Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th Tamil unit 5 Question and Answers

10th Tamil unit 5 

Question and Answers 

10th Tamil unit 5 Question and Answers  | 10th Tamil unit 5 Short answers | 10th Tamil unit 5 one marks  Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil unit 5 one marks 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST

10th Tamil unit 5 Question and Answers | 10th Tamil unit 5 Short answers

10th Tamil Unit 5  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 5 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 5  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths 

10th Tamil unit 5 Question and Answers | 10th Tamil unit 5 Short answers


 Tamilnadu Samacheer Kalvi 
10th Tamil Solutions 
10th Tamil unit 5 Short answers

மொழிபெயர்ப்புக் கல்வி

குறுவினா

1. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுது.
தாய்மொழித் தமிழும் உலகப்பொதுமொழி ஆங்கிலமும் தவிர, நான் கற்க விரும்பும் மொழி இந்தி.
இந்தி கற்க விரும்பும் காரணம் :
இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
வடநாட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவும் மொழி இந்தி.

சிறுவினா

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா! நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?
அப்துல் கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார். இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர்போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோடே பள்ளிக்கு வா. படித்துப் பணிக்குப் போகலாம்.
அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.

2. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு
ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால் ஒருவர் பேசும்போதேமொழிபெயர்ப்பது, விளக்குவது என்று (InterPreting)சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Head Phone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வெளியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தன்முன் உள்ள காதணி கேட்பியை (Head Phone) எடுத்து பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.
இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக.
ஐ.நா.அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
மொழி பெயர்ப்பு என்றால் என்ன?
பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படிப் புரிந்து கொள்கின்றனர்?
மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
ஐ.நா.அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப் படுகிறது?
ஐ.நா.அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
‘விளக்குவது’ (Inter Preting) என்றால் என்ன?

குறுவினா

1. மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை, வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார் மணவை முஸ்தபா.

2. மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை யாது?
ஒரு மொழி, வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது.

3. மொழிபெயர்ப்பு குறித்து மு.கு ஜகந்நாதர் குறிப்பிடுவது யாது?
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்று மு.கு. ஜகந்நாதர் குறிப்பிடுகிறார்.

4. மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் எது?
தொல்காப்பியர் மரபியலில் மொழிபெயர்த்தல் என்ற தொடரைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதை உணர முடிகிறது.

5. சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நிறுவுக.
‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பின் மூலம் சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை உணர முடிகிறது.

6. வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் யாவை?
வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள். பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியவை ஆகும்.
16.  

7. பிறமொழிக் கருத்துகள் சங்க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப்பட்டன என்பதை விளக்குக.
வடமொழியில் வழங்கிவந்த இராமாயண மகாபாரத செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று இருப்பதைக் காணும்போது பிறமொழிக் கருத்துகள் சங்க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப் பட்டன என்பதை உணர முடிகிறது.

8. மொழிபெயர்ப்பு முயற்சியை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை?
சாகித்திய அகாதமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம் ஆகியவை மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொண்ட நிறுவனங்கள் ஆகும்.

9. இந்திய அரசு மக்களிடையே மொழிபெயர்ப்பை எதற்குப் பயன்படுத்தியது?
மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பை இந்திய அரசு கருவியாக பயன்படுத்தியது.

10 . அனைத்துலக அறிவையும் எளிதில் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
மொழிபெயர்ப்பைக் கல்வியாகவும் அதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதில் பெறலாம்.
 

11. பிறநாட்டுத் தூதரகங்கள் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதன் நோக்கம் யாது?
பிறநாட்டுத் தூதரகங்கள் தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்றவற்றை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனே தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றன.

12. பிறநாட்டு மொழிகள் எங்கு கற்பிக்கப்படுகிறது?
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பிறநாட்டு மொழிகளைக் கற்கலாம். சில தனியார் நிறுவனங்களும் பிற நாட்டு மொழிகளைக் கற்பிக்கின்றன.

13. மொழிபெயர்ப்பு எதற்கு உதவுகிறது?
பிற மொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

14. மொழி வேலியை மொழிபெயர்ப்பு அகற்றுகிறது என்பதை விளக்குக.
கலைச் சிறப்புடையதாக இருக்கின்ற இலக்கியங்கள் அனைவரது அனுபவமாக மாறும்போது பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழியை வெளியே அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.



15. ஜெர்மன் யாரை தன் நாட்டு படைப்பாளியாகக் கொண்டாடுகிறது? ஏன்?
ஷேக்ஸ்பியர்.
காரணம்:
ஷேக்ஸ்பியர் தாம் எழுதிய நூலை ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய்த காரணத்தால் ஜெர்மன் தன் நாட்டுப் படைப்பாளியாகக் கொண்டாடுகிறது.

16. ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழ் மொழியில் அறிமுகமான பிறமொழி நூல்கள் யாவை?
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாக பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின. இவற்றில் தரமான நூல்கள் குறைவே.

17. மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை யாது?
தமிழ் மொழிக்குரிய நூலாகிய திருக்குறள் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணமாக உலகப் பொதுமறையாக உயர்ந்தது.

18. மொழிபெயர்ப்பின் தோற்றம் குறித்து எழுதுக.
எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழிபெயர்ப்பு தொடங்கியது.

19. மொழிபெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன்மை பெறும் முறைகள் யாவை?
கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன மொழிபெயர்ப்பு வாயிலாகவே சர்வதேசத் தன்மை பெறுகின்றன.

20. தன் நூலை தானே மொழிபெயர்த்தவர் யார்? அதனால் அவருக்கு கிடைத்த சிறப்பு யாது?
இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

21. மொழிபெயர்க்கப்படாமையால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?
மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

22. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?
ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.

23. ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியையும் அறிவையும் மதிப்பிடுவது எது?
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

 24. இப்பொழுது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?
பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

25. இலக்கியத் திறனாய்வு கொள்கை பற்றி எழுதுக.
மொழிபெயர்ப்பின் மூலம்தான் நாம் இலக்கியத்திறனாய்வு கொள்கைகளைப் பெற்று இருக்கிறோம். இன்றுள்ள திறனாய்வு குறைகளை எல்லாம் நாம் ஆங்கிலத்தின் வழியாகவே பெற்றிருக்கிறோம்.

சிறுவினா


1. மொழிபெயர்ப்பு பற்றி அறிஞர்கள் கூறும் கருத்து யாது?
மணவை முஸ்தபா :
‘ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார். மு.கு. ஜகந்நாதர்.
‘ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும் உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்’ என்கிறார்.

 
2. மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் கலங்கம் நேர்ந்தது விவரி.
உலகப் போரின்போது அமெரிக்கா சரணடையாவிட்டால் குண்டு வீசப்படும் என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், ‘மொகு சாஸ்ட்டு’ என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹிரோஷிமாவில் குண்டு வீசியது என்று சொல்கிறார்கள். அந்தத்தொடருக்கு விடைதர அவகாசம் வேண்டும்’ என்பதாம். ஆனால் அதற்கு அமெரிக்கர்கள் ‘மறுக்கிறோம்’ என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர். அதனால்தான் அழிவு தரும் களங்கம் நேர்ந்தது; மொழிபெயர்ப்புச் சரியாக அமைந்து இருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும்.

3. இடம்பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதைச் சான்றுடன் விவரிக்க.
Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிற போது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைநோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்க ப்பட்டன. இதற்கு மாறாக Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும்போது படியெடுத்தல், மாறுதல், உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை. எனவே இடம் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

 நீதி வெண்பா

குறுவினா

1. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!
கற்போம்! கற்போம்!
மயக்கம் விலக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!
 
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
பெருக்கி – வினையெச்சம்
திருத்தி – வினையெச்சம்
அகற்றி – வினையெச்சம்
அருந்துணை – பண்புத்தொகை
போற்று – வினையெச்சம்

குறுவினா

1. ஏன் கல்வியைப் போற்றிக் காக்க வேண்டும் எனச் செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே, அதைப் போற்றிக் கற்க வேண்டும் எனச் செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.

2. சதாவதானம் குறிப்பு வரைக.
‘சதம்’ என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.

3. செய்குதம்பிப் பாவலர் ஏன் சதாவதானி என்று போற்றப்படுகிறார்?
செய்குதம்பியார் 1907 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டப் பெற்றார். அன்று முதல் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

4. செய்குதம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
பெயர் : செய்குதம்பிப் பாவலர்
காலம் : 1874 – 1950
ஊர் : கன்னியாகுமரி – இடலாக்குடி
சிறப்பு : 15 வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றல், 1907இல் சதாவதானி பட்டம் பெற்றார்.

 திருவிளையாடற் புராணம்

குறுவினா

1. “கழிந்த பெரும்கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்”
– இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல் மிகு கேண்மையினான் யார்?
கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்டியன்.
காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்.
 
2. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

சிறுவினா

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
குலேச பாண்டியன் தமிழ்ப் புலமை வாய்ந்தவன்.
அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.
இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்.
இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.
இதையறிந்த மன்னன் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்ந்தீர்? என்று வருந்தினான்.
இறைவன், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.
தன் தவறை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.
கற்றோர் – வினையாலணையும் பெயர்
உணர்ந்தகபிலன் – பெயரெச்சம்
தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகைகள்
ஒழுகுதார் – – வினைத்தொகை
மீனவன் – ஆகுபெயர்

குறுவினா

1. நும் கவிதைப் பேழைப் பகுதி அமைந்த திருவிளையாடற்புராணப் பாடல் அமைந்த காண்டம் மற்றும் படலம் எது?
காண்டம்: திரு ஆலவாய்க் காண்டம்
படலம் : இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

2. “சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே” என்று யார் யாரிடம் கூறியது?
இடைக்காடனார் இறைவனிடம் கூறினார்.

3. ‘நின்இடம் பிரியா இமையப் பாவை’ – இவ்வடிகளில் சுட்டப்படுபவர் யார்?
ஈசனின் இடத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவியே இவ்வடிகளில் சுட்டப்படுகின்றார்.

4. ‘சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன்’ – பொருளானவன் யார்? இகழ்ந்தவன் யார்?
1.பொருளானவன் – திருஆலவாய் இறைவன் ஈசன்
2. இகழ்ந்தவன் – குலேச பாண்டியன்

5. “பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்” யார் யாரிடம் கூறியது?
குலேச பாண்டியன் இறைவனிடம் (ஈசன்) கூறினார்.

6. “யாம் அவனிடத்தில் வைத்த அருளினால் வந்தேம்” என்று யார் யாரிடம் கூறியது?
இறைவன் (ஈசன்) குலேச பாண்டியனிடம் கூறினார்.

7. “யாம் அவனிடத்தில் வைத்த அருளினால் வந்தேம்” என்று இறைவன் கூறக் காரணம் யாது?
இடைக்காடனாரின் செய்யுளை குலேச பாண்டியன் இகழ்ந்தான். இறைவன் இடைக்காடனாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததனால் இறைவன் கோவிலை விட்டு நீங்கினான்.

8. “சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமையன்றோ
எண்ணிய பெரியோர்க்கு” என்று யார் யாரிடம் கூறியது?
குலேச பாண்டியன் இறைவினடம் (ஈசன்) கூறினார்.
 
9. சொல் வடிவாய் நின்றவர் யார்? சொல் பொருளாய் விளங்கியவர் யார்?
சொல் வடிவாய் நின்றவர்: பார்வதி தேவி
சொல் பொருளாய் விளங்கியவர்: இறைவன் (ஈசன்)

10 .“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமையன்றோ
எண்ணிய பெரியோர்க்கு” – இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள் எவை?
சிறியோர் – பெரியோர்

11 .“தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது” என்று யார் யாரிடம் கூறியது?
புலவர் இடைக்காடனார் குலேச பாண்டியனிடம் கூறினார்.

12.“பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப்பரவித் தாழ்ந்தவன்” என்று யார் யாரிடம் கூறியது?
குலேச பாண்டியன் புலவர் இடைக்காடனாரிடம் கூறினார்.

13.  பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப்பரவித் தாழ்ந்தவன்” பண்ணிய குற்றம் யாது?
குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தார். அதனால் இறைவன் கோயிலை விட்டு நீங்கினார்.

14. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – சொல்லேருழவன் யார்? வில்லேருழவன் யார்?
சொல்லேருழவன் (புலவன்) – மோசிகீரனார்
வில்லேருழவன் (மன்னன்) – தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

சிறுவினா

1. “பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்” என்று பாண்டியன் இறைவனிடம் வினவியதை எழுதுக.
இறைவனே, என்னால், என்படைகளால், என்பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா?
வேதங்களை பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினாரா?
தவமும் தருமமும் சுருங்கியதோ?
இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ?
– எமது தந்தையே யான் அறியேன் என்று குலேச பாண்டியன் இறைவனிடம் 
வினவினான்.

2. “பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டல்:
பெரிய புராணம் திரு ஆலவாய்க் காண்டத்தில், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில் குலேச பாண்டியன் இறைவனிடம் வினவினான்.
பொருள் விளக்கம்:
இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? வேதங்களை பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினாரா? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியனே என்று பாண்டியன் இறைவனிடம் வினவினான்.

3. “சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமையன்றோ
எண்ணிய பெரியோர்க்கு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டல்:
பெரிய புராணம் திரு ஆலவாய்க் காண்டத்தில், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில் குலேச பாண்டியன் இறைவனிடம் வினவினான்.
பொருள் விளக்கம்:
வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டுப் பாண்டியன், “பார்வதி தேவியை ஒரு பாகத்தில் கொண்டபரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா?” என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்