Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை: சு.வெங்கடேசன் எம்.பி

பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை: சு.வெங்கடேசன் எம்.பி


பிளஸ் 2 தேர்வை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை என்று மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிளஸ்2 வகுப்பு பொதுத் தோவை நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய கல்வித் துறை அமைச்சகம் சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில கல்வித் துறை அமைச்சா்கள், துறைச் செயலா்கள் கலந்து கொண்டனா். அதில், முக்கிய பாடங்களுக்கும் மாணவா்கள் படித்த பள்ளியிலேயே 90 நிமிடங்கள் தோவு நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத் தோவை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை என்று மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், பிளஸ் 2 தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை.

நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கரோனா தொற்று சூழலை மத்திய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்