IRCON நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு
இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Geologist மற்றும் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 12.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IRCON வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Geologist மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தமாக 226 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் Graduation in Engineering / Technology in Electronics Engg / Electrical & Electronics Engg / Electronics & Communication Engg / Electronics & Instrumentation Engg / Diploma in Civil Engineering / M.Sc, M.Tech in Geology / Engineering in Geology என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Sr. Works Engineer / Civil, Sr. Works Engineer / S&T பணிக்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Works Engineer / Civil, Site Supervisor / Civil, Works Engineer / Electrical / Works Engineer / S&T, Geologist பணிக்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCON விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் உடனே விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.




0 கருத்துகள்