10th Tamil unit 5 one marks
10th Tamil unit 5 one marks Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 5 one marks 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST
10th Tamil unit 5 one marks
10th Tamil Unit 5 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths , Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 5 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams. 10th Tamil Unit 5 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths
10th Tamil unit 5 one marks
Tamilnadu Samacheer Kalvi
10th Tamil Solutions
மொழிபெயர்ப்புக் கல்வி
1. மாபாரதம் மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி ……………
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
Answer:
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பிறநாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் எப்போது நிறுவப்பட்டன?
அ) சுதந்திரத்திற்கு முன்
ஆ) விடுதலைக்குப் பின்
இ) குடியரசுக்கு முன்
ஈ) குடியரசுக்குப் பின்
Answer:
ஆ) விடுதலைக்குப் பின்
2. மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..
அ) பெயரியல்
ஆ) வினையியல்
இ) மரபியல்
ஈ) உயிரியல்
Answer:
இ) மரபியல்
3. இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சிற்றிலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
Answer:
அ) சங்க இலக்கியம்
4. மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
அ) வி.சூ. நைப்பால்
ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்
இ) வெங்கட்ராமன்
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
5. ‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..
அ) பதில் தர மறுக்கிறோம்
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
இ) விடைதர முடியாது
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
6. வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) கலிங்கத்துப்பரணி
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) கலிங்கத்துப்பரணி
7. மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..
அ) சாகித்திய அகாதெமி
ஆ) தேசிய புத்தக நிறுவனம்
இ) தென்னிந்திய புத்தக நிலையம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
8. பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..
அ) தனியார் நிறுவனங்கள்
ஆ) வெளிநாட்டு தூதரகங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
9 ‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
Answer:
அ) குலோத்துங்கன்
10. பொருத்தித் தெரிக.
அ) 1942 – 1. யூமா வாசுகி
ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி
இ) 2016 – 3. ராகுல் சாங்கிருத்யாயன்
ஈ) 2018 – 4. கணமுத்தையா
அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 4. 3, 1
Answer:
அ) 3, 4, 2, 1
11. நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது………………..
அ) நாடகம்
ஆ) மொழிபெயர்ப்பு
இ) தியானம்
ஈ) செல்வம்
Answer:
ஆ) மொழிபெயர்ப்பு
12. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………………..
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) அ. முத்துலிங்கம்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
ஆ) மணவை முஸ்தபா
13. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று………………..
கூறியவர்
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) மு. மேத்தா
ஈ) அ. முத்துலிங்கம்
Answer:
அ) மு. கு. ஜகந்நாதர்
14. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
அ) உத்திரமேரூர்
ஆ) மண்டகப்பட்டு
இ) சின்னமனூர்
ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
இ) சின்னமனூர்
15. சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று………………..
அ) உத்திரமேரூர் கல்வெட்டு
ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
இ) மண்டகப்பட்டுக் கல்வெட்டு
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
Answer:
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
16. வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.
அ) சீவக சிந்தாமணி
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) சிலப்பதிகாரம்
17. வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக.
அ) பெருங்கதை
ஆ) முக்கூடற்பள்ளு
இ) கலிங்கத்துப் பரணி
ஈ) மணிமேகலை
Answer:
அ) பெருங்கதை
18. பாரதியின் மொழிபெயர்ப்புகளைப் பொருத்திக் காட்டுக.
i) பொருட்காட்சி – 1. Strike
ii) இருப்புப் பாதை – 2. Revolution
iii) புரட்சி – 3. East Indian Railways
iv) வேலை நிறுத்தம் – 4. Exhibition
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 2, 4, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
19. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ……………….. அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர்.
அ) வேர்ட்ஸ் வொர்த்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) லாங்பெல்லோ
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஆ) ஷேக்ஸ்பியர்
20. ………………..ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
இ) 18
21. மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ………………..
அ) நடப்பியல்
ஆ) தத்துவவியல்
இ) இலக்கியத் திறனாய்வு
ஈ) திறனாய்வு
Answer:
இ) இலக்கியத் திறனாய்வு
22. 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ………………..
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
ஆ) சசிதேவ்
இ) கணமுத்தையா
ஈ) வெ. ஸ்ரீராம்
Answer:
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
23. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு ………………..
அ) 1942
ஆ) 1945
இ) 1949
ஈ) 1952
Answer:
இ) 1949
24. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டும், மொழி……………….. பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.
i) கணமுத்தையா – 1. 1949
ii) டாக்டர் என். ஸ்ரீதர் – 2. 2016
iii) முத்து மீனாட்சி – 3. 2016
iv) யூமாவாசுகி – 4. 2018
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 1, 2, 3, 4
25. வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ………………..
அ) Camel
ஆ) Cow
இ) Horse
ஈ) Rope
Answer:
அ) Camel
நீதி வெண்பா
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. அருந்துணை என்பதைப் பிரித்தால் …………………
அ) அருமை + துணை
ஆ) அரு + துணை
இ) அருமை + இணை
ஈ) அரு + இணை
Answer:
அ) அருமை + துணை
2.“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்
ஆ) அறிவியல்
இ) கல்வி
ஈ) இலக்கியம்
Answer:
இ) கல்வி
பலவுள் தெரிக
1. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை
2. ‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்…………………
அ) காப்பிய இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சங்க இலக்கியம்
ஈ) நீதி இலக்கியம்
Answer:
இ) சங்க இலக்கியம்
3. ‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………
அ) சதாவதானி
ஆ) தசாவதானி
இ) மொழி ஞாயிறு
ஈ) கவிமணி
Answer:
அ) சதாவதானி
4. ‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?
அ) ஒளவையார்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) செய்குதம்பிப் பாவலர்
Answer:
இ) திருவள்ளுவர்
5. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை…………………
அ) ஓவியம்
ஆ) சதாவதானம்
இ) நாட்டியம்
ஈ) சிற்பம்
Answer:
ஆ) சதாவதானம்
6. செய்குதம்பிப் பாவலரின் மாவட்டம் ………………… வட்டம்…………………
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி
ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி
இ) கடலூர், மஞ்சக்குப்பம்
ஈ) சென்னை , மயிலாப்பூர்
Answer:
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி
7. செய்குதம்பிப் பாவலர் …………………வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) பதினெட்டு
ஈ) இருபது
Answer:
ஆ) பதினைந்து
8. சதாவதானி என்ற பாராட்டப் பெற்றவர்…………………
அ) உமறுப்புலவர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) செய்குதம்பிப் பாவலர்
ஈ) படிக்காத புலவர்
Answer:
இ) செய்குதம்பிப் பாவலர்
9. சதாவதானி என்பது…………………
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
ஆ) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
இ) நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
ஈ) ஆயிரம் பேருக்கு உணவிடுவது
Answer:
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது]
10. செய்குதம்பிப்பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம்…………………நாள்…………………
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
ஆ) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8
இ) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 8
ஈ) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6
Answer:
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
11. செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………
அ) கன்னியாகுமரி
ஆ) இடலாக்குடி
இ) சென்னை
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) இடலாக்குடி
12. ‘சதம்’ என்றால் ………………… என்று பொருள்.
அ) பத்து
ஆ) நூறு
இ) ஆயிரம்
ஈ) இலட்சம்
Answer:
ஆ) நூறு
13. தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது…………………
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) ஏலாதி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) திருக்குறள்
திருவிளையாடற் புராணம்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………
அ) அமைச்சர், மன்னன்
இ) இறைவன், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
ஈ) மன்னன், இறைவன்
Answer:
ஈ) மன்னன், இறைவன்
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
கற்றோர் – வினையாலணையும் பெயர்
உணர்ந்தகபிலன் – பெயரெச்சம்
தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகைகள்
ஒழுகுதார் – – வினைத்தொகை
மீனவன் – ஆகுபெயர்
பலவுள் தெரிக
1. கபிலரின் நண்பர் யார்?
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) இடைக்காடனார்
இ) குலேச பாண்டியன்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
ஆ) இடைக்காடனார்
2. திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
அ) சமண முனிவர்
ஆ) அகத்தியர் முனிவர்
இ) பரஞ்சோதி முனிவர்
ஈ) இடைக்காடனார்
Answer:
இ) பரஞ்சோதி முனிவர்
3. திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………
அ) 64
ஆ) 96
இ) 30
ஈ) 18
Answer:
அ) 64
4. ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) கபிலர்
இ) இடைக்காடனார்
ஈ) மோசிகீரனார்
Answer:
ஈ) மோசிகீரனார்
5. வேப்ப மாலை அணிந்த மன்னன்?
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:
இ) பாண்டியன்
6. மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ண யரக் காரணம் ………………………
அ) குளிர்ந்த காற்று வீசியதால்
ஆ) நல்ல உறக்கம் வந்ததால்
இ) களைப்பு மிகுதியால்
ஈ) அரசன் இல்லாமையால்
Answer:
இ) களைப்பு மிகுதியால்
7. களைப்பு மிகுதியால்] ‘மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு’ என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?
அ) சிவபெருமான்
ஆ) கபிலர்
இ) பாண்டியன்
ஈ) இடைக்காடனார்
Answer:
இ) பாண்டியன்
8. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ………………………
அ) தஞ்சாவூர்
ஆ) திருமறைக்காடு
இ) திருத்துறைப் பூண்டி
ஈ) திருவண்ணாமலை
Answer:
ஆ) திருமறைக்காடு
9. திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை ………………………
அ) 3
ஆ) 4
இ) 6
ஈ) 10
Answer:
அ) 3
10. இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் ………………………
அ) மதுரைக் காண்டம்
ஆ) கூடற் காண்டம்
இ) திரு ஆலவாய்க் காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer:
இ) திரு ஆலவாய்க் காண்டம்
11. இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடற்புராணத்தில் எத்தனையாவது படலம்?
அ) 64
ஆ) 56
இ) 46
ஈ) 48
Answer:
ஆ) 56
12. அரசரும் புலவருக்குக் ……………………… வீசுவர்.
அ) கவண்
ஆ) கணையாழி
இ) கவரி
ஈ) கல்
Answer:
இ) கவரி
13. குலேசபாண்டியன் ……………………… நாட்டை ஆட்சி புரிந்தான்.
அ) பாண்டிய
ஆ) சேர
இ) சோழ
ஈ) பல்லவ
Answer:
அ) பாண்டிய
14. குலேச பாண்டியன் என்னும் மன்னன் ……………………… புலமையில் சிறந்து விளங்கினான்.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) தெலுங்கு
ஈ) கன்ன டம்
Answer:
அ) தமிழ்
15. சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ………………………
அ) பார்வதி
ஆ) திருமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) பார்வதி
16. சொல்லின் பொருளாக விளங்குவது ………………………
அ) இறைவன்
ஆ) இடைக்காடனார்
இ) கபிலர்
ஈ) பார்வதி
Answer:
அ) இறைவன்
17. சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்ததாக இறைவனிடம் இடைக்காடனார் ……………………… கூறிச் சென்றார்.
அ) அழுகையுடன்
ஆ) சினத்துடன்
இ) ஏளனத்துடன்
ஈ) உருக்கத்துடன்
Answer:
ஆ) சினத்துடன்
18. இடைக்காடனாரின் சொல் ……………………… போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.
அ) கூரிய அம்பு
ஆ) வேற்படை
இ) தீ
ஈ) விடமுள்
Answer:
ஆ) வேற்படை
19. ………………………ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி இறைவன் அங்குச் சென்று இருந்தார்.
அ) காவிரி
ஆ) கங்கை
இ) வைகை
ஈ) தாமிரபரணி
Answer:
இ) வைகை
20. திரு ஆலவாய்க் கோவிலை விட்டு வெளியேறிய இறைவன் – வடிவத்தை மறைத்து………………………வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.
அ) நரசிங்க
ஆ) பலராம
இ) இலிங்க
ஈ) சர்ப்ப
Answer:
இ) இலிங்க
21. கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ………………………
அ) குலேச பாண்டியன்
ஆ) இறைவன்
இ) இடைக்காடனார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) இறைவன்
22. மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து ……………………… இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.
அ) மரகத
ஆ) பொன்
இ) தன்
ஈ) வைர
Answer:
ஆ) பொன்
23. கேள்வியினான், காடனுக்கும் கபிலனுக்கும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
ஆ) எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
இ) முற்றெச்சம், உம்மைத் தொகை
ஈ) வினையெச்சம், தொழிற் பெயர்
Answer:
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
24. ‘மாசற விசித்த வார்புறு வள்பின்’ என்று பாடிய புலவர் _ பாடப்பட்டவன்
அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஆ) ஔவையார், அதியமான்
இ) பரணர், தலையாளங்கானத்துச் செருதவன்ற பாண்டியன்
ஈ) கபிலர், பாரி
Answer:
அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
25. அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் ……………………… கவரி வீசிய மன்னர் ………………………
அ) இடைக்காடனார், குலேச பாண்டியன்
ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
இ) கபிலர், பாரி
ஈ) பரணர், பேகன்
Answer:
ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
புதியநம்பிக்கை
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் ………………………..உருவாக்கிடக் காரணமானது.
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
ஆ) தெருமுனையில் ஒரு கல்லூரியை
இ) மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
ஈ) கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை
Answer:
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
2. மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த
விதங்கள்………
i) சமையல் செய்து
ii) தோட்டமிட்டு
iii) பொது இடங்களில் பாட்டுப் பாடி
iv) பிச்சையெடுத்து
அ) i, ii, iii – சரி
ஆ) ii, iii, iv – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
அ) i, ii, iii – சரி
3. அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன் – சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்.
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
ஆ) கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட
இ) மறுமணம் மறுக்கப்பட்ட
ஈ) உழைக்கும்
Answer:
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
4. மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்
அ) அகிலன்
ஆ) கமலாலயன்
இ) கீதாலயன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) கமலாலயன்
5. கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்
அ) திருநெல்வேலி
ஆ) மதுரை
இ) தூத்துக்குடி
ஈ) குமரி
Answer:
இ) தூத்துக்குடி
6. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) நற்றிணை
Answer:
இ) ஐங்குறுநூறு
0 கருத்துகள்