Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th Tamil Guide UNIT 6 Question and Answer திரைமொழி

12th Tamil 
UNIT 6 Question and Answer 

6.1 திரைமொழி

12TH TAMIL  UNIT 6 QUESTION AND ANSWERS | 12TH TAMIL UNIT 5 QUESTION AND ANSWERS  | 12th Tamil Unit 4 Book back Question And Answer | 2th Tamil Unit 3 Book Back Question and Answer | 12th Tamil Unit 2 Book back Question and answer | 12th tamil guide, 12th tamil - unit 1 question paper, 12th tamil unit 1 book back answers, 12th tamil book back answers, 12th tamil one mark questions and answers, konar tamil guide 12th pdf free download 2020, 12th tamil don guide free download, 12th tamil - unit test question paper, 12th tamil book back answers samacheer kalvi, 12th tamil book back answers pdf download,12th tamil book back answers kalvi imayam, 12th tamil book back answers guide, toppers education,  12th tamil book back answers 2020, kalvi sri, 12th tamil book back questions with answers 2020, trend     tamizha, 12th tamil book back questions with answers pdf, 12th tamil guide. 12th Tamil Question and answers TET, TNPSC, TRB, PGTRB, SI, etc.....Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. வேறுபட்டதைக் குறிப்பிடுக.
அ) அண்மைக் காட்சித் துணிப்பு
இ) நடுக்காட்சித் துணிப்பு
ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு
ஈ) காட்சி மறைவு
Answer:
ஈ) காட்சி மறைவு

குறுவினா

1. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
Answer:
திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவுவது பின்னணி இசையே.
பின்னணி இசைச் சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
இசை பாத்திரங்களின் மனக்கவலைகள் அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருத்தல் அவசியமானது.

சிறுவினா

1. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:
காட்சியின் முக்கியத்துவம்:
காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்கு இரண்டாம் இடம்தான்.
திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை

சான்று:
முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
அடுத்தக் காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
முதல் காட்சியில் எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நெடுவினா

1. திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
திரைப்படத்துறை – ஒரு கலை:
புதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்கும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்கமுடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியிருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.
சான்றாக, கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தேர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக் கருவி, நடனக் குழுக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன.
எல்லாக் கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனங்கள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கென்று திரைப்படத்துறை சார்ந்த படிப்புகளும் உருவாகி உள்ளன. இத்துறையில் முழு ஈடுபாடு கொண்டால்தான் சிறக்கும்.
இதைப்பலகலைகளின்சங்கமம்என்றே கூறலாம். நடிகர்களின்நடிப்புக்கலை,ஒப்பனைக்கலை, வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக் கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும்தான் இது நடந்தேறி வருகிறது.
கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே. எனவே கலைகளின் சங்கமம் என்பது பொருத்தமானதே.
திரைப்படத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழவைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில்நுட்ப 1121 வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண்-பெண் நடனக் குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் என எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.
திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்துவிடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை-கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே வாழ்ந்து வருகின்றன.
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையைக் கற்க முடியாது. பயிற்சியால்தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!

கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக

1. சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை 5 மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி முன் ‘அதிசயம் பிறக்கிறது’ என்ற தலைப்பில் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது.
ii) லூமியர் சகோதரர்களே இத்திரைப்படத்தை உருவாக்கினர்.
iii) இச்சகோதரர்கள் வெளியிட்ட படங்களில் ஒன்று ரயிலின் வருகை
அ) i சரி
ஆ) ii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

2. அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர் சகோதரர்கள்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் வெருமிலர்
Answer:
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்

3. படப்படிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள்
அ) லூமியர் சகோரார்கள்
ஆ) எடிசன் சகோதரர்கள்
இ) ஜார்ஜ் சகோதரர்கள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) லூமியர் சகோரார்கள்

4. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) ஜார்ஜ் மிலி

5. சார்லி சாப்ளின் பிறந்த இடம்
அ) தி ஹேக்
ஆ) இலண்டன்
இ) நியூயார்க்
ஈ) பாரிஸ்
Answer:
ஆ) இலண்டன்

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

6. சார்லி சாப்ளின் தாயார் ஒரு
அ) மேடைப்பாடகர்
ஆ) நடிகை
இ) வழக்கறிஞர்
ஈ) மருத்துவர்
Answer:
அ) மேடைப்பாடகர்

7. சிறுவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடிடக் காரணமாக அமைந்தது
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்
ஆ) இயற்கையிலேயே மேடையில் ஆடிப்பாடிட வேண்டும் என்ற சார்லி சாப்ளின் ஆசையினால்
இ) நண்பர்கள் மேடையேறியே ஆக வேண்டும் என்று சாப்ளினை வற்புறுத்தியதால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்

8. சார்லி சாப்ளினைப் பேசாப் பட நாயகனாக உருவாக்கிய தோற்றம்
அ) லிட்டில் மாஸ்டர்
ஆ) லிட்டில் டிராம்ப்
இ) லிட்டில் ஸ்டார்
ஈ) மாஸ்டர் மார்ஷல்
Answer:
ஆ) லிட்டில் டிராம்ப்

9. சார்லி சாப்ளின், வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ……………….. என்ற வெற்றிப் படமாக்கினார்.
அ) தி கிட்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) மார்டன் டைம்ஸ்
ஈ) தி. கிரேட் டிக்டேட்டர்
Answer:
அ) தி கிட்

10. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்
அ) மார்டன் டைம்ஸ்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
ஈ) யுனைடெட் மூவிஸ்
Answer:
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

11. தி கோல்டு ரஷ், தி சர்க்கஸ் போன்ற காவியப் படங்களை உருவாக்கியவர்
அ) அர்னால்டு
ஆ) ஜாக்கிஜான்
இ) சார்லி சாப்ளின்
ஈ) ஜார்ஜ் மீலி
Answer:
இ) சார்லி சாப்ளின்

12. ‘சார்லி சாப்ளின்’ எதிரிகளின் வாய்களை அடைத்து எடுத்த பேசும் திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) சிட்டி நைட்ஸ்
இ) வில்லேஜ் லைட்ஸ்
ஈ) வில்லேஜ் நைட்ஸ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

13. சார்லி சாப்ளின் மூன்று ஆண்டு உழைப்பில் வெளியிட்ட திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) மார்டன் டைம்ஸ்
இ) தி கிட்
ஈ) தி கோல்டு ரஷ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

14. சார்லி சாப்ளினது சோதனைப் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வெளியான ஆண்டு.
அ) 1932
ஆ) 1940
இ) 1936
ஈ) 1945
Answer:
ஆ) 1940

15. ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல் படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

16. ‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதை உணர்த்திய திரைப்படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

17. சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ படம் ஏற்படுத்திய தாக்கம்
(i) அன்றைய தொழில் மய உலகின் கேடுகளை விமர்சனம் செய்வதாக இத்திரைப்படம் அமைந்தமையால் சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்னும் முத்திரை விழுந்தது.
ii) பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது.
iii) இருந்தாலும் படம் வெற்றி பெற்றது.
அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

18. சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்த ஆண்டு
அ) 1940
ஆ) 1950
இ) 1952
ஈ) 1942
Answer:
ஆ) 1950

19. சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் …………….. விருது வழங்கப்பட்டது.
அ) கோல்டன் குளோப்
ஆ) ஆஸ்கார்
இ) பிரவு டு ஆஃப் அமெரிக்கா
ஈ) கோல்டன் வேர்ல்டு
Answer:
ஆ) ஆஸ்கார்

20. பொருத்திக் காட்டுக.
அ) LONG SHOT – 1. மீ அண்மைக் காட்சித்துணிப்பு
ஆ) MID SHOT – 2. அண்மைக் காட்சித்திணிப்பு
இ) CLOSEUP SHOT – 3. நடுக்காட்சித்துணிப்பு
ஈ) EXTREME CLOSEUP SHOT – 4. சேய்மைக்காட்சித் துணிப்பு
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

21. மனைவியின் வைரமாலையை விற்று, பிரெஞ்சுக்காரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப் படங்களையும் வாங்கியவர்
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்
ஆ) தியோடர் பாஸ்கரன்
இ) அஜயன் பாலா
ஈ) அம்ஷ ன் குமார்
Answer:
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்

22. சாமிக்கண்ணு வின்சென்ட் துண்டுப்படங்களைக் காட்ட ஆரம்பித்த இடம்
அ) சென்னை
ஆ) திருவனந்தபுரம்
இ) திருச்சி
ஈ) மதுரை
Answer:
இ) திருச்சி

23. சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ வெளியான ஆண்டு
அ) 1932
ஆ) 1936
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1936

24. 1977ஆம் ஆண்டு வரை திரைப்படமே பார்க்காமல் வாழ்ந்த மக்களின் ஊர்
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு
ஆ) ஆந்திராவில் காக்கி நாடா
இ) கேரளத்தில் கோழிக்கோடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு

25. சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி சர்க்க ஸ்
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்
Answer:
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

26. ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்திட சார்லி சாப்ளினால் உருவாக்கப்பட்ட பாத்திரம்
அ) ஹென்றி
ஆ) ஹென்கோல்
இ) மீலி
ஈ) ஆடம்ஸ்
Answer:
ஆ) ஹென்கோல்

27. திரைமொழி குறித்த பாடப்பகுதி … கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டது.
அ) அஜயன் பாலா
ஆ) சுஜாதா
இ) செழியன்
ஈ) அம்ஷன்குமார்
Answer:
அ) அஜயன் பாலா

குறுவினா

1. திரைப்படத் துறையின் தோற்றம் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களைக் குறிப்பிடுக.
Answer:
தாமஸ் ஆல்வா எடிசன் (படப்பிடிப்புக்கருவி)
பிரான்சின் லூமியர் சகோதரர்கள் (படப்பிடிப்புக்கருவி)
ஜார்ஜ் மிலி (கதை சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்)

2. திரைக்கதை – விளக்குக.
Answer:
படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைவது திரைக்கதை.
திரைக்கதைகள் பலமுறை எழுதி, பலமுறை படித்துப் பார்த்துத் திருத்தி உருவாக்குவது.
இத்தகைய உழைப்பு உள்ள திரைக்கதை மக்கள் மனதில் நிற்கும்.

3. முப்பரிமாணக்கலை என்றால் என்ன?
Answer:
திரைப்படத்தில் நடிப்பவரை முன்பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடிப்பது முப்பரிமாணக் கலை என்பர்.

12th Tamil Guide திரைமொழி KALVI SRI

4. திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:
கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கும் போது கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வு செய்வது மீ சேய்மை காட்சித்துணிப்பு என்கிறோம்.

5. சேய்மைக் காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
பேருந்தைப் பிடிக்க சாலையைக் கடக்கும் போது சாலையின் இரு பக்கங்களைப் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவில் இருந்து பதிவு செய்வது சேய்மைக் காட்சித் துணிப்பு ஆகும்.

6. நடுக்காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:
பேருந்தை விட்டு இறங்கி நடந்து போகும் போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பளவில் மட்டும் கவனப்படுத்துகிறோம். கண், ஆளை முழுதாகப் பார்த்தாலும், நம் கவனம் இடுப்புவரை மட்டும் எடுத்துக் கொள்வது நடுக்காட்சித் துணிப்பு ஆகும்.

7. அண்மைக்காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகம் மட்டுமே நமக்குப் பதிவாவது அண்மைக்காட்சித் துணிப்பு ஆகும்.

8. மீஅண்மைக்காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
செருப்பைக் கழற்றி வாசலில் விடும் போது கண் கீழே குனிந்து செருப்பை மட்டும் பார்ப்பது மீ அண்மைக்காட்சித் துணிப்பு.

9. திரைப்படத்தின் காட்சிமொழி என்றால் என்ன?
Answer:
ஒரு மணி நேரப் பயணத்தை ஐந்தே காட்சித் துணிப்புகளாக இருபது நொடிகளில் பார்வையாளரிடம் உணர்த்துவது திரைப்படத்தின் காட்சிமொழி ஆகும்.

10. திரைப்படக்கலை என்றால் என்ன?
Answer:
திரைப்படத்தில் தேவையான கோணங்களைப் பயன்படுத்தி அவற்றை வெட்டி, ஒட்டி, படத்தொகுப்புச் செய்து வெள்ளித்திரையில் ஒரு நல்ல கதையாகச் சொல்வது திரைப்படக்கலை என்பர்.

11. படத்தொகுப்பு என்றால் என்ன?
Answer:
தேவையற்ற காட்சிகளை நீக்கி தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பது படத்தொகுப்பு என்பர்.

12. ஒற்றைக்கோணக் கலை என்றால் என்ன?
Answer:
ஒரு காட்சியை ஒற்றைக்கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது ஒற்றைக்கோணக் கலை என்பர்.

13. நேரேட்டர் என்றால் என்ன?
Answer:
நேரேட்டர் என்பதன் பொருள் ‘கதை சொல்லி’ என்பதாகும். திரையரங்கில் மவுனப்படங்கள் 112 ஓடிக் கொண்டிருக்க திரைக்கு அருகே ஒருவர் ஒலி வாங்கியைப் பிடித்துக் கதை சொல்லுபவரை நேரேட்டர் என்பர். அவர் வந்து நின்றாலே அனைவரும் கைத்தட்டுவர்.

சிறுவினா

1. காட்சி ஆற்றல் என்பதை விளக்குக. (அல்லது) காட்சி நகர்வு உத்தியை விளக்குக.
Answer:
காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
திரைப்படத்தில் காட்சி சிறப்பானால் வசனம் இரண்டாம் இடம்தான்.
நாடகத்தில் விளக்கை அணைத்தும், திரையை இறக்கியும் காண்பிப்பர்.
முதல் காட்சி – கதாநாயகியிடம் தோழி தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
அடுத்தக்காட்சி – கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
காட்சி மாறுவதை உணர்த்த சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக்காட்டுவர். இதைக் காட்சி மறைவு என்பர்.
தொடங்கும் போது சிறிது சிறிதாக வெளிச்சம் கூட்டி முழுக்காட்சி வெளிப்படும் இதை காட்சி உதயம் என்பர்.
ஒரு காட்சி தொடங்கும் போது அடுத்தக்காட்சி தொடங்குவது கலவை / கூட்டு என்பர் (Mix).
பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்தக் காட்சியை தோன்றுவதை அழிப்பு (Wipe) என்பர்.
இவ்வாறு பல்வேறு உத்திகள் காட்சியில் கையாளப் படுகிறது.

2. குலஷோவ் விளைவு விளக்குக.
Answer:
மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் முதலில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன.
அடுத்தக்காட்சியில் தொழிற்சாலைக்குள் மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.
சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை உணர்த்துகிறது.
காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும்.
இவ்வாறு காட்டுவதைக் குலஷோவ் விளைவு’ என்பர்.

3. நல்ல திரைப்படம் என்பது எது – விளக்குக.
Answer:
முறையான காட்சிமொழியுடன் நல்ல கலையாக உருவாக்கும் படத்தில் பொய்களும் இருக்க முடியாது.
நம் மூளையை மழுங்கச் செய்யும் கவர்ச்சிகளும் இடம் பெறாது.
இப்படைப்புகள் உண்மையைப் பேசும்.
அதன் மூலம் காண்பிக்கப்படும் வாழ்வியல், நம் அனுபவத்தை மேம்படுத்தி வாழ்க்கையை வளமாக்கும்.

4. சாமிக்கண்ணு வின்சென்ட் சினிமாத் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினைக் கூறுக.
Answer:
பிரெஞ்சுக்காரர் டுபான் அவர்களிடம் 2500 ரூபாய்க்கு புரொஜக்டரையும், சில துண்டு படங்களையும் வாங்கினார்.
திருச்சி, திருவனந்தபுரம், மதுரை, மதராசு போன்ற இடங்களில் முகாமிட்டுப் படம் காட்டினார்.
பிறகு லாகூர், பெஷாவர், லக்னோ போன்றப் பகுதியில் படம் காட்டினார்.
1909இல் மதராஸ் திரும்பி அங்கே எஸ்பிளனேட்டில் கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார். புரொஜக்டர்கள் இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார்.

நெடுவினா

1. திரைப்படத் துறையில் சார்லி சாப்ளினின் பங்கினை விளக்குக.
Answer:
இளமை :
இலண்டனில் பிறந்த சாப்ளின் வறுமையின் மடியில் வளர்ந்தவர்.
இவரது தாய் வறுமையை மறக்கடிக்கத் கதைகள் சொல்வார்.
அதன் மூலம் கலைஞனாக செதுக்கப்பட்டார்.
மேடையில் பாடிய அம்மாவின் குரல் கெட்டுவிட இவரே மேடையில் ஆடிப்பாடி அசத்தினார்.
நடிகராகி குடும்பத்தைக் காக்கக் கனவு கண்ட அவர் அமெரிக்கா சென்று திரை வாய்ப்பைப் பெற்றார்.

தோற்றம் :
தொள தொள கால் சட்டை, இறுக்கமான கோட்டு, துண்டு மீசை, புதுவிதமான சேட்டை கொண்டவர்.
‘லிட்டில் டிராம்ப்’ என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது.
புகழ் :
அவர் ஊதியம் போல் புகழும் உயர்ந்தது.
வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார்.
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனத்தைக் தொடங்கி வளர்ச்சி கண்டார்.
‘தி கோல்டு ரஷ்’, ‘தி சர்க்கஸ்’ போன்ற காவியங்கள் உருவாகின.
வெற்றிப்பயணம் :
மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் அடித்து நொறுக்கினார்.
பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ் பெற்ற அவர் பேசும் படங்களில் தோற்பார் என்று எதிர்பார்த்தனர்.
எதிர்பார்ப்புகளை முறியடித்து சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தின் வாயிலாக எதிரிகளின் வாய்களை அடைத்தார்.
‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படத்தின் மூலம் உலகின் தொழில்மய கேடுகளை விமர்சனம் செய்தார்.
பொதுவுடைடையாளர் என்ற முத்திரை விழுந்தது பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது, இருந்தாலும் வெற்றி பெற்றார்.
1940இல் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படம், மனித குலத்திற்குத் தேவை போர் அல்ல; நல்லுணர்வும் அன்பும்தான் என்று உணர்த்தியது.
இப்படம் சாதனைப் படமாக மட்டுமல்லாமல் ஹிட்லரை விமர்சித்து உருவான முதல் படமாகவும் விளங்கியது.
1952இல் அவரை நாடு கடத்தியதாக அறிவித்தது. பிறகு சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார்.
தன் தவறை உணர்ந்து மீண்டும் சாப்ளினை அழைத்தது. அவரும் அமெரிக்கா வந்தார்.
வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இன்றும் உலகின் பல பகுதிகளில் சாப்ளினின் டிராம் உருவம் குறியீடாக இடம் பெற்றிருப்பது அவரது உழைப்பும் வெற்றியுமே அடையாளம் ஆகும்.

2. சார்லி சாப்ளியின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ கதையைச் சுருக்கி வரைக.
Answer:
1940இல் சாப்ளினுக்கு நல்ல வசனப்படங்கள் எடுக்கத் தெரியாது என்ற காலக்கட்டத்தில் விமர்சர்களின் கூற்றைப் பொய்யாக்கி வெற்றிக் கண்ட படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.
இப்படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தும் யூதர் இனத்தவராக அறிமுகம் செய்தார்.
சர்வாதிகாரி ஹென்கோல் யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
யூதரான கடைக்காரரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்து ஷென்கோலின் உடையை திருடி அணிந்து கொள்கிறார்.
தப்பித்த கைதியைத் தேடிய காவலர்கள் வழியில் வரும் ஹென்கோல் உடையணிந்த : கடைக்காரருக்கு மரியாதை செய்தனர்.
சாதாரண உடையில் வந்த ஹென்கோலை சிறையில் அடைக்கின்றனர்.
ஒரே நாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது.
கடுமையான அரசியல் விமர்சனங்கள்.
இறுதியாக, சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்ய ஆணையிடுகிறார்.
மாநாட்டில் மனிதகுல பேருரை ஆற்றுகிறார்.
இப்பேருரைதான் இன்று வரை சிறந்த வசனமாகப் பேசப்படுகிறது.
தாம் வாழும் காலத்தில் ஹிட்லரைக் கடுமையாக விமர்சித்த ஒரே படம் என்ற பெருமையும் உண்டு.
இரட்டை வேடங்கள் எத்தனைவந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

கருத்துரையிடுக

0 கருத்துகள்