Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.நவம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க தலைமையாசிரியர் வழிகாட்டுதல் செய்ய வேண்டும். 

தலைமை ஆசிரியர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்ணப்பிக்க அறிவுரை வழங்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களை கையொப்பம் பெற்று வர அலைக்கழிக்க கூடாது. மாணவர்களின் நலன் கருதி காலதாமதமின்றி சான்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்