Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th Tamil UNIT 6 Question and Answer சிலப்பதிகாரம்

12th Tamil
UNIT 6 Question and Answer 
6.3 சிலப்பதிகாரம்

12th Tamil Question and Answer Unit 6 சிலப்பதிகாரம்


12th Tamil Solutions Chapter 6.3 சிலப்பதிகாரம்

12TH TAMIL UNIT 6 QUESTION AND ANSWERS | 12TH TAMIL UNIT 5 QUESTION  AND ANSWERS  | 12th Tamil Unit 4 Book back Question And Answer | 2th Tamil Unit 3 Book Back Question and Answer | 12th Tamil Unit 2 Book back Question and answer | 12th tamil guide, 12th tamil - unit 1 question paper, 12th tamil unit 1 book back answers, 12th tamil book back answers, 12th tamil one mark questions and answers, konar tamil guide 12th pdf free download 2020, 12th tamil don guide free download, 12th tamil - unit test question paper, 12th tamil book back answers samacheer kalvi, 12th tamil book back answers pdf download,12th tamil book back answers kalvi imayam, 12th tamil book back answers guide, toppers education,  12th tamil book back answers 2020, kalvi sri, 12th tamil book back questions with answers 2020, trend     tamizha, 12th tamil book back questions with answers pdf, 12th tamil guide. 12th Tamil Question and answers TET, TNPSC, TRB, PGTRB, SI, etc.....

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக


1. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………….. தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
அ) 1-சரி, 2-தவறு
ஆ) 1-தவறு, 2-சரி
இ) 1-தவறு, 2-தவறு
ஈ) 1-சரி, 2-சரி
Answer:
ஈ) 1-சரி, 2-சரி

2. பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா – 2. மூங்கில்
இ) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை – 4. எடை அளவு
அ) 3, 1, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

1. ஒருமுக எழினி, பொருமுக எழினி குறிப்பு எழுதுக.
Answer:
ஒருமுக எழினி:
நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு ரூ’ முகத்திரை

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

பொருமுக எழினி:
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

சிறுவினா

1. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தைக் கூறுக.
Answer:
சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :
“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் :
பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.

ஆடல் அரங்கம் அமைத்தல் :
“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”
நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல் :
கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

இலக்கணக் குறிப்பு

தொல்நெறி – பண்புத்தொகை
ஆடலும் பாடலும் – எண்ணும்மை
வருகிறோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
நின்று – வினையெச்சம்
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் – எண்ணும்மை
புரிகுழல், சூழ்சுழல் – வினைத்தொகைகள்
வழாஅ – செய்யுளிசை அளபெடை
நூல்நெறி, தூண் நிழல் – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
வெண்குடை – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்


12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

புணர்ச்சி விதி

1. தலைக்கோல் = தலை + கோல்
Answer:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி தலைக்கோல் என்று புணர்ந்த து.

2. மண்ண கம் = மண் + அகம்
Answer:
தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி, மண் + ண் + அகம் என்றானது.
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ண் + அ = ண) மண்ணகம் என்று புணர்ந்தது.

3. கண்ணிடை = கண் + இடை
Answer:
தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி, கண்ண் + இடை என்றானது.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ண் + இ = ணி) கண்ணிடை என்று புணர்ந்தது.

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

4. வெண்குடை – வெண்மை + குடை
Answer:
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு, வெண் + குடை – வெண்குடை என்று புணர்ந்தது.

5. தொல்நெறி – தொன்மை + நெறி
Answer:
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு, தொன் + நெறி என்றானது.
முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, தொல்நெறி என்று புணர்ந்து.

6. தலைக்கோல் – தலை + கோல்
Answer:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி, தலைக்கோல் என்று புணர்ந்தது.

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

கற்பவை கற்றபின்

1. பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா, பட்டிமன்றம், தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கான அரங்கம், அரசு விழாக்களுக்கான மேடை போன்றவற்றின் அரங்க அமைப்பு, ஒலி, ஒளி அமைப்பு, திரை அலங்காரம் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
பங்கு பெறுவோர் : நேசன், வாசன், ராசன்

நேசன் : நான் நேற்று எனது பள்ளியின் ஆண்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட மேடை பற்றிக் கூறுகிறேன். தரையிலிருந்து பத்து அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. மேடையானது இருபது அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. இருபுறத்திலிருந்து வருமாறும், மேலே ஏறுமாறும் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேடையின் பின்பக்கமும் மற்ற இரண்டு பக்கங்களும் ஒரு தெருவுக்குள் நடந்து செல்வது போன்ற ஒரு (தெருக்களின்) ஓவியம் வரையப்பட்டிருந்தது. மேடையின் மேல்பக்கத்தில் வட்ட வடிவிலான ஓவியம் இருந்தது. மேடையின் முன்பக்க ஓரத்தில் இரண்டு ஒலி வாங்கிகள், மேடையின் முன் பக்கத்தில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சும் சுழல் விளக்குகள், மேடையை ஒட்டி, இரு பெரும் ஒலி பெருக்கிகள் என அற்புதமாக மேடை
அமைக்கப்பட்டிருந்தது.

வாசன் : இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் ஊர்த்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பரதநாட்டிய மேடை அமைத்திருந்தார்கள். நான்கு அடி உயரத்தில் ஒரு மேடை. முன் பக்கம் தவிர மற்ற மூன்று பக்கங்களும் ஓவியம் தீட்டப்பட்ட துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. மேலும் வண்ண விளக்குகளால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் இருபுறமும் நட்டு வாங்கும், வாய்பாட்டு, மிருதங்கம், மோர்சிங், வீணை வாசிப்பவர்களுக்கு
எனக் கலைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தன.

ராசன் : எங்கள் ஊரில் பட்டிமன்ற நிகழ்வைப் பார்க்க நேற்று சென்றிருந்தேன். மிக உயரமான மேடை, கீழே தரை விரிப்பு, மேடையின் பின்பக்கம் அடைப்பில் நடுவர் மற்றும் பேச்சாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மேடையின் இருபக்கங்களிலும் ஆயத்த ஒலிவாங்கி மேடைகள், கண்ணைப் பறிக்கும் ஒளி விளக்குகள், நடுவர் அமர்வதற்கு மிகப் பெரிய அமர்வு இருக்கை என்று பார்க்க அழகாக இருந்தது.

நேசன் : ஆமாம் நண்பர்களே! முற்காலங்கள் போல் இல்லாமல் இன்று மேடைகள் அலங்காரமாகவும், விளக்கின் ஒளியில் பகல் போலவும், மேடையில் கண்ணைக் கவரும் சில ஓவியங்களும் தெளிவாக ஒலி வாங்கியினின்று வெளிவிடும் ஒலிப்பெருக்குப் பெட்டிகள் என இதைப் பற்றிய ஒரு பார்வை நம்மை வியக்க வைக்கிறது. அதுமட்டுமா, இத்தனையையும் அமைக்க அந்தத் துறையில் தேர்ச்சிபெற்றகைவினைக்கலைஞர்கள், இவர்களின் ஒத்துழைப்பாலேயே இத்தகைய மேடைகள் கண்ணைக் கவருகின்றன. தெருக்கூத்தாக இருந்த மேடை இன்று திரைப்படத்தை நேரில் பார்க்கும் உளப்பாங்கினை உண்டாக்கும் அளவிற்கு மேடையில் வடிவமைக்கப்படுகின்றன.

12th Tamil Guide UNIT 6 சிலப்பதிகாரம் KALVI SRI

“ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் என்பானாம்” இந்தப் பழமொழி பொய்த்துவிட்டது இந்த நாளில்.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்
அ) புகார்
ஆ) வஞ்சி
இ) மதுரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புகார்

2. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
அ) நீலகேசி, குண்டலகேசி
ஆ) உதயணகுமாரகாவியம், நாககுமார காவியம்
இ) சிந்தாமணி, சூளாமணி
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை
Answer:
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை

3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) நக்கீரர்
Answer:
அ) இளங்கோவடிகள்

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

4. ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று குறிப்பிடுபவர்
அ) திரு.வி.க.
ஆ) பாரதி
இ) பாரதிதாசன்
ஈ) ம.பொ.சி.
Answer:
ஆ) பாரதி

5. இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதைக் குறிப்பிட்டிருக்கும் காதை
அ) மங்கலவாழ்த்து
ஆ) அரங்கேற்றுகாதை
இ) வரந்தருகாதை
ஈ) ஊர்சூழ்வரி
Answer:
இ) வரந்தருகாதை

6. பொருத்திக் காட்டுக.
அ) கழை – 1. பந்தல்
ஆ) விதானம் – 2. புதுமை
இ) நித்திலம் – 3. மூங்கில்
ஈ) விருந்து – 4. முத்து

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 1, 4, 2

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

7. பொருத்திக் காட்டுக.
அ) நாவலம்பொலம் – 1. இசைக்கருவிகள் வாசிப்போர்
ஆ) அரசு உவா – 2. நாடகக் கணிகையர் பெறும்பட்டம்
இ) குயிலுவமாக்கள் – 3. பட்டத்து யானை
ஈ) தலைக்கோல் – 4. சாம்பூந்தம் என்னும் உயர்ந்த வகைப் பொன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

8. பொருத்திக் காட்டுக.
அ) புரிகுழல் – 1. ஒரு வகை எடை அளவு
ஆ) பல்இயம் – 2. இடக்கை வாத்தியம்
இ) வாரம் – 3. தெய்வப்பாடல்
ஈ) ஆமந்திரிகை – 4. இன்னிசைக்கருவி
உ) கழஞ்சு – 5. சுருண்ட கூந்தல்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 1, 2
இ) 3, 1, 2, 4, 5
ஈ) 5, 4, 2, 3, 1
Answer:
அ) 5, 4, 3, 2, 1

9. மாதவி ஆடற்கலையைப் பயின்ற ஆண்டுகள்
அ) 5
ஆ) 7
இ) 12
ஈ) 15
Answer:
ஆ) 7

10. ஆடல் கற்பதற்கான சடங்குகளை மாதவி செய்தபோது வயது
அ) 5
ஆ) 7
இ) 9
ஈ) 12
Answer:
அ) 5

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

11. மாதவி தனது ஆடலை அரங்கேற்ற விரும்பிய வயதுஅ) 7
ஆ) 9
இ) 12
ஈ) 15
Answer:
இ) 12

12. மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் நிரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஒரு முகத்திரை

13. மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பொருமுகத்திரை

14. மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) கரந்துவரல் திரை

15. அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்கு அளிக்கப்படுவது
அ) தலைக்கோல்
ஆ) செங்கோல்
இ) வைரமணி
ஈ) அரசாட்சி
Answer:
அ) தலைக்கோல்

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

16. இந்திரனின் மகன்
அ) சனகன்
ஆ) சயந்தன்
இ) அபினந்தன்
ஈ) மாயன்
Answer:
ஆ) சயந்தன்

17. மன்னனிடமிருந்து மாதவி பெற்ற பரிசு
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
ஆ) நூற்றெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
இ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சு வைரமாலை
ஈ) நூற்றெட்டுக் கழஞ்சு வைரமாலை
Answer:
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை

18. பொருத்திக் காட்டுக.
அ) பேரியாழ் – 1) 7 நரம்புகளைக் கொண்டது
ஆ) மகரயாழ் – 2) 16 நரம்புகளைக் கொண்டது
இ) சகோடயாழ் – 3) 17 நரம்புகளைக் கொண்டது
ஈ) செங்கோட்டியாழ் – 4) 21 நரம்புகளைக் கொண்டது.

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

19. தொல்நெறி, ஆடலும் பாடலும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) வினைத்தொகை, எண்ணும்மை
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை
இ) பெயரெச்சம், முற்றும்மை
ஈ) உவமைத்தொகை, உம்மைத்தொகை
Answer:
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை

20. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்னும் விதிக்குரிய சொல்
அ) பொற்குடம்
ஆ) தலைக்கோல்
இ) பேரியாழ்
ஈ) பூங்கோதை
Answer:
ஆ) தலைக்கோல்

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

குறுவினா

1. தலைக்கோல் பட்டம் பெற்றவள் யார்? ஏன்?
Answer:
தலைக்கோல் பட்டம் பெற்றவள் மாதவி.
தன் ஆடல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்ததன் காரணமாகச் சிறப்பிக்கப்பட்டது.

2. சிலப்பதிகாரம் – ஓர் புரட்சி காப்பியம் எங்ஙனம் விளக்குக.
Answer:
முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் புரட்சிக் காப்பியம் எனப்படுகிறது.

3. இரட்டைக்காப்பியங்கள் யாவை? காரணம் கூறுக.
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியும், மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியம் எனப்படும்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

4. பாரதியார் இளங்கோவையும், சிலம்பையும் எங்ஙனம் புகழ்கிறார்?
Answer:
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.

5. இளங்கோவடிகள் எங்கு தன்னை அறிமுகம் செய்கிறார்?
Answer:
வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றி தான் செங்குட்டுவன் தம்பி என்று தன்னை அறிமுகம் செய்கிறார்.

6. மாதவியின் நாட்டியப் பயிற்சி பற்றி விளக்குக.
Answer:
மாதவி, அழகிய தோள்களை உடையவள்.
தேனும் தாதுவும் நிறைந்த பூக்கள் அணிந்த கூந்தலை உடையவள்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் கற்றவர்கள்.
ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைப் பயின்றவள்.
பன்னிரெண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.

7. மங்கல வாழ்த்துப் பாடலில் இசைக்கருவிகள் ஒலித்த முறைகளை விளக்குக.
Answer:
குழலின் வழியே யாழிசை நின்றது.
யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தலம் ஒலித்தது.
தண்ணுமையோடு இயைந்து முடிவு ஒலித்தது.
முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது.

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

8. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்.
Answer:
குடிமக்கள் காப்பியம்
இரட்டைக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
பொதுமைக் காப்பியம்
புரட்சிக் காப்பியம்
வரலாற்றுக் காப்பியம்
முத்தமிழ் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
நாடகக் காப்பியம்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

9. மாதவி மன்னனிடம் பரிசு பெற்றமையை விவரி.
Answer:
  1. பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி நடனமாடியது போல் மாதவி அரங்கில் நூலில் சொல்லப்பட்ட சரியாகக் கடைப்பிடித்து அழகுற ஆடினாள். கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து வழுவாது ஆடினாள்.
  2. அந்த ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னன் ‘தலைக்கோலி’ என்னும் பட்டம் அளித்தான்.
  3. மேலும் அரங்கேற்றம் செய்யும் நாடகக்கணிகைக்கு ‘பரிசு இவ்வளவு’ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை அணிவித்தான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

10. யாழின் வகைகள் யாவை?
Answer:
21 நரம்புகளைக் கொண்ட பேரியாழ்.
17 நரம்புகளைக் கொண்ட மகரயாழ்.
16 நரம்புகளைக் கொண்ட சகோடயாழ்.
7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டியாழ்.

11. குடிமக்கள் காப்பியம் பெயர்க்காரணம் தருக.
Answer:
அரசக்குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப் பெயர் பெற்றது.

12. ‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு’ – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம். அரங்கேற்ற காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்.

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

விளக்கம் :
பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி போல் மாதவி நடனமாடியது கண்டு அகமகிழ்ந்த மன்னன் ‘தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை பரிசாகவும் அளித்தான்.

சிறுவினா

1. நாட்டிய அறங்கின் அமைப்பை விளக்குக.
Answer:
ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரம் உடைய நாட்டிய அரங்கம் அமைத்தனர்.
அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கு இடையே இடைவெளி நான்கு கோல் அளவு வைத்தனர்.
அரங்கு உள்ளே, வெளியே செல்ல ஏற்ற அளவுடன் இருவாயில்கள் அமைத்தனர்.
மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர்.
தூணில் நிழல் விளக்குகளை நிறுத்தினர்.
ஒரு முகத்திரை, பொருமுகத்திரை, கரந்துவரல் திரை மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர்.
விதானம், முத்துமாலை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.
இத்தகைய வேலைப்பாடுகளுடன் நாட்டிய அரங்கம் அமைத்தனர்.

2. தலைக்கோல் அறிவை – விளக்குக.
Answer:
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மங்கைக்கு அளிக்கும் பட்டம்.
  1. இத்தலைக்கோல் புகழ் கொண்ட மன்னனுடன் போரிட்டு அவனிடமிருந்து பறிக்கப்பட்ட வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.
  2. காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகள் இருக்கும். அக்கணுக்களுக்கு சாம்பூந்தம் எனும் பொன்தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக் கோலாக்குவது.
  3. மன்னனின் அரண்மனையில் வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து வழிபடுவர்.
  4. தலைக்கோலை புண்ணிய நதி நீரைப் பொற்குடங்களில் கொண்டு வந்து நீராட்டுவர்.
  5. மாலைகள் அணிவித்து, முரசு முழங்க, வாத்தியங்கள் ஒலிக்க ஐம்பெருங்குழு, அரசர் சூழ்ந்துவர, பட்டத்து யானை தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.
  6. அனைவரும் ஊர்வலமாக வந்தபின் கவிஞன் தலைக்கோலை ஆடல் அரங்கில் வைப்பார்கள்.
12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

3. மாதவியின் நாட்டியத்தை மங்கல வாழ்த்துப் பாடலால் அறியலாகும் செய்தி யாது?
Answer:
அரசன் முதலானோர் தத்தம் தகுதிக்கு ஏற்ப இருக்கையில் அமர்ந்தனர்.
இசைக்கருவிகளை வாசிப்போர் நிற்க வேண்டிய முறைப்படி நின்றனர்.
நாடகக் கனிகையாகிய மாதவி வலக்காலை முன் வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்துடன் அருகே நின்றாள்.
ஆடலில் தேர்ச்சி பெற்ற தோரிய மகளிர் ஒருமுக எழினிக்கு இடப்பக்கத் தூணின் அருகே நின்றனர்.
நன்மை, பெருகவும், தீமை நீல்கவும் வேண்டி
‘ஓரொற்றுவாரம்’, ஈரொற்றுவாரம்’ என்னும் தெய்வப்பாடலை முறையாகப் பாடினர்.
இசைக்கருவிகள் அனைத்தும் கூட்டாக இசைத்தன.

4. ‘ஆடலும் பாடலும் அழகும் என்று கிக்
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்
ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி’ – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக் காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மாதவியின் நாட்டியப் பயிற்சி.

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் | KALVI SRI

விளக்கம் :
அழகிய தோள்களை உடைய மாதவி, தேனும், தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். அவள் ஆடல், பாடல், அழகு இம்மூன்றில் என்றும் குறைபடாமல் ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைக் கற்று, தன் பன்னிரண்டு வயதில் அரங்கேற்றினாள்.

5. சிலப்பதிகாரம் குறிப்பு வரைக.
Answer:
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.
கண்ணகியின் கால் சிலம்பால் உருவான கதை.
மூன்று காண்டங்கள் முப்பது காதைகள் கொண்டது. அவை முறையே: புகார் காண்டம் – 10; மதுரைக் காண்டம் – 13; வஞ்சிக் காண்டம் – 7 என மொத்தம் – 30
வேறு பெயர்கள் : முத்தமிழ்க் காப்பியம் , இரட்டைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.

உண்மைகள் : அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்