Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

 தமிழகத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. 

இதற்கு பலதரப்பினர் வழியில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கு இன்று குடும்ப நலத்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கலாம் என்று அறிவித்துள்ளனர். குடும்ப நலத்துறை விளக்கம் வரும் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரியை திறக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தி.மு.க தலைவரான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதாக கண்டனம் தெரிவித்து வந்தார். ஸ்டாலின், பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் மருத்துவரின் ஆலோசனையை அறிந்த பின் பள்ளி, கல்லூரியை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் திறக்க வேண்டும் என்றார்.பல கண்டனம் எழுந்ததால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.ஆலோசனையில் வரும் நவ..9 ஆம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோரிடம் இருந்து ஆலோசனை நடத்திய பின் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பை பற்றி முடிவெடுக்கப்படும் என்றனர். அதற்கு இன்று குடும்ப நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரியை சில வழிமுறைகளை பின்பற்றி திறக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. உத்தரவு குடும்ப நலத்துறை அறிவித்த உத்தரவு ஆனது, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாணவர்களை பரிசோதிக்க தயாராக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சத்து மாத்திரைகளையை வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கிருமி நாசினி கட்டாயம் வழங்க வேண்டும்.நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் . ஆகையால் சுகாதாரத்துறையினர் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆகையால் கட்டாயம் பள்ளி மற்றும் கல்லூரி வரும் நவ 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்