10th Tamil unit 5
Long Answers | Big Questions | KALVI SRI
10th Tamil unit 5 Question and Answers | 10th Tamil unit 5 Short answers | 10th Tamil unit 5 one marks Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 5 one marks 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST
10th Tamil unit 5 Question and Answers | 10th Tamil unit 5 Long Answers | Big Questions
10th Tamil Unit 5 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths , Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 5 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams. 10th Tamil Unit 5 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths
10th Tamil unit 5 Question and Answers | 10th Tamil unit 5 Long Answers | Big Questions
Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions
10th Tamil unit 5 Long Answers | Big Questions
10th tamil unit 5 Big questions
மொழிபெயர்ப்புக் கல்வி
நெடுவினா
1. தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல்
கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை, என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்க கட்டுரை எழுதுக.
முன்னுரை :
உலகம் தகவல் தொழில்நுட்பத்தினால் சுருங்கி விட்ட சூழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.
வரையறை:
மொழிபெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எந்தவித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.
தமிழ் இலக்கிய வளம் :
தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிறமொழியில் சிறந்து விளங்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.
கல்வி மொழி :
மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுப் பல்வேறு துறையில் சிறந்து விளங்கமுடியும்.
பிறமொழி இலக்கியம் :
ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்தது.
அறிவியல் கருத்துகள் :
மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பல்துறை கருத்துகள் :
கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிறதுறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளிலும் மொழிபெயர்ப்புப் பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்றுமொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.
முடிவுரை:
எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழிபெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்தால் நிலைபெற்று விளங்கும்.
திருவிளையாடற் புராணம்
நெடுவினா
1. இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
மன்னனின் அவையில் இடைக்காடனார் :
வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்குச் சென்று தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.
இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல் :
வேப்பமாலை அணிந்த குலேசபாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்ந்து தாங்கள் முன் சுவை நிரம்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.
இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல் :
இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின்வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.
இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல் :
இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்துக் குடிகொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாரோடு வெளியேறினார்.
இறைவனிடம் மன்னன் வேண்டுதல் :
இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாரோ? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமும், துறவறமும் தத்தம் வழியில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகரபாண்டியன்.
இறைவனின் பதில் :
‘வயல் சூழ்ந்த கடம்பவனத்தைவிட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்.’ ‘இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை’ என்றார். ‘இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்’ என்றார்.
பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல் :
வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன். மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பது பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.
மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல் :
மன்னனின் மாளிகை வாழை, சாமரை இவற்றாலான விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் சூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினான்.
மன்னன் புலவரிடம் வேண்டுதல் :
மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அமுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்துவிட்டது என்றனர்.
இலக்கணக் குறிப்பு.
கேள்வியினான் – வினையாலணையும் பெயர்
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
கழிந்த – பெயரெச்சம்
புதியநம்பிக்கை
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – என்கிறது வெற்றிவேற்கை.
மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
முன்னுரை :
வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்வி அறிவற்ற, இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராய் பிறந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றி, மேரி மெக்லியோட் பெத்யூன் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமை வாழ்க்கை :
மேரி தன் தாய் தந்தையோடு பருத்திக் காட்டில் வேலை செய்யும் கல்வி அறிவற்ற உழைக்கும் குடும்பம். அச்சூழலிலும் மேரி தனக்கென்ற தனி பாதை வகுப்பாள். அது, எதுவாகினும் தான் முதலில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவாள்.
மேரிக்கு ஏற்பட்ட அவமானம்:
மேரி ஒருநாள்தாயுடன் வில்சன்வீட்டிற்குச் செல்கிறாள். அங்குக்குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு வியப்புற்றாலும் அவள் கண்கள் அங்கு இருந்த புத்தகத்தின் மீதே சென்றது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் படிக்கமுடியாது என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் மனதைக் கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள்.
மேரியின் ஏக்கம் :
வில்சனின் வீட்டில் நடந்த அவமானங்களை எண்ணி கண்ணீர் வடித்துத் தன் தந்தையிடம் நான் படிக்க வேண்டும். படித்தால்தான் இச்சமூகம் மதிக்கும் என்று கூறுகிறாள்.
தந்தையின் அறிவுரை :
மேரி நாம் பள்ளிச் செல்லமுடியாது. நமக்கென்று தனியாகப் பள்ளிக்கூடம் இல்லை. வெளியூரில் பள்ளியில் வெள்ளைக்காரர்கள் படிக்கும் பள்ளிதான் இருக்கிறது. அதிலும் நம்மைச் சேர்க்கமாட்டார்கள் என்றார்.
மேரியின் தன்னம்பிக்கை:
பதினொரு வயது நிரம்பிய மேரி வயல்காட்டிலிருந்து பருத்திமூட்டையைச் சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தாள். அப்போது வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத பெண் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, நீ படிக்க வேண்டும்; உன் வேலைகளை முடித்துக்கொண்டு சீக்கிரம் வரவேண்டும் என்றார். மேரிக்கு நா எழவில்லை, வாயடைத்து நின்று வாசிக்கப் புறப்பட்டாள்; படிக்கத் தொடங்கினாள்.
புதிது புதிதாக கற்றாள். தன் பாதையை மெல்ல மெல்ல உயர்த்தினாள். இறுதி வகுப்பு படித்து, சான்றிதழ் பெற்றாள்.
பட்டமளிப்பு விழா :
தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்த மேரி, வில்சனின் இளைய மகள் என்னை அவமதிக்காவிட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின் செயல் எனக்கு நேரிடாவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுத படிக்கத் தெரியும் எனப் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
மேற்படிப்பு :
பட்டமளிப்பு விழாவின்போது வில்சன் தோளில் மேரியை அணைத்து ‘நீ எனக்கு என்ன செய்யப் போகிறாய்’ என்றார். “மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன்” என்றார். ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரைசேர இயலாத நிலைபோல் இருந்தாள்.
புதியதோர் பயணம் :
மீண்டும் தன் பணியினைப் பருத்திக்காட்டில் தொடங்கினார்கள். அப்போது மிஸ் வில்சன் அங்கு வந்து, வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்காக பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய். நீ மேல்படிப்பிற்காக டவுனுக்குப் போகவேண்டும் தயாராகு என்றார் மேரியிடம்
ஊரே கூடுதல் :
மேரி மேல்படிப்பிற்குச் செல்ல தொடர்வண்டி நிலையத்தில் ஊரே ஒன்று கூடியது. அனைவரும் குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர்.
முடிவுரை:
சாதாரணப் பெண்ணாகப் பிறந்து சாதனைப் பெண்ணாக மாறியது மேரியின் வாழ்வு.மேலும், சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரிஜேன்னின் வாழ்வியல் நிகழ்வுகளைப் போல நாமும் அவமானங்களை வெகுமானமாக மாற்ற முயற்சிப்போம்.
0 கருத்துகள்