Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை

 அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகவே இருப்பதாக அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வந்தனர். அதனால், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில், நடப்பாண்டு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. இனி வரும் காலங்களிலும் இந்த உள் ஒதுக்கீடு தொடரும் என்பதால், மருத்துவ படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு நீட் தேர்வில் 1000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால், அரசின் நீட் பயிற்சி மையம் குறித்து மாணவர்களிடையே நம்பிக்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டு நீட் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 15,00 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நவம்பர் 9 முதல் நீட் பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி பெற இதுவரை 15,492 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் உள் ஒதுக்கீட்டால் 303 அரசு பள்ளி மாணவர்களின் கனவு நனவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்