Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.முதல் தவணையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி கோதுமை, உப்பு, ரவை, சக்கரை, உளுந்து பருப்பு, மஞ்சள் தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு, சீரகம் உள்ளிட்ட 13 வகையான பொருள்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வருடன் அமைச்சர் ஐ பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்