Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 8 Big Question & Answers

10th Tamil Unit 8

நெடுவினா 

Question & Answers  

10th Tamil Unit 8 நெடுவினா  Question & Answers  | 10th Tamil Unit 8  Question and Answers | 10th Tamil Unit 8 2 Marks and 3 Marks | 10th Tamil unit 8 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard  10th Tamil unit 8 one marks | 10th Tamil Unit 8 Big Question and Answers  10th Tamil unit 8 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 8 Question And Answers. 

10th Tamil Unit 8 நெடுவினா  Question & Answers
10th Tamil Unit 8  Question and Answers |10th Tamil unit 8 one mark Question and Answer | 10th Tamil unit 8 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide | 5 Minute Maths

10th Tamil Unit 8  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 8 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 8 நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths |  10th Tamil unit 8 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions  | 10th samacheer kalvi Guide

10th Tamil Unit 8 நெடுவினா  Question & Answers |10th Tamil Unit 8  Question and Answers |10th Tamil unit 8 one marks question and answers | 10th samacheer kalvi

Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 8 one mark Question and Answers | 10th Tamil Unit 8 Question and Answers | 10th Tamil Unit 8 நெடுவினா  Question & Answers

10th Tamil Unit 8  Question and Answers | 10th Tamil Unit 8 One Marks |  10th Tamil unit 8 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers 

10th Tamil Unit 8 நெடுவினா  Question & Answers 

10th tamil unit 8 big questions

சங்க இலக்கியத்தில் அறம்

நெடுவினா

1. பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
உறவினருக்கு மடல்
திருச்சி,
18.03.2020
அன்புள்ள சித்தப்பாவிற்கு இரகு எழுதுவது,
நலம். நலம் அறிய ஆவல்.
நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.
தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.
 
‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார்.
அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு இரகுவே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.
இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
இரகு.ம.
உறைமேல் முகவரி:
 

காலக்கணிதம்

நெடுவினா

1. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படுபொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக! – கண்ண தாசன்
“காலக்கணிதம்”
திரண்ட கருத்து:
கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.
மோனை நயம்:
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
கவிஞன்….
கருப்படு….
இவை சரி
இவை தவறாயின் … மோனை நயம் பெற்று வந்துள்ளது.
 எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் – சீர் எதுகை நயம் அமைந்துள்ளது.
முரண்:
நாட்டுக்கு அரண்
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும். ஆக்கல் x அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.
இயைபு நயம்:
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
…புகழுடைத் தெய்வம்
….. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது.
அணி நயம்:
கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
சந்த நயம்:
சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

நெடுவினா

1. கண்ணதாசனின் ‘காலக்கணிதம்’ கவிதைக் கருத்துகளில் உன்னைக் கவர்ந்ததைச் சுருக்கி எழுதுக.
கவிஞன் நான் ஓர் காலக்கணிதம் கருவாகிய பொருளை உருப்பட வைப்பேன். பூமியில் புகழுக்கு உரிய தெய்வம் நான்.
பொன்னைவிட உயர்ந்தது என் செல்வம். ஒரு செயல் சரி என்றால் எடுத்துச் சொல்வேன்; தவறு என்றால் எதிர்ப்பேன். அதுதான் என் வேலை.
முத்தொழில் நானும் அவனும் மட்டுமே அறிந்தது. செல்வர் வாளில் சிறைப்பட மாட்டேன். பதவி வாளுக்குப் பயப்பட மாட்டேன். அன்பும், விருப்பமும் மிகுந்து ஆசை தருவதை விரும்புவேன்.
என்னிடம் உண்டு என்றால், பிறர் உண்ணத் தருவேன். இல்லை என்றால் பிறர் இல்லம் தட்டுவேன். வண்டு போல மாறி மலரில் அமர்ந்து, குடித்த தேனை ஊர்ப்புறம் தருவேன்.
கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத கருத்துகளைச் சொல்லிட முயற்சிப்பேன். என்னுடல் புகழ்ந்தால் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
என் கவிதை வாக்குமூலம் அதை வைத்து இறந்த பிறகு தீர்ப்பை எழுதுங்கள். கல், மரம், விலங்காக மாற நான் காட்டு விலங்கு கிடையாது.
மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். நன்மை, தீமை அறிந்து ஏற்கும் என் சாலை.
தலைவர் மாறுவார்கள், தர்பார் மாறும், தத்துவம் மட்டும் குறையாத அட்சயப் பாத்திரம் ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்ளட்டும். குரைப்போர் குரைக்கட்டும்.
வாய்ச்சொற்கள் உடம்பினைத் தொடாது. நானே தொடக்கம் நானே முடிவு. நான் சொல்வதுதான் நாட்டின் சட்டம்.

இராமானுசர் (நாடகம்)

நெடுவினா

1. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.
காட்சி – 1
இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்.
குகன் : செழியா! வந்துவிட்டாயா.
செழியன் : வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்குச் செல்வோமா?
குகன் : செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை …
செழியன் : இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.
காட்சி – 2
இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : ஆசிரியர், குகன், செழியன்.
மாணவர்கள் இருவரும் : வணக்கம் ஐயா!
ஆசிரியர் : வணக்கம்!
குகன் : ஐயா! உள்ளே வரலாமா?
ஆசிரியர் : வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.
செழியன் : ஐயா, வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே… அதற்காகத்தான் வந்தோம்.
ஆசிரியர் : நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணங்கள் கூறப்போகிறேன். முதலில் கொக்கைப் போல’ வாய்ப்பு கிட்டும் வரை கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் வள்ளுவர், ‘கொக்கொக்க’ எனப் பாடியுள்ளார்.
குகன் : சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.
ஆசிரியர் : இரண்டாவதாக, கோழியைப் போல்!’
செழியன் : ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்….
ஆசிரியர் : கோழி, குப்பையைக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான ‘உணவை மட்டுமே’ கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களைக் கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்குத் தேவையான
நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
இருவரும் : நன்றாகப் புரிந்தது ஐயா!
ஆசிரியர் : மூன்றாவதாக, உப்பைப் போல….
குகன் : ஆம். ஐயா, ‘உப்பைப்போல’ என்பதன் விளக்கம் தாருங்கள்.
ஆசிரியர் : கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், உங்களைச் சார்ந்தவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும். மிக நெருங்கி இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பந்தான். உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால்தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும் : மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
நன்றி! ஐயா!

நெடுவினா

1. இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளைக் கூறுக.
குறிப்புச் சட்டம்
முன்னுரை
பொறுமை உடையவர்
நட்புக்கு மரியாதை
தன்னலமற்ற பரந்த உள்ளம்
முடிவுரை
முன்னுரை:
பிறர்நலம் போற்றுவதே மனித வாழ்வின் சிறந்த நிலை ஆகும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணுவோர் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்ந்து காட்டிய இராமானுசரின் பண்புநலன்கள் பற்றிக் காண்போம்.
பொறுமை உடையவர்:
திருமந்திரத் திருவருளைக் கற்றுக் கொள்வதற்காக பதினெட்டு முறை பூரணரைச் சந்திக்கச் சென்றார்.
இன்றாவது நம் விருப்பம் நிறைவேறுமா! என்ற உடன்வந்தவர்களையும் பொறுமையுடன் வழி நடத்துகிறார்.
உங்களை மட்டும்தானே வரச்சொன்னேன் என்ற பூரணரிடமும் பொறுமையுடன் பதில் கூறுகிறார்.
இவ்வாறு இராமானுசர் பொறுமை என்னும் பண்பில் சிறந்திருத்தலை அறியலாம்.
நட்புக்கு மரியாதை:
எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் கூரேசரையும், முதலியாண்டானையும் உண்மையான நட்புடன் நேசிக்கிறார். திருமந்திர
திருவருளைக் கற்கப் போகும் பொழுதுகூட, பூரணர் தண்டு கொடியுடன் மட்டும் வாருங்கள் என்கிறார்.
அப்போதும் இவர்கள் இருவரும் என்னுடன் இருக்கும் தண்டும் கொடியும் போன்றவர்கள்தான் என்று கூறி நட்பு உணர்வை வெளிப்படுத்துகிறார்.
தன்னலமற்ற பரந்த உள்ளம்:
பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்.
குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.
திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால் நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள் அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார்.
அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப் பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த மகிழ்ச்சியைப் பெற்றார்.
பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால் “எம் பெருமான்” என்று அழைக்கப் பெற்றார்.
அது மட்டுமின்றி பூரணர் தன் மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார்.
இவையே இராமானுசர் நாடகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளும் தலைமைப் பாத்திரமான “இராமானுசரின் பண்புகள்” ஆகும்.
முடிவுரை:
தன்னலம் அகற்றி, பொதுநலம் போற்றுபவரே உண்மையான மகான்களாக முடியும் என்பதற்கு இராமானுசரே சான்றாக விளங்குகிறார் எனலாம்.

2. ‘என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன்’ என்ற இராமானுசரின் கூற்றுக்கு
ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
குறிப்புச் சட்டம் ப்பச் சட்டம் –
முன்னுரை
அன்னை தெரசா
விவேகானந்தர்
அப்துல்கலாம்
முடிவுரை
முன்னுரை:
நாளுக்கு ஒருமுறை மலர்வது செண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல் நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள். அவ்வாறு உதித்தவர்தான் இராமானுசர். அவர் தனக்கு மட்டுமே வீடுபேறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் எல்லாருக்கும் நலம் கிட்ட வேண்டும் என்று எண்ணி, வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கை போற்றுத்தற்குரியது.
அன்னை தெரசா:
அயல்நாட்டுப் பெண்மணியாக இருந்தாலும், இந்திய நாட்டுக் குடிமகளாகவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. அவர் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும், ஆதரவற்ற எளியோருக்கும் தனது களங்கமில்லாத சேவையால் பெருந்தொண்டாற்றினார்.
“காண்கின்ற மனிதர்களிடத்தில் அன்பு கூறாவிட்டால்
காணாத இறைவனிடத்தில் எப்படி அன்பு கூறுவாய்”
என்ற விவிலியத்தின் வார்த்தைகளைக் கொள்கையாகக் கொண்டு “உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேலானவை” என்று கூறி தன்னலமற்ற உதவிகளை அன்னை தெரசா செய்தமையால் ஒரு கவிஞர் தனது கவிதையில்,
“நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருப்பாய்…
கருணையுற்றதால் உலகத்திற்கே தாயாகிவிட்டாய்”
என்று எழுதினார்.
 விவேகானந்தர்:
அயல்நாட்டிலும் ஆகச்சிறந்த ஆன்மீக உரையால் இந்தியப் பண்பாட்டை உலகறிய செய்த மகான் விவேகானந்தர்.
“எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத்
துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்’
என்று குறிப்பிடும் விவேகானந்தர்,
“சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு
வேலை செய்யுங்கள்”
என்கிறார்.
அப்துல்கலாம்:
தன்னலமற்ற தனிப்பெரும் தலைவராக வாழ்ந்து மறைந்தவர் அப்துல் கலாம்.
“நம்மை அனைவரும் நினைவு கூரும் வகையில்
ஒரு பெரும் செல்வத்தை நம் வருங்கால
சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும்
உரிமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது”
என்று குறிப்பிடும் கலாம், என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்வி முறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தலைவர்களை உருவாக்கும்’ என தன்னலமற்றவர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.
முடிவுரை:
தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் பிறரையும் வாழ வைப்பதற்கான நெறிமுறைகளை அளிப்பதாக பலரின் கூற்றுகளையும் சான்றாகக் கூறிட இயலும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் திருமூலரின் வாக்கினுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் உலகில் அன்பே நிலைத்து நிற்கும். பரிதி முன் பனி காணாமல் போவதைப் போல் பகை இவ்வுலகைவிட்டு நீங்கிவிடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்