Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th Tamil unit 6 one mark Question and Answer

  10th Tamil unit 6 one marks 

10th Tamil unit 6 one marks  Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil unit 6 one marks 10th standard Tamil unit 6 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 6 Question And Answers 

 10th Tamil unit 6 one mark Question and Answers 

10th Tamil Unit 6  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 6 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 6 நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths

 10th Tamil unit 6 one marks question and answers

Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions 

10th Tamil Unit 6 One Marks

நிகழ்கலை

 10th Tamil unit 6 one mark Question and Answers 

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது. ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
Answer:
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக

1. சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
ii) மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலாக், தப்பு
iii) ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
iv) தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
 
2. பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை
iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை
அ) 4, 1, 3, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 1, 2, 4, 3
ஈ) 4, 3, 1, 2
Answer:
இ) 1, 2, 4, 3

3. தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு?
அ) மூன்று முதல் பதின்மூன்று
ஆ) எட்டு முதல் பத்து
இ) பத்து முதல் பதின்மூன்று
ஈ) எட்டு முதல் பதின்மூன்று
Answer:
ஈ) எட்டு முதல் பதின்மூன்று
 
4. சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?
அ) நிகழ்கலைகள்
ஆ) பெருங்கலைகள்
இ) அருங்கலைகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நிகழ்கலைகள்

5. கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
அ) குட ஆட்டம்
ஆ) கும்பாட்டம்
இ) கொம்பாட்டம்
ஈ) செம்பாட்டம்
Answer:
ஆ) கும்பாட்டம்

6. கரகாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகள் …………………..
i) நையாண்டி மேள இசை
ii) நாகசுரம்
iii) தவில்
iv) பம்பை
அ) i, ii – சரி
ஆ) i, ii, iii – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – சரி
Answer:
இ) நான்கும் சரி
 
7. கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
அ) 12
ஆ) 2
இ) 24
ஈ) வரையறை இல்லை
Answer:
ஈ) வரையறை இல்லை

8. “நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) நற்றிணை
Answer:
ஆ) புறநானூறு
 
9. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
அ) பத்து
ஆ) பதினொரு
இ) ஏழு
ஈ) எண்
Answer:
ஆ) பதினொரு

10. குடக்கூத்து என்பது, …………………………
அ) மயிலாட்டம்
ஆ) கரகாட்டம்
இ) பொம்மலாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
ஆ) கரகாட்டம்

11. கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) தேவராட்டம்
Answer:
அ) மயிலாட்டம்
 
12. காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் …………………
அ) சோலை
ஆ) பாரந்தாங்கும் கோல்
இ) கால்
ஈ) காவல்
Answer:
ஆ) பாரந்தாங்கும் கோல்

13. இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது…………….
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) காவடியாட்டம்

14. மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று எதன் அடிப்படையில் அழைக்கின்றனர்?
அ) அமைப்பு
ஆ) நிறம்
இ) அழகு
ஈ) வடிவம்
Answer:
அ) அமைப்பு

 
15.இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது…………….
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) காவடியாட்டம்
Answer:
ஈ) காவடியாட்டம்

16. ஒயிலாட்டம் ஆடுவோரின் வரிசை எண்ணிக்கை …………………
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) இரண்டு

17. தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) சிறுவர்கள்
ஈ) முதியவர்கள்
Answer:
அ) ஆண்கள்
 
18.  தேவராட்டம், ………. ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
அ) வானத்துத் தேவர்கள்
ஆ) விறலியர்
இ) பாணர்கள்
ஈ) அரசர்கள்
Answer:
அ) வானத்துத் தேவர்கள்

19. உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….
அ) தேவதுந்துபி
ஆ) சிங்கி
இ) டோலக்
ஈ) தப்பு
Answer:
அ) தேவதுந்துபி

20. தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ………………………
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) தேவராட்டம்
ஈ) சேவையாட்டம்
Answer:
இ) தேவராட்டம்
 
21. தேவராட்டம் எவ்வகை நிகழ்வாக ஆடப்படுகின்றது?
அ) அழகியல்
ஆ) நடப்பியல்
இ) சடங்கியல்
ஈ) வாழ்வியல்
Answer:
இ) சடங்கியல்

22. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை…………………………..
அ) மயிலாட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) சேவையாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) சேவையாட்டம்

23. சேவையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
i) சேவைப்பலகை
ii) சேமக்கலம்
iii) ஜால்ரா
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, iii – சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி
 
24. எந்தப் பண்புகளைக் கொண்டு நிகழ்த்திக்காட்டும் கலை பொய்க்கால் குதிரையாட்டம் ஆகும்?
அ) போலச் செய்தல்
ஆ) இருப்பதைச் செய்தல்
இ) மெய்யியல்
ஈ) நடப்பியல்
Answer:
அ) போலச் செய்தல்

25. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம்
ஈ) காவடியாட்டம்
Answer:
இ) பொய்க்கால் குதிரையாட்டம்

26.பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?
அ) சோழர்
ஆ) நாயக்கர்
இ) மராட்டியர்
ஈ) ஆங்கிலேயர்
Answer:
இ) மராட்டியர்

27. இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுவது?
அ) காவடியாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்
Answer:
ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்
 
28. பாடல்கள் பயன்படுத்தாத ஆட்ட வகை……………….
அ) கரகம்
ஆ) பொய்க்கால் குதிரை
இ) காவடி
ஈ) மயில்
Answer:
ஆ) பொய்க்கால் குதிரை

29. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
i) நையாண்டி மேளம்
ii) நாகசுரம்
iii) தவில்
iv) டோலக்
அ) i, ii – சரி
ஆ) iii, iv – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
அ) i, ii – சரி

30. தப்பு என்பது……………….
அ) தோற்கருவி
ஆ) துளைக்கருவி
இ) நரம்புக்கருவி
ஈ) தொழிற்கருவி
Answer:
அ) தோற்கருவி
 
31. “தகக தகதகக தந்தத்த தந்தக்க
என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”
– என்ற தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்யும் நூலாசிரியர், நூல்?
அ) அண்ணாமலையார், காவடிச்சிந்து
ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்
இ) திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
Answer:
ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்

32. பறை என்று அழைக்கப்படும் ஆட்டம்……………….
அ) தப்பாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) கரகாட்டம்
Answer:
அ) தப்பாட்டம்

33. ……………….குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது.
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) யாப்பருங்கலம்
Answer:
ஆ) தொல்காப்பியம்
 
34. சொல்லுவது போன்றே இசைக்கவல்ல தாளக் கருவி……………….
அ) பறை
ஆ) தவில்
இ) டோலக்
ஈ) உறுமி
Answer:
அ) பறை

35. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது………………..
அ) கரகாட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) புலி ஆட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) புலி ஆட்டம்

36. ……………….தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
அ) காளி
ஆ) மாரி
இ) சர்க்கை
ஈ) திரௌபதி
Answer:
ஈ) திரௌபதி

37. நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்ட கலை……………….
அ) புலி ஆட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) தெருக்கூத்து
ஈ) குடக்கூத்து
Answer:
இ) தெருக்கூத்து
 
38. களத்துமேடுகளில் நிகழ்த்தப்பட்டது எது?
அ) புலி ஆட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) குடக்கூத்து
ஈ) தெருக்கூத்து
Answer:
ஈ) தெருக்கூத்து

39. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) பேரா. லூர்து
இ) வானமாமலை
ஈ) அ.கி. பரந்தாமனார்
Answer:
அ) ந. முத்துசாமி

40. நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) சங்கரதாசு சுவாமிகள்
இ) பரிதிமாற்கலைஞர்
ஈ) தி.வை. நடராசன்
Answer:
அ) ந. முத்துசாமி

 10th Tamil unit 6 one mark Question and Answers 

பூத்தொடுத்தல்


பலவுள் தெரிக

1. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால்
ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால்
ஈ) காம்பு முறிந்தால்
Answer:
ஆ) தளரப் பிணைத்தால்

பலவுள் தெரிக

1. இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?
அ) உமா மகேஸ்வரி
ஆ) இரா. மீனாட்சி
இ) இந்திர பார்த்தசாரதி
ஈ) தாமரை
Answer:
அ) உமா மகேஸ்வரி
 
2. கவிஞர் உமா மகேஸ்வரி எங்குப் பிறந்தார்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) சேலம்
ஈ) தேனி
Answer:
அ) மதுரை

3. உமா மகேஸ்வரி, தற்போது வாழ்ந்து வருகின்ற மாவட்டம் யாது?
அ) தேனி, ஆண்டிபட்டி
ஆ) மதுரை, அனுப்பானடி
இ) தஞ்சாவூர், வல்லம்
ஈ) திருச்சி, உறையூர்
Answer:
அ) தேனி, ஆண்டிபட்டி

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

பலவுள் தெரிக

1. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) குமரகுருபரர்
 
2. செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஒன்று
Answer:
அ) இரண்டு

3. குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
ஆ) 17

 10th Tamil unit 6 one mark Question and Answers 

 
4. குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) இந்துஸ்தானி
ஈ) மலையாளம்
Answer:
ஈ) மலையாளம்

5. குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) கந்தர் கலிவெண்பா
ஆ) நீதிநெறி விளக்கம்
இ) மதுரைக் கலம்பகம்
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Answer:
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
 
6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூ ல்களை இயற்றியவர்.
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) ஞானியாரடிகள்
Answer:
அ) குமரகுருபரர்

7. சிற்றிலக்கியங்களின் வகைகள்……………
அ) 16)
ஆ) 64
இ) 96
ஈ) 108
Answer:
இ) 96
 
8. பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ……………
அ) 8
ஆ) 10
இ) 12
ஈ) 7
Answer:
ஆ) 10

9. பொருத்திக் காட்டுக :
i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
 
10. ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) சிற்றில்
ஆ) சிறுபறை
இ) சிறுதேர்
ஈ) ஊசல்
Answer:
ஈ) ஊசல்

11. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) கழங்கு
ஆ) அம்மானை
இ) ஊசல்
ஈ) சிற்றில்
Answer:
ஈ) சிற்றில்
 
12. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் ……………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 10
Answer:
ஆ) 7

13. பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் ……………
அ) 6
ஆ) 3
இ) 7
ஈ) 5
Answer:
ஆ) 3

14. காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம்
அ) காப்பு
ஆ) செங்கீரை
இ) தால்
ஈ) சப்பாணி
Answer:
ஆ) செங்கீரை
 
15. செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம் எது?
அ) 3 – 4
ஆ) 5 – 6
இ) 7 – 8
ஈ) 9 – 10
Answer:
ஆ) 5 – 6

16. கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் ……………
அ) காலில்
ஆ) இடையில்
இ) நெற்றியில்
ஈ) காதில்
Answer:
அ) காலில்

17. குண்டலமும், குழைகாதும், ஆடுக. இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) எண்ணும்மை, வினையெச்சம்
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
இ) முற்றும்மை, வினையெச்சம்
ஈ) உம்மைத்தொகை, வியங்கோள் வினைமுற்று
Answer:
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
 
18. ‘பதிந்து’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ……………
அ) பதி + த்(ந்) + த் + உ
ஆ) பதி + த் + த் + உ
இ) பதி + த் + ந் + உ
ஈ) பதிந்து + உ
Answer:
அ) பதி+த்(ந்)+த்+உ

19. குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
அ) சுவாமி மலை முருகன்
ஆ) வைத்தியநாத முருகன்
இ) திருக்கழுக்குன்ற முருகன்
ஈ) திருச்செந்தூர் முருகன்
Answer:
ஆ) வைத்தியநாத முருகன்
 
20. “கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட” – என்ற அடிகளில்
இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள் ……………
அ) மோனை, இயைபு
ஆ) மோனை, எதுகை
இ) எதுகை, இயைபு
ஈ) இயைபு, முரண்
Answer:
அ) மோனை, இயைபு

 10th Tamil unit 6 one mark Question and Answers 


21. ‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் ……………
அ) வயிறு
ஆ) பெருக்கம்
இ) தலை
ஈ) சுருக்கம்
Answer:
அ) வயிறு

கம்பராமாயணம்


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
Answer:
ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பலவுள் தெரிக

1. பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?
ஆ) கங்கை ஆறு
இ) நர்மதை ஆறு
ஈ) யமுனை ஆறு
Answer:
அ) சரயு ஆறு
 
2. கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
அ) செண்பகம்
ஆ) கமுகு
இ) குருக்கத்தி
ஈ) கொன்றை
Answer:
இ) குருக்கத்தி

3. கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?
அ) இராமகாதை
ஆ) இராமாயணம்
இ) கம்பராமாயணம்
ஈ) இராமாவதாரம்
Answer:
ஈ) இராமாவதாரம்

4. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
Answer:
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
 
5. ‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் …………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்
Answer:
அ) பாரதியார்

6. கம்பர் பிறந்த ஊர் …………….
அ) திருவழுந்தூர்
ஆ) திருக்கடையூர்
இ) திருவாரூர்
ஈ) திருவெண்காடு
Answer:
அ) திருவழுந்தூர்

7. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்…………….
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
அ) ஆறு
 
8. கம்பர் பிறந்த நாடு …………….
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) சேரநாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சோழ நாடு

9. சடையப்ப வள்ளலின் ஊர் …………….
அ) தென்காசி
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருநெல்வேலி
ஈ) திருவழுந்தூர்
Answer:
ஆ) திருவெண்ணெய் நல்லூர்

10. ‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று புகழப்பட்டவர் …………….
அ) புகழேந்தி
ஆ) செயங்கொண்டார்
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
இ) கம்பர்
 
11. கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) சரசுவதி அந்தாதி
ஆ) பதிற்றுப் பந்தாதி
இ) திருக்கை வழக்கம்
ஈ) ஏரெழுபது
Answer:
ஆ) பதிற்றுப் பந்தாதி

12. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் …………….
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்

13. உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
Answer:
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
 
14. ‘தாதுகு சோலைதோறுஞ்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்]

15. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது …………….
அ) சரயு
ஆ) யமுனை
இ) பிரம்மபுத்திரா
ஈ) கங்கை
Answer:
அ) சரயு

16. “தண்டலை மயில்களாட” – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்…………….
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
 
17. ‘வண்மையில்லை’ என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது…………….
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
இ) அல்வழி நல்வழி அறிதல்
ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
Answer:
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை

18. ‘ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவா ரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள் யாவை?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

19 .பொருத்திக் காட்டுக.
i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
அ) 1, 2, 3, 4
இ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 1, 2, 3, 4

 10th Tamil unit 6 one mark Question and Answers 

பாய்ச்சல்


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பாய்ச்சல் என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
அ) சா. கந்தசாமியின் கதைகள்
ஆ) தக்கையின் மீது நான்கு கண்கள்
இ) சுடுமண் சிலைகள்
ஈ) தொலைந்து போனவர்கள்
Answer:
ஆ) தக்கையின் மீது நான்கு கண்கள்
 
2. பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர் ………….
அ) ஜெயகாந்தன்
ஆ) சா. கந்தசாமி
இ) ஜெயமோகன்
ஈ) அகிலன்
Answer:
ஆ) சா. கந்தசாமி

3. சா. கந்தசாமியின் மாவட்டம் …………………….. ஊர்……………………
அ) நாகப்பட்டினம், மயிலாடுதுறை
ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி
இ) திருச்சி, உறையூர்
ஈ) திருவாரூர், வலங்கைமான்
Answer:
அ) நாகப்பட்டினம், மயிலாடுதுறை

4. சா. கந்தசாமி எந்தக் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்?
அ) தொலைந்து போனவர்கள்
ஆ) சூர்ய வம்சம்
இ) சாந்தகுமாரி
ஈ) சுடுமண் சிலைகள்
Answer:
ஈ) சுடுமண் சிலைகள்
 
5. சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் ……………….
அ) சாயாவனம்
ஆ) சூர்ய வம்சம்
இ) சாந்தகுமாரி
ஈ) தொலைந்து போனவர்கள்
Answer:
அ) சாயாவனம்

6. பொருத்திக் காட்டுக. (சா. கந்தசாமியின் படைப்புகள்)
i) தக்கையின் மீது நான்கு கண்கள் – 1. சாகித்திய அகாதெமி விருது
ii) விசாரணைக் கமிஷன் – 2. புதினம்
iii) சுடுமண் சிலைகள் – 3. அனைத்துலக விருது
iv) சூர்ய வம்சம் – 4. சிறுகதைத் தொகுப்பு
அ) 4, 1, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 1, 3, 2
 
7. பாய்ச்சல் கதையில் இடம் பெறுபவர் …………………
அ) அனுமார்
ஆ) இராமன்
இ) வாலி
ஈ) இராவணன்
Answer:
அ) அனுமார்

8. சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல்………………
அ) சூர்யவம்சம்
ஆ) சாந்தகுமாரி
இ) சாயாவனம்
ஈ) விசாரணைக் கமிஷன்
Answer:
ஈ) விசாரணைக் கமிஷன்

 10th Tamil unit 6 one mark Question and Answers 

அகப்பொருள் இலக்கணம்

பலவுள் தெரிக

1. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை , குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
Answer:
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக

1. கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
ஈ) 3, 5, 1, 2, 4

2. பொருத்தமான விடையைக் கண்டறிக.
i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி
அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 5, 1
 
3. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்
Answer:
இ) நெய்தல் – தினை

4. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி
Answer:
அ) கார்காலம்

5. ஐந்திணைகளுக்கு உரியன ……………
i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி
 
6. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

7. மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

8. பொழுது எத்தனை வகைப்படும்?
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) இரு
 
9. பொருத்திக் காட்டுக.
i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

10 .இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………
அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை
Answer:
ஆ) சித்திரை, வைகாசி

11. ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்
 
12. பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

13. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்
 
14. வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

15. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

 10th Tamil unit 6 one mark Question and Answers 

 
16. நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

17 .பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

18. திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
 
19. திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5

20. பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
 
21. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

22. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5
 
23. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5

24. விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்

25. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை

25. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1

 10th Tamil unit 6 one mark Question and Answers 

கருத்துரையிடுக

0 கருத்துகள்