10th Tamil unit 7 Question and Answer | 10th Tamil unit 7 one mark Question and Answer | 10th Tamil unit 7 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 7 one marks | 10th Tamil Unit 7 Big Question and Answers 10th Tamil unit 7 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 7 Question And Answers
10th Tamil unit 7 one mark Question and Answer | 10th Tamil unit 7 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide
Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 7 one mark Question and Answers | 10th Tamil Unit 7 Question and Answers
10th Tamil Unit 7 One Marks | 10th Tamil unit 7 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers
10th Tamil short answers unit 7
சிற்றகல் ஒளி
குறுவினா
1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
- ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
- இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
- இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
- செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.
2. பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.
சிறுவினா
1. ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.
விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார். 25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.
குறுவினா
1. 1906 ஆம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
- ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906இல் பிறந்தார்.
- காந்தியடிகள் சத்தியாகிரக’ அறப்போர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் வ.உ.சி.
2. ம.பொ.சிக்கு அவரது அன்னையார் பயிற்றுவித்த பாக்கள் யாவை?
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பயிற்றுவித்தார்.
3. விடுதலைப் போரில் ஈடுபட தமிழர்க்கு ம.பொ.சி எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
- 30.09.1932ல் ‘தமிழா துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை மக்களிடையே வழங்கினார்.
- பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்நாடு, ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்தார்.
4. ம.பொ.சி. சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியக் காரணம் என்ன?
சிலப்பதிகாரம் தமிழினத்தின் பொதுச்சொத்து. இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும், தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு உண்டான செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்பட்டதால் மக்களிடையே சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றார்.
5. ம.பொ.சி வகித்த பதவிகளைக் குறிப்பிடுக.
- 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
- 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர் – போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
6. ம.பொ.சி வாழ்நாள் மகிழ்ச்சியாக எதனைக் குறிப்பிடுகிறார்?
- புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வட எல்லை வேங்கட மலையாகவும், தென் எல்லை குமரிமுனையாகவும் உள்ளது.
- இதனைப் படித்தபோது ம.பொ.சி மகிழ்ந்து, ‘மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது தவப்பயன். இத்தெய்வீக எல்லையை, தமிழகம் திரும்பப் பெற்றதே தன் வாழ்நாள் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடுகிறார்.
7. விடுதலைப் போரில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களாக மா.பொ.சி. குறிப்பிடுவோர் யாவர்?
காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்.
8. ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் யார்? அவரின் பெற்றோர் யாவர்?
- ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் மா.பொ.சிவஞானம்.
- அவரின் பெற்றோர் : பொன்னுசாமி – சிவகாமி
9. மா.பொ.சிக்குச் சிவஞானம் என்னும் பெயர் அமையக் காரணம் யாது?
- மா.பொ.சிக்குப் பெற்றோர் இட்டபெயர் : ஞானப்பிரகாசம்
- சரபையர் என்ற முதியவர் ஒருவர் ‘ஞானப்பிரகாசம்’ என்ற இயற்பெயரை மாற்றி சிவஞானி’ என்று அழைத்தார்.
- சிவஞானி என்ற பெயர் திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.
10. அறிவு விளக்கம் பெற மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி யாது?
- அறிவு விளக்கம் பெறுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி, மற்றொன்று கேள்வி.
- ஏட்டுக் கல்வி நின்று போனதால் மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி கேள்வியாகும்.
11. பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க புனித நாள் எது, ஏன்?
- 1942 ஆகஸ்டு 8.
- இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்.
12. சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் எது?
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம்: மலபார்
13. கேரளாவிலிருந்து சென்னை மாநிலத்திற்கு இணைந்த பகுதிகள் யாவை?
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை.
சிறுவினா
1. ‘சென்னையை மீட்போம்’ – என்று ம.பொ.சி. குறிப்பிடுவது பற்றி எழுதுக.
- ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று சில ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
- தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் இராஜாஜி
முன்வந்தார்.- மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு சென்னை பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டது.
- தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கிய தன்விளைவாக 25.08.1953 அன்று சென்னை தமிழருக்கே என்பது உறுதியானது என்று சென்னையை மீட்போம்’ என்று சென்னையை மீட்டது குறித்து ம.பொ.சி குறிப்பிடுகிறார்.
2. மார்ஷல் ஏ. நேசமணி – குறிப்பு வரைக.
- இளம் வயதில் சமூக விடுதலைக்காகப் போராடியவர்.
- நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
- குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘மார்ஷல்’ என்று அழைக்கப்பட்டார்.
- 1956 நவம்பர் 1-இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழக தென் எல்லையாக மாறக் காரணமானவர்.
- தமிழக அரசு இவர் நினைவாக நாகர்கோவிலில் சிலையோடு மணி மண்டபமும் அமைத்துள்ளது.
3. பண்டைய ‘கடல் கடந்த தமிழ் வணிகம்’ குறித்து எழுதுக.
- ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ‘பேபிரஸ்தாளில்’ எழுதப்பட்ட கையெழுத்து சுவடி கண்டு பிடிக்கப்பட்டது.
- அச்சுவடியில் சேரர் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும், எகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
- இது கி.பி. 2ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும்.
- இதிலிருந்து பண்டைத் தமிழர் கடல் கடந்த வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பதை அறியலாம்.
4. மா.பொ.சிவஞானம் குறிப்பு வரைக
பெயர் : மா.பொ.சிவஞானம் பெற்றோர்
இட்ட பெயர் : ஞானப்பிரகாசம்
பெற்றோர் : பொன்னுச்சாமி – சிவகாமி
பெயர் மாற்றம் : சரபையர் என்ற முதியவர் இவரைச் ‘சிவஞானி’ என்றே அழைத்தார். அதுவே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்றானது.
சிறப்பு : சிலப்பதிகாரத்தின் பெருமையை உலகறியச் செய்ததால் ‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுகின்றார்.
படைப்புகள் : எனது போராட்டம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு முதலியன.
பணி : சிறந்த விடுதலைப்போராட்ட வீரர், 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர்.
விருது – 1966ல் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது
அரசு : தமிழக அரசு திருத்தணி மற்றும் சென்னை தியாகராயநகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
5. சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறுவது யாது?
- நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணம் உண்டு.
- திருக்குறளையோ , கம்பராமாயணத்தையோ விரும்பாதவன் அல்லன்.
- ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டு என்றால் , அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
- இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.
- என்று சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறினார்.
6. சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் ‘புத்தகப்பித்தன்’ என்பதை நிறுவுக.
- நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையைப் போக்க பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று, விருப்பமான புத்தகங்களை, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் மா.பொ.சிவஞானம் .
- உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகம் வாங்கி, பல வேளைகளில் பட்டினிகிடந்தார்.
- குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்தால் பேரானந்தம் அடைவார்.
- இவர் தன்னுடைய வாழ்நாளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் பல்லாயிரக் கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்கிறார்.
- இதன் மூலம் சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம், புத்தகப்பித்தன்’ என்பதை அறியலாம்.
ஏர் புதிதா?
சிறுவினா
1. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?
- முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈரத்தால் பண்பட்டது.
- விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலேகாளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடனும், வலிமையுடனும் உழைத்தனர். நாற்று நட்டனர்.
- மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
தொழுது, விரைந்து, அமுத்து – வினையெச்சம்
நண்பா – விளிவேற்றுமை
பகுபத உறுப்பிலக்கணம்.
விரைந்து- விரை + த்(ந்) + த் + உ
விரை – பகுதி
த்(ந்) – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
குறுவினா
1. கு.ப.ராவின் படைப்புகள் அடங்கிய நூல் தொகுப்புகளைக் குறிப்பிடுக.
அகலிகை, ஆத்மசிந்தனை.
2. கு.ப.ராஜகோபாலன் பணிபுரிந்த இதழ்கள் யாவை?
தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் – ஆகியவையாகும்.
3. பொன் ஏர் பூட்டுதல் விளக்குக.
- வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு
- நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல்’ ஆகும். • இந்நிகழ்வு தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
4. கு.ப.ராஜகோபாலனின் பன்முகங்களைக் குறிப்பிடுக.
சிறுகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்.
5. விரைந்து போ நண்பா எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?
முதல் மழை விழுந்துவிட்டதாலும், மேல் மண் பக்குவமானதாலும், வெள்ளி முளைத்ததாலும் ஏறினைப் பூட்ட விரைந்து போ என்கிறார் கவிஞர்.
6. மண் எப்போது புரளும்?
மாட்டைத் தூண்டி, கொழுவை (கலப்பை இரும்பை) அமுத்தினால் மண் புரளும்.
சிறுவினா
1. ‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்
நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் சுட்டல்:
கு.ப.ராஜகோபாலனின் ‘கு.ப.ரா. படைப்புகளில் ஏர் புதிதா? என்ற கவிதைகளில் இவ்வரிகள் இடம் பெறுகின்றன.
பொருள் விளக்கம்:
பொழுது விடிந்து ஏரின் அடியில் பொன்னொளி பரப்பும் நல்ல காலைப் பொழுதில் ஏர் முனையின் கலப்பை இரும்பை நிலத்தில் நாட்டுவோம்.
மெய்க்கீர்த்தி
குறுவினா
1. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாதவகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.
சிறுவினா
1. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி, பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்திக் காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை . ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து:
பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை . இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.
குறுவினா
1. இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி ஆகியவையாகும்.
2. திசாபாலர் எண்மர் யாவர்? (அல்லது) திசைபாலகர் எட்டு பேர் யாவர்?
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயகுபேரன், ஈசானன் ஆவர்.
3. இராசராசனின் நாட்டில் புலம்புவதும், அடைக்கப்படுவதும் எது?
சோழமன்னனின் ஆட்சியில் சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் எதனை நினைத்தும் துன்புற்றுப் புலம்புவதில்லை
நீர் மட்டுமே தேக்கி வைக்கும் பொருட்டு அடைக்கப்படும். மக்கள் எதற்காகவும் சிறைப்படுத்தி அடைக்கப்படுவதில்லை.
4. காவல்நெறி பூண்டு ஆண்டவன் இராசராசன் என்பதை மெய்க்கீர்த்தி எவ்வாறு கூறுகின்றது?
- தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருந்தான்.
- தாயில்லாதோருக்குத் தாயாய்த் திகழ்ந்தான்.
- மகனில்லாதோருக்கு மகனாய் இருந்தான்.
- உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து காவல் நெறி. பூண்டு ஆண்டான் என்று மெய்க்கீர்த்தி போற்றுகிறது.
5. இராசராசசோழனின் புகழ் பற்றி எழுதுக.
- விழி பெற்ற பயனாகவும்,
- மெய் பெற்ற அருளாகவும்,
- மொழி பெற்ற பொருளாகவும்,
- புகழ் பெற்ற நூல் போலும்
புகழ் அனைத்திற்கும் தலைவனாய்ப் பெருமையுற்று நின்றான்.
6. ‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
சோழ நாட்டில் :
- யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
- சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை
7. ‘செல்லோடையே கலக்குண்பன
வருபுனலே சிறைப்படுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
சோழ நாட்டில் :
ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன. ஆனால் மக்கள் கலக்கமடைவதில்லை.
புனல் (நீர்) மட்டுமே அடைக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் அடைக்கப்படுவதில்லை
8. ‘மையுடையன நெடுவரையே
மருளுடையன இளமான்களே’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
சோழ நாட்டில் :
- நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை.
- இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.
9. ‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
சோழ நாட்டில் :
- குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை.
- செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.
10. “தந்தையில்லோர்க்கு தந்தையாகியுந் தாயாரில்லோர் தாயாராகி” இருப்பவர் யார்?
தந்தையில்லாதவருக்குத் தந்தையாகவும், தாய் இல்லாதவருக்குத் தாயாகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.
11. மைந்தரில்லோர்க்கு மைந்தராகவும் மன்னுயிர்க்குயிராகவும் இருப்பவர் யார்? மகன் இல்லாதவருக்கு மகனாகவும், உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.
சிறுவினா
1. மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.
- அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்.
- பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
- முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.
- மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம், ஆகியவற்றை ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.
2. இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில் எவற்றுக்கெல்லாம் உவமைப்படுத்தப்பட்டுள்ளான்?
- தந்தையில்லாதவருக்குத் தந்தை
- தாயில்லாதவருக்குத் தாய்
- மகனில்லாதவருக்கு மகன்
- உலக உயிர்களுக்கு உயிர்
- விழி பெற்ற பயன்
- மெய் பெற்ற அருள்
- மொழி பெற்ற பொருள்
- புகழ்பெற்ற நூல்
- – ஆகியவற்றுக்கெல்லாம் இராசராச சோழன் உவமைப்படுத்தப்பட்டுள்ளதாக மெய்க்கீர்த்திகள் மூலம் அறியலாம்.
3. சோழ நாட்டில் மையுடையன, மருளுடையன யாவை?
- ‘மை’ என்றால் இருள் என்று பொருள்.
- சோழநாட்டின் மலைப்பகுதியும் மலைக்குகைகளுமே இருள் சூழ்ந்து காணப்படுவன.
- மக்கள் தம் வாழ்வில் வறுமை இருள் சூழ்வதில்லை.
- மருள்’ என்பது ஒருவித பயஉணர்வு ஆகும்.
- அத்தகு மருட்சி இளமான்களின் கண்களில் மட்டுமே காணப்படும். மக்கள் எதற்கும் மருட்சியடைவதில்லை.
4. ‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ -இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.
பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை. சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை.
5. ‘மையுடையன நெடுவரையே
மெருளுடையன இளமான்களே’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.
பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை. இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.
6. ‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.
பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை. செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.
சிலப்பதிகாரம்
குறுவினா
1. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
- பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
- வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
- பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
- உமணர் – உப்பு விற்பவர்
சிறுவினா
1. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்;
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்.
அ) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
Answer:
பகர்வனர், பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
Answer:
பட்டினும் மயிரினும், கட்டு நுண்வினை
ஈ) காருகர் – பொருள் தருக.
Answer:
நெய்பவர் (நெசவாளர்)
உ) இப்பாடலடியில் காணப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?
Answer:
சந்தனமும் அகிலும்.
குறுவினா
1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
2. சிலப்பதிகாரத்தின் காண்டங்கள், காதைகள் குறிப்பிடுக.
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் மூன்று, காதைகள் முப்பது ஆகும். அவை:
புகார்க்காண்டம் – 10
மதுரைக்காண்டம் – 13
வஞ்சிக்காண்டம் –
3. சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் யாவை?
முதல்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக்காப்பியம் – உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
4. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் விளக்குக.
- உரையிடையிட்ட பாட்டுடை என்பது ‘உரைப்பாட்டு மடை’ என்னும் தமிழ்நடை.
- இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
- உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.
5. ‘கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்
மரம் கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
இவ்வடி அமைந்த நூல் எது?
சிலப்பதிகாரம்.
இவ்வடி அமைந்த காதை எது?
இந்திரவிழா ஊரெடுத்த காதை.
கருங்கைக் கொல்லர் எனப்படுபவர் யார்?
Answer:
இரும்புக் கொல்லர்.
இவ்வடியில் அமைந்த தொடை எது?
Answer:
இயைபுத் தொடை – செய்குநரும் கொல்லரும்.
6. மருவூர்ப்பாக்க வீதியில் இருந்த கைவினைத் தொழில் வல்லுநர்கள் யாவர்?
செப்புப் பாத்திரம் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், பொற்கொல்லர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர் ஆகியோர்.
7. இரட்டைக் காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இரட்டைக்காப்பியம் ஆகும்.
காலத்தாலும், கதைத் தொடர்பாலும் தொடர்புடையதாய் இருக்கும்.
8. சிலப்பதிகாரத்தில் மருவூர்ப்பாக்கம் பற்றிய செய்தி இடம் பெறும் காண்டம் மற்றும் காதை யாவை?
மதுரைக் காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை.
9. ‘கூலம் குவித்த கூல வீதியும்’ தொடர் பொருள் கூறுக.
மருவூர்ப்பாக்கத்தில் எட்டு வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்கள் உள்ளன.
10. ‘குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்வழுவின்றி இசைத்து’ இவ்வடிகளில் சுட்டும் குரல் முதலான ஏழிசைகள் யாவை?
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்,
11. ஏழு சுரங்களைச் சுட்டுக.
ஸ, ரி, க, ம, ப, த, நி.
12. நன்கலம் தருநர் – என்று எவரைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது?
இரத்தினம் முதலான அணிகலன்கள் வேலை செய்பவர்.
13. ‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் இளங்கோவடிகள் புலப்படுத்தும் கருத்தினை எழுதுக.
மருவூர்ப்பாக்கத்தில் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகளும் உள்ளன.
14. ‘மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்’ – இவ்வடியில் சிலப்பதிகாரம் சுட்டும் செய்தி யாது?
மீன்விலைப் பரதவர் – மீன் விற்கும் பரதவர்
வெள்உப்புப் பகருநர் – வெண்மையான உப்பு விற்கும் உமணர்
சுட்டும் செய்தி :
மீன்களை விற்பனை செய்யும் நெய்தல் நில பரதவர் மற்றும் வெண்மையான உப்பு விற்கும் உமணர்மருவூர்ப்பாக்கத் தெருக்களில் வணிகம் செய்கின்றனர்.
சிறுவினா
1. ‘பால்வகை தெரிந்த பகுதிப் பாண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :
சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தில் இந்திர விழா காதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
மருவூர்ப்பாக்க வணிக வீதியில் நடைபெற்ற வணிகம்.
விளக்கம் :
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் பலப்பல பண்டங்களின் (பொருட்களின்) விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.
2. மருவூர்ப்பாக்கத் தெருக்களில் எவ்வெவ் மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்?
புகார் நகர மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில் :
வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப்பொருள்கள், அகில் – முதலான மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்.
மங்கையராய்ப் பிறப்பதற்கே
குறுவினா
1. எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?
- ஜவஹர்லால் நேரு
- சரோஜினி நாயுடு
- காந்தியடிகள்
- ஹெலன் கெல்லர் – ஆவர்
2. ராஜம்கிருஷ்ணனின் புகழ்பெற்ற சமூக நாவல்களைப் பட்டியலிடுக.
- கரிப்பு மணிகள்
- குறிஞ்சித்தேன்
- அலைவாய்க் கரையில்
- சேற்றில் மனிதர்கள்
- வேருக்கு நீர் – ஆகியவையாகும்
3. எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இசைத்திறனை எம்மொழிகளிலெல்லாம் வெளிப்படுத்தினார்?
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.
4. கிருஷ்ணம்மாள் களப்பணிபுரிந்த இயக்கங்கள் யாவை?
- ஒத்துழையாமை இயக்கம்
- சட்டமறுப்பு இயக்கம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- பூதான இயக்கம்
- உழுபவருக்கே நில உரிமை இயக்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
5. களஞ்சியம் மகளிர் குழு மூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
- விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
- கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
- அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
- கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
- வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.
6. மகளிர் குழுமூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
- விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
- கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
- அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
- கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
- வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.
புறப்பொருள் இலக்கணம்
குறுவினா
1. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
சிறுவினா
1. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை வஞ்சித்திணை’ ஆகும்.
மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
அவந்தி நாட்டுமன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர் புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு வஞ்சித்திணைக்குப் பொருந்தி வருகிறது.
குறுவினா
1. புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் யாவை?
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
- நொச்சி
- உழிஞை
- தும்பை
- வாகை
- பாடாண்
- பொதுவியல்
- கைக்கிளை
- பெருந்திணை
2. நொச்சிப் பூக்களின் வகைகளைக் குறிப்பிடுக.
மணிநொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண் நொச்சி – போன்றவையாகும்.
3. தும்பைத் திணையை விளக்குக.
பகை கொண்ட வேந்தர்கள் இருவரும் ‘தம் வலிமையே பெரிது’ என்பதை நிலை நாட்டும் பொருட்டு தம் வீரர்களுடன் தும்பைப் பூச்சூடி களம் குறித்துப் போரிடுதல் ஆகும்.
4. பாடாண் திணையை விளக்குக.
- பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
- பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
- போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.
5. பொதுவியல் திணையை விளக்குக.
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
6. புறத்திணை என்பது யாது?
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணையாகும்.
7. ஆநிரை கவர்தல் நடைபெறக் காரணம் யாது?
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளை (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
ஒரு குழுவினர் மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாயிற்று.
போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.
8. போரிடும் அரசர்கள் இருவரும் ஒரே வகைப் பூவைச் சூடுவர் – எப்போது? எவ்வகைப்பூ?
பகை மன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர்.
9. பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் : எட்டு
- வெட்சிப்பூ – வெட்சித்திணை
- கரந்தைப் பூ – கரந்தைத் திணை
- வஞ்சிப்பூ – வஞ்சித்திணை
- காஞ்சிப்பூ – காஞ்சித்திணை
- நொச்சிப்பூ – நொச்சித்திணை
- உழிஞைப்பூ – உழிஞைத்திணை
- தும்பைப்பூ – தும்பைத்திணை
- வாகைப்பூ – வாகைத்திணை
10. பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் : நான்கு.
அவை: பாடாண் திணை, பொதுவியல் திணை, கைக்கிளை, பெருந்திணை
11. தொல்காப்பியர் காலத்தில் அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள் யாவை?
கைக்கிளை, பெருந்திணை.
12. மதில் போர் பற்றிய திணைகள் யாவை?
நொச்சித்திணை, உழிஞைத்திணை.
13. ஆநிரை பற்றிய திணைகள் யாவை?
வெட்சித்திணை, கரந்தைத்திணை.
14. எதிர் எதிர் புறத்திணைகள் யாவை?
- வெட்சித்திணை (கவர்தல்)
- காஞ்சித்திணை (எதிர்போரிடல்)
- கரந்தைத்திணை (மீட்டல்)
- நொச்சித்திணை (கோட்டை காத்தல்)
- வஞ்சித்திணை (மண்ணாசை கருதிப் போரிடல்)
- உழிஞைத்திணை (கோட்டை முற்றுகையிடல்)
15. வெற்றிப்பூ எது?
வெற்றிப்பூ : வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு வாகைப்பூ சூடி மகிழ்வர்.
16 .கல்வி, செல்வம், வீரம் முதலியவற்றைப் புகழ்ந்து பாடும் புறத்திணை எது?
பாடாண் திணை.
17. புறப்பொருள் பற்றி உரையாடியவர்கள் யாவர்?
- கிள்ளிவளவன் : முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்
- சேரலாதன் : பத்தாம் வகுப்பு மாணவர்
18. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெரும்போர் நடக்கின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் :
பகைமன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவர். இது தும்பைத் திணை.
விளக்கம் :
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தங்கள் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் போரிடுவதால், இதனைத் தும்பைத் திணையாகக் கொள்ளலாம்.
19. மலைப்பகுதியில் அரியதாகக் கிடைக்கும் நெல்லிக்கனி. அது நீண்ட ஆயுள் தரும். அதியனே நீவிர் உண்ணாது. எம் சாதல் ஒழிய கொடுத்த பெருமகனே என்று வாழ்த்துகிறார் ஔவையார். இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணம் :
பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது பாடாண் திணையாகும்.
விளக்கம் :
அதியமானின் புகழை ஒளவையார் பாடுவதால், இஃது பாடாண் திணையாகும்.
சிறுவினா
1. புறத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை? விளக்குக.
புறத்திணை 12 வகைப்படும். அவை:
- வெட்சித்திணை – நிரை கவர்தல்
- கரந்தைத்திணை – நிரை மீட்டல்
- வஞ்சித்திணை – வஞ்சிப்பூ சூடி போருக்குச் செல்லுதல்
- காஞ்சித்திணை – காஞ்சிப்பூ சூடி எதிர்த்துப் போரிடல்
- நொச்சித்திணை – கோட்டையைக் காக்க உள்ளிருந்து போரிடுதல்
- உழிஞைத்திணை – கோட்டையைக் கைப்பற்ற சுற்றி வளைத்தல்.
- தும்பைத்திணை – வலிமையை நிலைநாட்ட களம் குறித்துப் போரிடுதல்
- வாகைத்திணை – போரில் வெற்றி பெற்றவன் வாகை சூடி மகிழ்தல்
- பாடாண்திணை – போரை மட்டும் சொல்லாது மன்னனின் பேராண்மைகளைப் பாடுவது
- பொதுவியல் – புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
- கைக்கிளை பெருந்திணை – ஒருதலைக்காமம்
- பெருந்திணை – பொருந்தாக்காமம்.
0 கருத்துகள்