Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 8 Question and Answers

10th Tamil Unit 8

Short Answers 

குறுவினா &சிறுவினா 

10th Tamil Unit 8  Question and Answers | 10th Tamil Unit 8 2 Marks and 3 Marks | 10th Tamil unit 8 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard  10th Tamil unit 8 one marks | 10th Tamil Unit 8 Big Question and Answers  10th Tamil unit 8 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 8 Question And Answers. 

10th Tamil Unit 8  Question and Answers |10th Tamil unit 8 one mark Question and Answer | 10th Tamil unit 8 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide | 5 Minute Maths

10th Tamil Unit 8  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 8 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 8 நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths |  10th Tamil unit 8 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions  | 10th samacheer kalvi Guide

10th Tamil Unit 8  Question and Answers |10th Tamil unit 8 one marks question and answers | 10th samacheer kalvi

Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 8 one mark Question and Answers | 10th Tamil Unit 8 Question and Answers 

10th Tamil Unit 8  Question and Answers | 10th Tamil Unit 8 One Marks |  10th Tamil unit 8 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers 

10th Tamil Unit 8 Short Answers.

 10th tamil Unit 8 short answer

சங்க இலக்கியத்தில் அறம்

குறுவினா


1. குறிப்பு வரைக: அவையம்.
  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

சிறுவினா
1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
அரசியல் அறம்:
நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.
வணிகத்தில் அறம்:
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.
போர் அறம்:
தமிழர்போர்செய்வதிலும் அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது, வீரமற்றோர், சிறார், முதியோர் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.
உதவி செய்வதில் அறம்:
பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது, தன்னைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் நிலை.
‘பிழையா நன்மொழி’ என்று நற்றிணையும் கூறுகிறது.
நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய்பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.
இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.

சிறுவினா

1. உண்மையான செல்வம் எது?
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்.
‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்’
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’
என்று நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.

2. சங்ககாலப் போர் அறம் குறித்து எழுதுக.
தமிழர் போரிலும் அறத்தைப் பின்பற்றினர்.
போர் அறம் என்பது வீரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்.
பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.
 
3. நோக்கம் கருதி அறம் செய்தல் கூடாது விளக்குக.
  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் மறுபிறப்பில் பயன் பெறலாம் என்று கருதியும் செய்தல் கூடாது.
  • நோக்கமின்றித் தரும் அறமே சிறந்த அறமாகும்.

4. கொடையின் சிறப்பை இலக்கியங்கள் போற்றுவது பற்றி எழுதுக.
  • கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு, சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் போற்றப்பட்டுள்ளது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகும்.
  • புறநானூற்றிலும் குறிப்பிட்ட மன்னர்களின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.
 
5. மகிழ்ச்சி பெருக என்ன செய்ய வேண்டும்?
  • மனிதன் சமூகக் கடலின் ஒரு துளி.
  • மனிதன் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவு மகிழ்ச்சி பெருகும்.
  • இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்றால் மகிழ்ச்சி பெருகும்.
 
6. கொடை என்னும் பகுதியில் அமைந்த வள்ளல்கள் பெயரினைத் தொகுத்து எழுதுக.
  • பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • அதியன்
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • பேகன்
  • குமணன்
  • திருமுடிக்காரி

ஞானம்

குறுவினா

1. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறுவினா

1. ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
உரைக்குறிப்புகள்:
  • அறம் என்பதன் விளக்கம் தரல்.
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.
 
2. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

குறுவினா

1. வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
கோடை வெயில், மீட்சி விண்ணப்பம் ஆகியவை ஆகும்.

2. ‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
கரையான், கழுதை, கட்டெறும்பு.

3. ‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.
 
சிறுவினா

1. தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக.
பெயர் : தி.சொ.வேணுகோபாலன்
பிறப்பு : 7.11.1929)
ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு.
கல்வி : சென்னை லயோலா கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், ராஜஸ்தான் பிலானியில் இயந்திரவியல் (mechanical) பொறியியல் பட்டம்.
பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
நூல்கள் : கோடைவயல், மீட்சி விண்ணப்பம்.
1959 முதல் “எழுத்து” இதழில் கவிதை எழுதத் தொடங்கினார்.

2. ‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள் யாது? (அல்லது) “அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகமில்லை ” – எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?
‘ஞானம்’ கவிதை இடையுறாது செய்யும் அறப்பணியாம் சமூகப் பணியை உணர்த்துகிறது.
வீட்டின் சாளரத்தில் எத்தனை முறை புழுதி ஒட்டினாலும், கரையான் மண் வீடு கட்டினாலும் துடைக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம்.
சுத்தப்படுத்தும் இப்பணியை முதிர் வயதாகும் வரை செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
சமுதாயத்திலும் சீர்கேடுகள் தொடர்ந்து ஏற்படும்.
அவலங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
எனினும் அவற்றைத் தடுத்து சமூகத்தைச் சீர்படுத்தும் பணியான அறப்பணியை தொடர்ந்து நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3. அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !.
அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
கோடைவயல்.
ஆ) இவ்வடிகள் இடம்பெற்ற கவிதை எது?
ஞானம்.
இ) எது ஓய்வதில்லை ?
Answer:
அறப்பணிகள் ஓய்வதில்லை .
ஈ) இவ்வடியில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
ஓய்வதில்லை       –      உலகமில்லை

4. ‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே வாளித்தண்ணீ ர்……..’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
தி.சொ.வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் ‘ஞானம்’ என்னும் தலைப்புக் கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.
பொருள்:
காலமாகிய கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்துபோன இன்று வரை கையில் வாளித் தண்ணீர் மட்டுமே வைத்துள்ளோம்.
விளக்கம் :
காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
வாளித்தண்ணீர், சாயக்குவளை,துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

காலக்கணிதம்


குறுவினா

1. “கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது.”
அ) அடி எதுகையை எழுதுக.
ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக: கொள்க, குரைக்க.
Answer:
அடி எதுகை:
கொள்வோர்
உள்வாய்
இலக்கணக்குறிப்பு:
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

சிறுவினா

1. கண்ணதாசன் பற்றிக் குறிப்பு வரைக.
இயற்பெயர் : முத்தையா
பிறப்பு : 24.6.1927
பெற்றோர் : சாத்தப்பன் – விசாலாட்சி
ஊர் : சிவகங்கை – சிறுகூடல்பட்டி
சிறப்பு : தமிழக அரசவைக் கவிஞர்
சாகித்திய அகாதெமி விருது – இயேசு காவியம்
புனைப்பெயர் : வணங்காமுடி, ஆரோக்கியநாதன், காரைமுத்துப்புலவர்.
இறப்பு : 17.10.1981

2. காலக்கணிதம் கவிதையில் இடம் பெறும் முரண் சொற்களை எழுதுக.
  • சரி  x  தவறு
  • புகழ்ந்தால்  x  இகழ்ந்தால்
  • ஆக்கல் x அழித்தல்
  • தீமை  x  நன்மை
  • அவனும் x யானும்
  • தொடக்கம்  x  முடிவு
  • உண்டாயின்  x  இல்லாயின்
 
3. ‘கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டல்:
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.
பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நான் காலமாகிய கணிதம் போன்றவன். கவிதைகளில் கருவான பொருளைக் கூட பயன்படும் பொருளாக ஆக்குவேன் என்கிறார் 
கவிஞர்.

4. ‘நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டல் :
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.
பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நானே அனைத்தின் தொடக்கம் ஆவேன். நானே முடிவும் ஆவேன். நான் சொல்வது தான் நாட்டினுடைய சட்டம் ஆகும்.

5. ‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் உங்களைக் கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’
– தன்னை ஒருவர் புகழ்வதினால் பெருமகிழ்ச்சியடைவதோ, இகழ்வதினால் மனம் வருந்துவதோ இல்லை என்பது பண்பட்ட மனத்திற்குச் சான்றாகிறது.
‘செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!”
– என்பதிலிருந்து பணமோ, பதவியோ தன்னை ஒருபோதும் அடிமைப்படுத்த இயலாது என்பதற்குச் சான்றாக அமைகிறது.
‘எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!’
– நல்லது எது கெட்டது எது என்பதறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவதற்குச் சான்றாகிறது.

பா-வகை, அலகிடுதல்


குறுவினா

1. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
எ.கா: கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
வஞ்சிப்பா தூங்கல் ஓசையையும், கலிப்பா துள்ளல் ஓசையையும் பெற்று வரும்.
 
சிறுவினா

1. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
  • வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவி வரும்.
  • மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடியும்.

குறுவினா

1. யாப்பின் உறுப்புகள் யாவை?
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவை ஆகும்.

2. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பா நான்கு வகைப்படும். அவையாவன: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

3. வெண்பாவின் வகைகள் யாவை?
வெண்பா ஐந்து வகைப்படும்: அவையாவன:
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவையாகும்.

4. ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
ஆசிரியப்பாவின் வகைகள் நான்கு வகைப்படும். அவை:
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா

5. திருக்குறளும் நாலடியாரும் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
திருக்குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது.
அதன் ஓசை : செப்பலோசை.

6. சங்க இலக்கியங்கள் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
சங்க இலக்கியங்கள் அகவற்பாவில் அமைந்துள்ளது.
அதன் ஓசை :அகவல் ஓசை

7. அகவலோசையில் அமைந்த நூல்கள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை

8. பதின்மூன்று அடிக்கு மேல் வரும் வெண்பா எது?
கலிவெண்பா.

9. கலித்தளையும் வெண்டளையும் விரவிவரும் பா எது?
ஆசிரியப்பா (அகவற்பா).

10. ஓரசைச் சீர்கள் யாவை?
நேர் – நாள் ; நிரை – மலர்
நேர்பு – காசு ; நிரைபு – பிறப்பு

11. ஈரசைச் சீர்கள் யாவை?
நேர் நேர் – தேமா ; நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம் ; நேர் நிரை – கூவிளம்

12. மூவசைச் சீர்கள் யாவை?
 
சிறுவினா

1. வெண்பாவின் பொது இலக்கணத்தை விளக்குக.
  • வெண்பா செப்பல் ஓசை பெற்று வரும்.
  • ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.
 
2. அகவற்பாவை விளக்கி, சான்று தருக.
அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
இலக்கணக் கட்டுக் கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா .
சான்று: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை – ஆகியவையாகும்.

3. அலகிட்டு வாய்பாடு எழுதுக.
குறள்: உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
 


கருத்துரையிடுக

0 கருத்துகள்