தமிழகத்தில் டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: தமிழகத்தில் டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 16ல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு எதிரான வழக்கை நவம்பர் 20க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். டிசம்பருக்கு பின் திறப்பது என்பது நீதிமன்ற கருத்தே; அரசு சிறந்த முடிவெடுக்கும் என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்