சைனிக் பள்ளிகளில் சேர இன்றே கடைசி நாள் - விண்ணப்பிக்க
நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 33 சைனிக்
பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை
(என்டிஏ) நடத்தும்.
இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜன.10-ம் தேதி
நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும்
மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தேர்வு பிப்.7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
விண்ணப்பிப்பதற்கானடிச.18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே, இந்தத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்
https://aissee.nta.nic.in/ என்ற
இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள நாளை கடைசித் தேதி ஆகும்.
மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை
www.nta.ac.in என்ற இணையதளத்தில்
அறிந்துகொள்ளலாம்.





0 கருத்துகள்