Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Question and Answers வினா , விடை வகைகள் , பொருள்கோள்

10th Tamil Question and Answers
10ஆம் வகுப்பு வினா , விடை வகைகள் , பொருள்கோள் | Kalvi Sri


10 ஆம்  வகுப்பு - கற்கண்டு -  வினா , விடை வகைகள் , பொருள்கோள்

இயல் 5 -  ப.எண் ,:117


1. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை ?
வினா 6  வகைப்படும் . அவை
1 .  அறிவினா  2.  அறியா வினா 
3. ஐய வினா 4.  கொளல் வினா
5 . கொடை வினா 6.  ஏவல் வினா

2. அறிவினா  என்றால் என்ன ?
தான் அறிந்தவற்றை பிறரிடம் கேட்டல்.
எ.கா :  ஆசிரியர் மாணவரிடம் இந்த கவிதையின் பொருள் யாது ? என்று  கேட்டல்.

3. அறியா வினா -  விளக்குக.
தான் அறியாத ஒன்றை அறிந்துகொள்ள கேட்பது.
எ.கா :  எட்டுத்தொகை நூல்கள் யாவை ?  என மாணவன் இடம் கேட்டல்.

4.  ஐய வினா என்றால் என்ன ?
ஐயம் நீங்கித்  தெளிவு பெறுவதற்காக கேட்பது.
இச்செயலை செய்தது தங்கையா? மணிமேகலையா ?  என வினவுதல்.

5. கொளல் வினா   என்பது யாது ?
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ள  வினவுவது.
எ.கா : 1. 'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா '  என நூலகரிடம் கேட்டல். 
2. கடையில் பருப்பு உள்ளதா ?  என கேட்டல். 

6. கொடை வினா -  விளக்குக.
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கக்  கேட்பது.
எ.கா :   உன்னிடம் பாரதிதாசன் கவிதைகள்  இருக்கிறதா ? என  கொடுப்பதற்காக  வினவுதல் .

7. ஏவல் வினா - விளக்குக.
ஒரு செயலை செய்யும் மாறு  ஏவுவது.
எ.கா :  தாய் மகனைப் பார்த்து   தக்காளி வாங்க கடைக்குச் செல்கிறாயா ?  என கேட்பது .
விடை வகை   

8 . விடை எத்தனை வகைப்படும் ?அவை யாவை ?
விடை எட்டு வகைப்படும் . அவை
1 . சுட்டு விடை 2 . மறை விடை
3 .நேர் விடை  4. ஏவல் விடை
5. வினா எதிர் வினாதல் விடை
6. உற்றது உரைத்தல் விடை
7. உறுவது கூறல் விடை 8 . இனமொழி விடை

9 . வெளிப்படை விடைகள் யாவை ?
விடைகள் நேரடியாக இருப்பின் வெளிப்படை விடைகள் எனப்படும். 
அவை :  சுட்டுவிடை ,   மறை விடை ,நேர் விடை.

10. குறிப்பு விடைகள் யாவை ?
விடைகள் குறிப்பாக  இருப்பதால்   குறிப்பு விடைகள் எனப்படும். 
ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை , உற்றது உரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை.

11. சுட்டு விடையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
சுட்டி கூறும் விடை சுட்டுவிட எனப்படும்.
' கடைத்தெரு எங்கு உள்ளது ' என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது '
எனக் கூறல்.

12. மறை விடை என்றால் என்ன ?
மறுத்துக் கூறும் விடை  மறைவிடை எனப்படும் . 
' கடைக்கு போவாயா ?' என்ற கேள்விக்கு  ' போகமாட்டேன் ' என மறுத்துக் கூறுவது .

13. நேர் விடை என்றால் என்ன ?
உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும் .
' கடைக்கு போவாயா '   என்ற கேள்விக்கு '  போவேன் ' என்று  கூறுவது. 

14.   ஏவல் விடையை  விளக்குக.
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக்  கூறும் விடை .
' இது செய்வாயா ?'என்று  கூறும் பொழுது  ' நீயே செய் '  என்று ஏவிக் கூறுவது .

15. வினா எதிர் வினாதல் விடை  என்பது என்ன ?
வினாவிற்கு விடையாக  இன்னொரு வினாவை கேட்பது  எதிர் வினாதல்
விடை எனப்படும் .
' என்னோட ஊருக்கு வருவாயா '  என்ற வினாவிற்கு '  வராமல் இருப்பேனா '  என்று கூறுவது.

16 . உற்றது உரைத்தல் விடையை  விளக்குக .
வினாவிற்கு விடையாக  ஏற்கனவே நேர்ந்ததைக்  கூறுவது  உற்றது உரைத்தல் விடை எனப்படும்.
'  நீ விளையாட வில்லையா ?'  என்ற வினாவிற்கு ' கால்  வலிக்கிறது '  எனத்  உற்றதை உரைப்பது .

17 .  உறுவது கூறல் விடை  என்பது என்ன ?
வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் உறுவது கூறல் விடை எனப்படும் .
'  நீ விளையாட வில்லையா ?'  என்ற வினாவிற்கு  ' கால் வலிக்கும் '  என உறுவதை உரைப்பது .

18 . இனமொழி விடை  என்றால் என்ன ?
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாக கூறுவது  இனமொழி விடை எனப்படும்.
' உனக்கு கதை எழுதத் தெரியுமா ?'   என்ற வினாவிற்கு '  கட்டுரை எழுதத்
தெரியும் '  என்று கூறுவது .

 பொருள்கோள்

19.  பொருள்கோள் என்றால் என்ன ?
செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு  ' பொருள்கோள் ' என்று பெயர் .

20 . பொருள்கோள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
பொருள்கோள் எட்டு வகைப்படும் . அவை
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2.  மொழி மாற்றுப் பொருள்கள்
3. நிரல்நிறைப் பொருள்கோள்
4. விற்பூட்டுப் பொருள்கோள்
5. தாப்பிசைப் பொருள்கோள்
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
7. கொண்டு கூட்டு பொருள்கோள்
8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்

21. ஆற்றுநீர்ப் பொருள்கோள் -  விளக்குக .
ஆற்றுநீர்ப் பொருள்கோள் :
     பாடலின் தொடக்கம் முதல்  முடிவு வரை ஆற்று நீரின் போக்கை போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால்  அது 'ஆற்றுநீர்ப்  பொருள்கோள் '  ஆகும் .
எ.கா :
'  சொல்லரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் 
மெல்லவே கருஇருந்து  இன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின்  இறைஞ்சிக் காய்த்தவே' 
                       -   சீவக சிந்தாமணி
பொருள் :
     நெற்பயிர் , கருவுற்ற பச்சை பாம்பின் வடிவம் போல் கருக்கொண்டு ,  பின்னர் கதிர் விட்டு , செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்ற மக்கள் பணிவின்றித் தலை நிமிர்ந்து  நிற்பது போல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன்  கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து  காய்ந்தன .

22 . நிரல்நிறைப் பொருள்கோள்  என்றால் என்ன ?  
நிரல்நிறை பொருள்கோள் :
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிழல் நிறையாக (  வரிசையாக ) அமைந்து வருவது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும் .

23. நிரல் நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
இரண்டு வகைப்படும் .அவை
1. முறை நிரல்நிறைப் பொருள்கோள் 
2. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

24. முறை நிரல்நிறை பொருள்கோள்  என்பதைச் சான்றுடன் விளக்குக.
முறை நிரல்நிறைப் பொருள்கோள் :
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை  அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி,  அவை ஏற்கும் பயனிலைகளையும்  அவ்வரிசைப்படியே  நிறுத்தி பொருள் கொள்ளுதல் '  முறை நிரல்நிறை பொருள்கோள் ' எனப்படும். 
எ.கா :
'  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது '    - குறள்.
விளக்கம் :
     இக்குறளில் பண்பு , பயன் என்றும்  அன்பு ,   அறன் என்றும் இரு சொற்களை  வரிசைப்படுத்தி உள்ளார் . இல்வாழ்க்கையில் பண்பு ,  அன்பு என்றும்  அதன் பயன் , அறன் என்றும்  பொருள் கொள்ள வேண்டும்.
எனவே , அன்புக்கு பண்பும்  அறத்துக்கு பயனும் -  நிரல் நிறையாக நிறுத்திப் பொருள் கொள்வதால் ,  இப்பாடல் ' முறை நிரல்நிறைப் பொருள்கோள் '  எனப்படும்.

25. எதிர் நிரல் நிறை பொருள்கோள்  என்றால் என்ன ? சான்றுடன் விளக்குக.
எதிர் நிரல்நிறைப்  பொருள்கோள் :
  செய்யுளில் எழுவாய்களை  வரிசைப்படுத்தி  ஏற்கும் பயனிலைகளை  எதிரெதிராக  கொண்டு பொருள் கொள்ளுதல்' எதிர் நிரல் நிறை பொருள்கோள் ' ஆகும். 
எ.கா :
'  விலங்கொடு மக்கள் அனையர்        இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். '   -  குறள்
விளக்கம் :
இக்குறளின் முதல் அடியில்   விலங்கு , மக்கள் என வரிசைப்படுத்தி விட்டு,  அடுத்த அடியில் பயனிலைகளாகக்  கற்றார் ,  கல்லாதார்( ஏறியவர்)  என வரிசைப்படுத்தியுள்ளார் .  இதில் கற்றார் மக்கள் என்றும் ,  கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும்  பொருள் கொள்ள வேண்டும். எனவே இது 'எதிர்  நிரல்நிறைப் பொருள்கோள் '
ஆகும் .

26 .கொண்டு கூட்டுப் பொருள்கோள் -  விளக்குக.
கொண்டு கூட்டு பொருள்கோள் :
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப்  பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது  கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும் .
எ.கா :
ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு .
                             -   மயிலை நாதர் உரை
விளக்கம்:
இப்பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும்
குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும்  பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும் . இதில்   ஆலத்து மேல குரங்கு , குளத்துள குவளை - என்ற  கருத்தை  அங்குமிங்கும் கொண்டு  பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்