும் கடல் சார்ந்த இடமும்
5 . பாலை -  சுரமும் சுரம் சார்ந்த இடமும்

8 . பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை ? 
பொழுது இரண்டு வகைப்படும். அவை
1 . பெரும்பொழுது
2 . சிறுபொழுது

9 .பெரும்பொழுது என்பது யாது ?
ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது  என்று நம்  முன்னோர்கள் பிரித்துள்ளனர் .

10.  பெரும் பொழுதுகள் யாவை ?
ஓராண்டின் ஆறுகூறுகள்.
1 . கார்காலம் -  ஆவணி , புரட்டாசி 
2. குளிர்காலம் -  ஐப்பசி , கார்த்திகை
3. முன்பனிக் காலம் -  மார்கழி , தை
4. பின்பனிக் காலம் -   மாசி , பங்குனி
5. இளவேனிற் காலம்  -  சித்திரை ,  வைகாசி
6.  முதுவேனிற் காலம் -  ஆனி , ஆடி
( கா ,கு ,முன் ,பின் ,இள ,முது  - என நினைவில் கொண்டு எழுதலாம். )

11.  சிறுபொழுது என்பது யாது ?
ஒரு நாளின் 6 கூறுகளை சிறுபொழுது என்று குறித்துள்ளனர் .

12 . சிறுபொழுதுகள் யாவை ?
ஒரு நாளின் 6  கூறுகள்
1. காலை -  காலை 6  -10 மணி
2 . நண்பகல் - காலை10 -2 மணி 
3.எற்பாடு -  பிற்பகல்  2 - 6 மணி
4. மாலை -  மாலை 6 - இரவு 10 மணி 
5. யாமம் - இரவு 10 - 2 மணி 
6. வைகறை - இரவு 2 மணி  - காலை 6 மணி வரை
                                                              [4 , 4 மணி ஆக கூட்டி மனதில் நிறுத்தலாம்.]

13. ஏற்பாடு என்றால்  என்ன ?
' எல்' - ஞாயிறு 
' பாடு' -  மறையும் நேரம்
எல் + பாடு = எற்பாடு

14. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது சிறுபொழுது யாவை ?
பெரும்பொழுது -  குளிர்காலம் , முன்பனிக்காலம்
சிறுபொழுது - யாமம்

15.முல்லை திணைக்குரிய பொழுதுகள் யாவை ?
பெரும்பொழுது -கார்காலம் சிறுபொழுது - மாலை

16. மருத நிலத்திற்குரிய  பொழுதுகள் யாவை ?
பெரும்பொழுது -  ஆறு பொழுதுகள்
சிறுபொழுது -  வைகறை

17. நெய்தல் திணைக்குரிய  பொழுதுகள் யாவை  ?
பெரும்பொழுது - ஆறு பொழுதுகள்
சிறுபொழுது -  ஏற்பாடு

18. பாலைத்திணைக்குரிய பொழுதுகள் யாவை ?
பெரும்பொழுது -  இளவேனில் ,   முதுவேனில் , பின்பனி
சிறுபொழுது -  நண்பகல்

19.  கருப்பொருள்கள் என்றால் என்ன ?
ஒரு நிலத்தின்  தெய்வம் ,  மக்கள்,  தொழில் , விலங்கு    இவையெல்லாம் கருப்பொருள்கள் எனப்படும் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்