Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 9 Big Questions

10th Tamil Unit 9

Big Questions  
10th Tamil unit 9 One Mark Question and Answer | 10th Tamil unit 9 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard  10th Tamil unit 9 one marks | 10th Tamil Unit 8 Big Question and Answers  10th Tamil unit 9 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 9 Question And Answers. 

10th Tamil unit 9 one mark Question and Answer | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide | 5 Minute Maths

10th Tamil Unit 8  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 9 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 9 நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths |  10th Tamil unit 9 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions  | 10th samacheer kalvi Guide

10th Tamil unit 9 one marks question and answers | 10th samacheer kalvi

Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Tamil Unit 9 Question and Answers 

10th Tamil Unit 9 One Marks |  10th Tamil unit 9 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers 

10th Tamil Big Questions  unit 9

ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

நெடுவினா

1. “எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் எழுதுவதற்கான காரணத்தை விளக்கமளிக்கிறார்?
குறிப்புச் சட்டம்
முன்னுரை
தனிமுயற்சியின் பயன்
நாற்பயன்
கணவன்-புதல்வன்
சமுதாயப் பார்வை
முடிவுரை
முன்னுரை:
தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே! அவர் எழுத்துலகில் எழுதுவதற்கான காரணங்களைக் காண்போம்.
தனிமுயற்சியின் பயன்:
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனி முயற்சியின் பயனுமாகும்.
நாற்பயன்:
வியாசன் முதல் பாரதி வரை தாங்கள் எதற்காக எழுதுகிறோம்? என்பதையும் கலையைத் தாங்கிப்பிடிக்கச் சொல்லவும் இல்லை. ஆனால் இவர்களைவிட கலையைத் தாங்கியவர்கள் யாரும் இல்லை. அறநெறியை உபதேசிக்க பாரதத்தை வியாசர் எழுதினார். தமிழ் இலக்கணம் நாற்பயனையே நூலின் பயனாகச் சுட்டுகிறது.
கணவன்-புதல்வன்:
கலைத்தன்மைக்கு எவ்விதக் குறைவும் வாராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான், நான் எழுதுகிறேன்.
சமுதாயப் பார்வை:
அர்த்தமே வடிவத்தை வளமாக்கும். வெறும் வடிவம் மரப்பொம்மைதான். அதனால் அதைப்பிடித்து துன்பப்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணியில் சமூகப்பார்வை அடக்கம்.
முடிவுரை:
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்கு எதிராக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டு இருக்கிறேன் என்கிறார் ஜெயகாந்தன்.

தேம்பாவணி

நெடுவினா

1. கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரி.
குறிப்புச் சட்டம்
முன்னுரை
வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
முடிவுரை
முன்னுரை:
தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்லில் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.
வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி :
1) மலர்ப்படுக்கை :
கருணையனின் தாய் மறைந்துவிட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்ப்படுக்கையை பரப்பினான். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
 2) இளம்பயிர் வாட்டம்:
என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது. இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்போல் வாடுகிறது.
3) அம்பு துளைத்த வேதனை:
தீயையும் நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்ததால் ஏற்படும் புண்ணின் வரியைப் போல என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.
4) தவிப்பு :
சரிந்த வழுக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழிதெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.
5) உயிர்கள் அழுதல்:
புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.
முடிவுரை:
வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 இலக்கணக் குறிப்பு.
காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி – வினைத்தொகை
உய்முறை – வினைத்தொகை
செய்முறை – வினைத்தொகை
மெய்முறை – வேற்றுமைத்தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஒலித்து – வினையெச்சம்
வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பரப்பி – வினையெச்சம்
வீ – ஓரெழுத்தொருமொழி
தடவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம் – பண்புத்தொகை
இளங்கூழ் – பண்புத்தொகை
ஒருவன் இருக்கிறான்

நெடுவினா

1. அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
மனித நேயம் கொண்ட கதைமாந்தர் – வீரப்பன்
குறிப்புச் சட்டம்
முன்னுரை
அன்பாளர்
கொடையாளர்
பண்பாளர்
முடிவுரை
முன்னுரை:
கு.அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தன் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.
அன்பாளர்:
வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகுகடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன்குப்புசாமிமீது மிகுந்த அன்புவைத்திருந்தார். அனாதையானகுப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.
கொடையாளர்:
குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும், தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.
பண்பாளர்:
வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பன் குப்புசாமிக்குக் கொடுக்க ஒருவரிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்புகிறார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று ரூபாய் பேருந்துக்கு செலவாகிவிடும் என்பதால்தான் கொடுத்தனுப்புகிறேன். இன்னொரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.
முடிவுரை: ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன், மனித நேயத்தின் மாமகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிதநேயத்தைச் சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்