குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்று அரசு அறிவிக்க வேண்டும்
பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்று அரசு
அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்த லைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கை : கொரொனா
தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மாணவர்க ளின் நலன் கருதி தமிழ்நாடு ஆசிரியர்
சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது . இதன்படி , 9 ம் வகுப்பு வரை 50 சதவீத
பாடங்களையும் , 10 , 11 , 12 ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்களையும்
குறைக்கும் அறிவிப்பு வர வேற்புக்குரியது . தற்போது பொதுத்தேர்வு நெருங்கும்
நிலையில் எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்படும் என்பதறியாது மாணவர்கள் குழப்பத்தில்
உள்ளனர்.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் குறைக் கப்பட்ட பாடப்பகுதி விவரங்களை அரசு
உடனடியாக வெளியிட வேண்டும் . குறைந்தபட்சம் பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்காவது வெளியிட வேண்டும் . பாடப்பகுதி இவைதான் எனச் சொல்லாததால்
படிப்பில் ஆர்வம் குறையும் . பொதுத் தேர்வுக்குரிய மாணவர்கள் கடைசி நிமிடம் வரை
காத்திருக்காமல் பாடப் பகுதி இவைதானென்று அறிவித்திடச் செய்யும்படி கல்வித் துறை
அமைச்சரை வலியுறுத்துகிறோம் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
0 கருத்துகள்