Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 9 Question and Answer

10th Tamil Unit 9

Question and Answer 
10th Tamil unit 9 One Mark Question and Answer | 10th Tamil unit 9 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard  10th Tamil unit 9 one marks | 10th Tamil Unit 8 Big Question and Answers  10th Tamil unit 9 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 9 Question And Answers. 

10th Tamil unit 9 one mark Question and Answer | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide | 5 Minute Maths

10th Tamil Unit 8  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 9 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 9 நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths |  10th Tamil unit 9 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions  | 10th samacheer kalvi Guide

10th Tamil unit 9 one marks question and answers | 10th samacheer kalvi

Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Tamil Unit 9 Question and Answers 

10th Tamil Unit 9 One Marks |  10th Tamil unit 9 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers 

10th tamil unit 9 short answers

ஜெயகாந்தம் (நினைவு இதழ்)


1. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
  • குடியரசுத் தலைவர் விருது
  • சாகித்திய அகாதெமி விருது
  • சோவியத் நாட்டு விருது
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது – ஆகியவையாகும்.

2. ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவையே ஜெயகாந்தனின் சிறந்த அடையாளங்கள்.

3. ஜெயகாந்தன் இயற்றிய குறும்புதினங்களுள் ஏதேனும் நான்கினைக் குறிப்பிடுக.
  • கைவிலங்கு
  • ரிஷி மூலம்
  • கருணையினால் அல்ல
  • சினிமாவுக்குப் போன சித்தாளு
4. ஜெயகாந்தனின் இன்னொரு முகம் கவிஞன் – என்பதற்குச் சான்று தருக.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி கவிதை எழுதியதே, ஜெயகாந்தன் ஒரு கவிஞர் என்பதற்குச் சான்றாகும்.
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்.”

5. ஜெயகாந்தனின் சாதனையாக தீபம் இதழ் வாசகர்கள் கூறியது யாது?
சிறுகதைகளில் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் புதிய கருத்துகளையும் வெற்றிகரமாக சித்தரிப்பது ஜெயகாந்தனின் அரிய சாதனை என்று பாராட்டுகின்றனர்.

6. திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?
  • சில நேரங்களில் சில மனிதர்கள்.
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
  • உன்னைப்போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர்.
  • யாருக்காக அழுதான் – ஆகியவையாகும்.

7. ‘பாயிரந் தோன்றி மும்மை யினொன்றாய்’ – இவ்வடிகளில் உள்ள ‘மும்மை’ எவை?
1. இறப்பு
2. நிகழ்வு
3. எதிர்வு

8. ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் சிலவற்றை எழுதுக.
குருபீடம்
இனிப்பும் கரிப்பும்
யுகசந்தி
தேவன் வருவாரா
ஒருபிடி சோறு
புதிய வார்ப்புகள்
உண்மை சுடும்
 
9. ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை?
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை.

10. ‘பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – ஏழை
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்’ – என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
  • ஜெயகாந்தன்
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல்.
11. ‘எண்ணும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்’ என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
ஜெயகாந்தன்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல் பாடினார்.

12. ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
மகத்தான சாதனை: பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்,
அதுவே மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெயகாந்தன்.

13. இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம், நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

சிறுவினா

1. ஜெயகாந்தனின் புகழ்பெற்ற புதினங்கள் யாவை?
பாரீசுக்குப் போ!
சுந்தரகாண்டம்
உன்னைப்போல் ஒருவன்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
கங்கை எங்கே போகிறாள்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
இன்னும் ஒரு பெண்ணின் கதை

2. “எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் விளக்கமளிக்கிறார்?
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.
முழுக்க முழுக்க வாழ்க்கையில் இருந்து நான் பெறும் கல்வியின், முயற்சியின் பயனை வெளிப்படுத்த எழுதுகிறேன்.
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவும் எழுதுகிறேன்.
கலாதேவியின் (கலை) காதல் கணவனாக இருப்பதாலும், சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாக இருப்பதாலும் எழுதுகிறேன். – என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்.
 
3 நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுவது யாது?
“நூலினியல்பே நுவலின் ஓரிரு
பாயிரந் தோற்றி மும்மை யினொன்றாய்
நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி”
என்று நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுகிறது.

4. நாற்பொருள் பயத்தல் – என்பது எவற்றைக் குறிப்பிடுகிறது?
நூல் என்பது நாற்பொருள் தருவதாய், பயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாற்பொருள் ஆகும்.

5. முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் ஜெயகாந்தன், பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.
“ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966) என்று பாரீசுக்குப் போ என்னும் புதினத்தின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

6. சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என் மனத்தால், புத்தியால், உணர்வாய் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சனைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாகி அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சனைகளே.

குறுவினா

1. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு.
நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.

சிறுவினா

1. தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். – இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
“தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:
கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்
மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்ப்பிக்கும் செயல்:
இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைக்காரனுக்கு இரண்டணாவை அவர் போட்டார். அதைப் பெற்றுக்கொண்டவர் கைகள் குவித்து, ‘சாமி, நீங்கபோற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்தப் பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யாமல் இருந்திருந்தாலோ அல்லது தர்மம் செய்த ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில்தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதைத் தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
தர்மம் தந்தவனும் அதைப்பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.

சித்தாளு

குறுவினா

1. ‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
“வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து தலைக்கனமாகவே வாழ்கிறாள் 

சித்தாள்.

சிறுவினா

1. சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது – இடஞ்சுட்டிப் பொருள் கூறுக.
இடம் சுட்டல்: “சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம்பெற்றுள்ளது.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
கற்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
புலம்புவார் – வினையாலணையும் பெயர்
செங்கற்கள் – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்.
புலம்புவார் – புலம்பு + வ் + ஆர்
புலம்பு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கை வினைமுற்று விகுதி

குறுவினா

1. நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களைப் பட்டியலிடுக.
  • மீட்சி
  • கொல்லிப்பாவை
  • சுபமங்களா
  • குமுதம்
  • புதிய பார்வை
  • இலக்கிய வெளிவட்டம்
  • குங்குமம்
 
2. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை
  • சொல்லாத சொல் ஆகியவையாகும்.
3. சித்தாள் கற்கள் சுமக்கக் காரணம் யாது?
வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும்,
அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.

4. ‘தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு’ – ஏன்? யாருக்கு?
செங்கற்களைச் சுமந்து , சித்தாளுக்குத் தலைக்கனமே வாழ்வாகிப்போனது.

5. ‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ என்று கவிஞர் நாகூர் ரூமி கூறுவதன் உள்நோக்கம் யாது?
சித்தாள் தலையில் சுமக்கும் செங்கற்கள் சுமைகளைவிட,
அவளது மனதில் சுமக்கும் வறுமை உள்ளிட்ட சுமைகள் ஏராளம் ஆகும்.

6. ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் யார்? அவர் இயற்பெயர் யாது?
‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் : நாகூர் ரூமி
அவரின் இயற்பெயர் : முகம்மது ரஃபி

சிறுவினா

1. நாகூர் ரூமி குறிப்பு வரைக.
நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் முகம்மது ரஃபி.
இவர் 1980களில் “கணையாழி” இதழில் எழுதத் தொடங்கினார்.
குறுநாவல், கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.
கப்பலுக்குப் போன மச்சான் என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.
 
2. சித்தாளின் இன்னல்களை விளக்குக (அல்லது) நாகூர் ரூமியின் ‘சித்தாளு’ கவிதைக் கருத்தை எழுதுக.
பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்.
தன் வாழ்வை தொலைத்துவிடாமல் காத்துக்கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.
வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.
அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குதான். இவள் இறந்தால் கூட சலனம் சிறிதளவுதான்.
இந்தச் சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கும் செங்கற்கள் அறியாது.

3. ‘அலுக்காமல் இவள் சுமக்கும்
கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம் சுட்டுதல் :
நாகூர் ரூமியின் சித்தாளு’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் சித்தாள் ஒருவர் கூறுவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.
பொருள் விளக்கம் :
அடுக்குமாடி வீடாகவோ அல்லது அலுவலகமாகவோ, எதுவாக இருப்பினும் அடுத்தவர் கட்டும் கட்டிடத்தின் கனவுக்கு அலுப்பில்லாமல் கற்களைச் சுமந்து உழைப்பது எல்லாம், சித்தாளின் அடுத்தவேளை உணவுக்காகத் தான்.

தேம்பாவணி

குறுவினா

1. காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்
உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.

சிறுவினா

1. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
கருணையனாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.
“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

குறுவினா

1. தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக.
தேம்பாவணி – தேம்பா + அணி என்றும் தேன் + பா + அணி என்றும் பிரிக்கலாம்.
தேம்பா + அணி என்பதற்கு வாடாத மாலை என்று பொருள்.
தேன் + பா + அணி என்பதற்கு தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்.

2. வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை?
சதுரகராதி
தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
சிற்றிலக்கியங்கள்
உரைநடை நூல்கள்
பரமார்த்தக் குரு கதைகள்
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஆகியவற்றைப் படைத்துள்ளார்.

3. எதனை மட்டும் தான் அறிந்ததாகக் கருணையன் கூறுகிறார்?
தன் தாயாகிய எலிசபெத் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன். வேறொன்றும் அறியேன் என்று கூறுகிறார்.

4. தேம்பாவணி குறிப்பு வரைக.
தேம்பாவணி பெருங்காப்பிய வகை நூல்.
இந்நூல் மூன்று காண்டங்களை உடையது.
36 படலங்களையும் 3615 பாடல்களையும் உடையது.
இந்நூல் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூலாகும்.
இந்நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார்.

5. கருணையன் உள்ளம் வாடியது எதற்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது?
கருணையன் உள்ளம் ,மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்வாடுதலுக்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது.

6. கருணையன், ‘இரும்புழைப் புண்போல்’ நோகக் காரணம் யாது?
கருணையனின் தாய் இறந்து விட்டார். தாயை இழந்து வாடும் அவர், தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்று வருந்துகின்றார்.

7. ‘நவமணி வடக்க யில்போல்’ – இவ்வடிகள் சுட்டும் நவமணிகள் யாவை?
கோமேதகம்
முத்து
நீலம்
புருடராகம் (புஷ்பராகம்)
பவளம்
வைடூரியம்
மரகதம்
வைரம்
மாணிக்கம்
 
8. திருமுழுக்கு யோவான் என்பவர் யார்?
கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் காட்டினில் வாழ்ந்தார்.
வீரமாமுனிவர் கருணையன் என்று இவரை அழைக்கின்றார்.

9. ‘அழுங்கணீர் பொழிந்தான்’ யார்? ஏன்?
அழுங்கணீர் பொழிந்தவர் : திருமுழுக்கு யோவான்(கருணையன்)
கருணையன் தன் அன்னையின் உடலை மண்ணுள் அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் கண்ணீரையும் ஒன்றாகப் பொழிந்தான்.

10. கருணையன் புலம்பியதைக் கேட்டு, அழுவன போன்று கூச்சலிட்டன எவை?
கருணையன் புலம்பியதைக் கேட்டு, தேன்மலர்கள் பூத்த மணம் வீசும் மலர்களும், சிறுகுட்டைகள் தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டில் அழுவன போன்று கூச்சலிட்டன.
 
சிறுவினா

1. கருணையனிடம் இயற்கை கொண்ட பரிவு யாது?
நல் அறங்களையெல்லாம் ஒரு கோவையாக இணைத்த அறமாலையை அணிந்த மார்பனாகிய கருணையன் கொண்ட துயரைக் கண்டு இயற்கையும் பரிவு கொண்டது.
பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும், சுனை தோறும் தங்கியுள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையன் உடன் இணைந்து அழுவன போல கூச்சலிட்டன.

2.இஸ்மத் சன்னியாசி – விளக்குக.
வீரமாமுனிவரின் எளிமையையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
இஸ்மத் சன்னியாசி என்பதற்குத் தூயதுறவி என்று பொருள்.
இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

3. வீரமாமுனிவர் – குறிப்பு வரைக.
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி
புனைபெயர் : தைரிய நாத சுவாமி இலக்கியப் பணி : இலக்கண நூல், மொழிபெயர்ப்பு,
சிற்றிலக்கியம், உரைநடை.
இயற்றிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்தக் குருகதைகள், வேதியர் ஒழுக்கம்,
செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம்.
காலம் : கி.பி. 1680-1747.
பிறமொழிப் புலமை : இலத்தீன், கிரீக்கு, எபிரேயம், ஆங்கிலம், தெலுங்கு.
மறைந்த ஊர் : அம்பலக்காடு

4. ‘தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடி’ என்ற உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
உவமை :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்.
பொருள் :
கருணையன் தாயை இழந்து வாடுதல்.
பொருத்தம் :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல் போன்று கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றார்.

5. கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) யாவை?
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்
மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்
தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருத்தம்.
துணையைப் பிரிந்த பறவை
சரிந்த வழுக்கு நிலத்தில் தனியே விடப்பட்டு வழி தெரியாமல் தவிப்பவன்.
– ஆகியன கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) ஆகும்.

6. ‘தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள்’ என்று கருணையன் வருந்தக் காரணம் யாது?
நான் உயிர்ப்பிழைக்கும் வழி அறியேன்.
நினைத்ததைக் கண்ட அறிவுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளையும் அறியாதவன்.
என் தாய் கையால் காட்டிய அறிவுரையை மட்டுமே நான் அறிவேன்.
இப்படி என்னைத் தவிக்க விட்டுவிட்டு என் தாய் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!
– என்னையும் என் தாய் கூட்டிச் சென்று இருக்கலாம், எதுவும் தெரியாத நான் எப்படி வாழ்வேனோ?

அணி

குறுவினா

1. தீவக அணியின் வகைகள் யாவை?
தீவக அணி மூவகைப்படும். அவை:
முதல் நிலைத் தீவகம்
இடைநிலைத் தீவகம்
கடைநிலைத் தீவகம் எனப்படும்.

2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறையணியாகும்.
இலக்கணம்: நிரல் – வரிசை: நிறை – நிறுத்துதல்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
 
சிறுவினா

1. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக.
அணி இலக்கணம்:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை (கருத்தை) ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
எ.கா: “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”
பாடல் பொருள்:
கோட்டை மதில்மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்.
 
விளக்கம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேல் இருந்த கொடிகள் | காற்றில் இயற்கையாக அசைந்தன.
ஆனால் இளங்கோவடிகள், மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள், கையை அசைத்து இம் மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாக தன் கருத்தைக் கொடியின் மேல் ஏற்றிக் கூறுகிறார். எனவே இப்பாடல் தற்குறிப்பேற்ற அணிக்குச் சான்றாகியது.

குறுவினா

1. தன்மையணியின் வகைகளை எழுதுக.
தன்மையணி நான்கு வகைப்படும். அவை:
பொருள் தன்மையணி
சாதித் தன்மையணி
குணத் தன்மையணி
தொழிற் தன்மையணி ஆகியவை ஆகும்.

2. தன்மையணியை விளக்குக.
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரியச் சொற்கள் அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

சிறுவினா

1. நிரல்நிறை அணியை சான்றுடன் விளக்குக.
அணி இலக்கணம்:
நிரல் – வரிசை நிறை – நிறுத்துல்.
சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
சான்று:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அணிப் பொருத்தம்:
இக்குறளில் “அன்பும் அறனும்” என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி “பண்பும் பயனும்” என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணிக்குச் சிறந்த சான்றாகும்.

2. தீவக அணியை விளக்கி, சான்று கூறுக.
அணி இலக்கணம்:
தீவகம் என்னும் சொல்லுக்கு விளக்கு என்று பொருள். செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது தீவக அணி என்பர்.
சான்று: “சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசை அனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து”
பாடலின் பொருள்:
அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. கண்கள் சிவந்த அளவில் பகை மன்னர்களின் தோள்கள் சிவந்தன. இரத்தம் பாய்ந்த திசைகள் அனைத்தும் சிவந்தன; அம்புகள் சிவந்தன. இரத்தம் மேலே வீழ்வதால் பறவைகள் சிவந்தன.
அணிப்பொருத்தம்:
முதலில் உள்ள சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.



 3. ‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்’ அணி எது? சான்றுடன் விளக்குக. (அல்லது) தன்மை நவிற்சி அணியைச் சான்றுடன் விளக்கு.
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனை தன்மை நவிற்சியணி என்றும் கூறுவர்.
சான்று: “மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன்
உண்டளவே தோற்றான் உயிர்.”
பாடலின் பொருள்: உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை பாயும் நகரத்து அரசன் பாண்டியன் தோற்றான். அவளது சொல் கேட்டு உயிர் நீத்தான்.
அணிப்பொருத்தம் : கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாடு உரிய சொற்களின் மூலம் கூறியமையால் தன்மை நவிற்சியணி எனப்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்