Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th tamil letter writing

10th Tamil letter writing

 10 TH STD 5 MARK QUESTION &ANSWERS -பத்தாம் வகுப்பு -5 மதிப்பெண் வினாக்கள் - கடிதம் எழுதுதல் -வாழ்த்து மடல் ,உணவு தரமற்றதால் ஆணையருக்குக் கடிதம் 


        வாழ்த்து மடல் எழுதுக .

1. மாநில அளவில் நடைபெற்ற"  மரம் இயற்கையின் வரம்" எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக .


இயல் -2       ப.எண் : 48

                     வாழ்த்து மடல்

                                                                                                 சேலம் ,

                                                                                                    24.03.2020 .

    


அன்புள்ள தோழி ,

           நான் நலமாக  உள்ளேன் . நீ நலமா ? மற்றும்  உன் குடும்பத்தினரின்  நலமும்  அறிய ஆசை .

                              மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் " மரம் இயற்கையின் வரம் "   எனும் தலைப்பில்  கட்டுரை  எழுதி,  முதல் பரிசு பெற்றிருந்தாய் . இச்செய்தியை நாளிதழில் புகைப்படத்துடன் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டேன் .

      பள்ளிகளில் நடைபெறும்  கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு  பல நல்ல கருத்துக்களை எழுதியிருப்பதை  வியந்து பாராட்டுகிறேன் .

                    இன்றளவில்  மரங்களின் பயன் ,  மரங்கள் வளர்த்தல்.   மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகள்   போன்ற கருத்துக்களைத் தெளிவாக எழுதி இருந்தாய் . மரங்களை அழித்துக் கொண்டே போனால்  சுவாசிப்பதற்கு காற்று  கிடைக்காது . காற்றை விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும்  என்ற செய்தியை எழுதியிருந்தாய் . இந்தக் கருத்து மிகவும்  சிந்திக்கவும் வரவேற்கத்தக்கதாகவும் அமையும் .

          மக்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தி 

" வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் ; மரங்களை அழிக்காதீர்கள் !" 

"மரம் வளர்ப்போம் ; மழை பெறுவோம் !"  என்று எழுதி இருந்ததைப் பாராட்டுகிறேன்.

       மேலும் மரக்கன்றுகள்  வளர்க்கும் விதம் குறித்து எழுதியிருந்தது  அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் .

      இதுபோல  நீ மேலும் பல கட்டுரைகள் எழுதி  பரிசுகள் பெற ,  மனதார வாழ்த்துகிறேன் .

                                 வாழ்த்துக்கள் .                                                                                  

                                                                                இப்படிக்கு,

                                                                                உன்  தோழி,

                                                                                 ச .ப்ரீத்.                                                                 உறை மேல் முகவரி

பெறுநர் ,

பெ. கீதா,

அண்ணா சாலை ,

திருநகர் ,

சென்னை .


-----------------------------------------------------------------------------------------

2. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்  விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக .

இயல் -3                             ப.எண் : 68

 

                          கடிதம்


அனுப்புநர்

                  சி. கவின் ,

                  12, சுவாமி சாலை,

                  அண்ணா நகர் ,

                  சேலம் .


பெறுநர்

               உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் ,

               உணவு பாதுகாப்பு ஆணையம் ,

               சென்னை .

ஐயா ,

             பொருள் :  உணவு தரமற்றதாக இருந்தது குறித்து நடவடிக்கை                                                         கோருதல் - சார்பாக .

                              வணக்கம் .  நான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ,   உணவு உண்பதற்காக என் வீட்டிற்கு அருகில் உள்ள செல்வி உணவு  விடுதிக்குச் சென்றிருந்தேன் . அங்கே பலகையில்   மட்டன் பிரியாணி ரூ.120  என  எழுதியிருந்தது.  நானும் பிரியாணியைச் சாப்பிட்டேன் . பின்  காசாளரிடம் அதற்கானத் தொகையினைச்  செலுத்தும் போது ரூ.150  செலுத்தும்படி கூறினார்.  அதிகமாக ஏன் பணம் கேட்கிறீர்கள் ? என்று நான் கேட்டதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து ரூ.150  பெற்றுக்கொண்டார் . 

          நான் வீட்டிற்கு வந்து ,சில மணி நேரங்களிலேயே  வாந்தி, பேதி  ஏற்பட்டு  உடல் நலமின்றி  மருத்துவமனைக்குச்  சென்று  சிகிச்சைப் பெற்றேன்.  மன உளைச்சலுக்கு ஆளானேன் .

       எனவே உணவு  தரம் அற்றதாகவும் , விலை கூடுதலாக பெற்றதாலும் அந்த உணவு விடுதியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

                                                 நன்றி !


சேலம்                                                         இப்படிக்கு ,

24.03.2020                                                      தங்கள் உண்மையுள்ள,

                                                                       சி .  கவின்


உறை மேல் முகவரி

பெறுநர்

     உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் ,

     உணவு பாதுகாப்பு ஆணையம் ,

     சென்னை .


கருத்துரையிடுக

0 கருத்துகள்