Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என குடும்ப நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என குடும்ப நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு 9 ,10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு பரிசீலனை செய்தது.தமிழகத்தில் பள்ளி திறப்பு தொடர்பாக வரும் 9 ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழகத்திலுள்ள அந்தந்த பள்ளிகளில் காலை 10 மணிக்கு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என குடும்ப நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். வைட்டமின் மாத்திரைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவை பிறப்பித்துள்ளார். அனைத்து பள்ளிகளுக்கும் கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்